இன்ஜி., படிப்பு கவுன்சலிங் இன்று அறிவிப்பு வரலாம்

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 00:01

––நமது நிருபர்–இன்ஜினியரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கை, கடந்த பல ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த ஆண்டு முதல், இந்த கவுன்சலிங்கை உயர்கல்வித்துறையின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்த உள்ளது.

இந்நிலையில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் பழனிசாமியுடன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று ஆலோசனை நடத்தினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.  

இதுகுறித்து உயர்கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘இன்ஜி., கவுன்சலிங்கை எப்போது தொடங்கலாம்? ஆன்லைன் முறையில் நடத்துவதா? அல்லது பழைய முறைப்படி நேரடி கவுன்சலிங் நடத்துவதா? என்று விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு, சில முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இன்ஜி., கவுன்சலிங் அறிவிப்பு, நாளை (ஏப்.21–இன்று) காலை வெளியாக வாய்ப்பு இருக்கிறது’’ என்றனர்.