4 நாள் கனமழை

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 00:06

சென்னை:தமி­ழ­கத்­தின் வட­ப­கு­தி­க­ளில் கோடை­வெ­யில் கொளுத்­தி­னா­லும், தெற்கு மற்­றும் உள் மாவட்­டங்­க­ளில் கடந்த சில நாட்­க­ளாக பர­வ­லாக மழை பெய்து வரு­கி­றது. குறிப்­பாக, தென் மாவட்­டங்­க­ளான கன்­னி­யா­கு­மரி, திரு­நெல்­வேலி, நாகர்­கோ­வில் ஆகிய மாவட்­டங்­க­ளில் பர­வ­லாக மழை பெய்து வரு­கி­றது. இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தின் அனேக இடங்­க­ளில் அடுத்த 4 நாட்­க­ளுக்கு கன­மழை பெய்ய சாத­க­மான வானிலை சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

இது­கு­றித்து இந்­திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளி­யிட்ட அறி­விப்பு :

தென்­கி­ழக்கு வங்­கக்­க­டல் மற்­றும் அதனை ஒட்­டி­யுள்ள இந்­திய பெருங்­க­டல் பகு­தி­யில், காற்­ற­ழுத்த தாழ்வு பகுதி உரு­வா­கி­யுள்­ளது. இதன் கார­ண­மாக, தமி­ழ­கத்­தின் அனேக இடங்­க­ளில் அடுத்த 4 நாட்­க­ளுக்கு இடி­யு­டன் கூடிய கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ளது. ஒரு சில இடங்­க­ளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்­தில் சூறைக்­காற்­று­டன், கன­மழை பெய்­யும்.

வட தமி­ழ­கத்­தில் வறண்ட வானி­லையே நீடிக்­கும்.

இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.