தெலுங்கானாவில் மகளிர் படு உற்சாகம்!

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019

தெலுங்­கானா மாநி­லத்­தில் உள்ள கரிம்­ந­க­ரில் தாய் மற்­றும் சேய் நல மையத்­தின் வெளியே விவ­சாய கூலி தொழி­லா­ளி­யான லசாவா அமர்ந்­துள்­ளார். அந்த தாய் மற்­றும் சேய் நல மையத்­தில் தான் வசாவா மக­ளுக்கு பிர­ச­வம் நடந்­துள்­ளது. பெண் குழந்தை பிறந்­துள்­ளது. லசா­வா­வி­டம் பச்சை நிறத்­தில் ஒரு பை உள்­ளது, அது­தான் கேசி­ஆர் பை. தெலுங்­கானா முத­ல­மைச்­சர் கே.சந்­தி­ர­சே­கர ராவ் பெயரை தாங்­கிய பை. இந்த பை தான் தெலுங்­கா­னா­வில் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் பிர­ச­வம் செய்து கொள்­வது அதி­க­ரித்­துள்­ள­தற்­கான அடை­யா­ளம். அந்த பையில் பிறந்த குழந்­தைக்கு தேவை­யான சோப்பு, எண்­ணெய், பவு­டர், கொசு­வலை, போர்வை ஆகி­யவை உள்­ளன. “நாங்­கள் குழந்­தைக்கு எது­வும் வாங்க தேவை­யில்லை.நாங்­கள் ஏழை­கள். இவை எங்­க­ளுக்கு பெரும் உத­வி­யாக இருக்­கின்­றன” என்று கூறு­கி­றார் லசாவா.

இந்த கேசி­ஆர் பையில் பிர­ச­வித்த பெண்­ணுக்­கும், பிறந்த குழந்­தைக்­கும் தேவை­யான 16 வகை பொரு­ட­கள் உள்­ளன. அத்­து­டன் பெண் குழந்தை பிறந்­தால் ரூ.13 ஆயி­ர­மும், ஆண் குழந்தை பிறந்­தால் ரூ.12 ஆயி­ர­மும் தெலுங்­கான அரசு வழங்­கு­கி­றது. இந்த பணம் கர்ப்­பி­ணி­யின் வங்கி கணக்­கில் நான்கு தவ­ணை­க­ளாக செலுத்­தப்­ப­டு­கி­றது. முதல் தவணை கர்ப்­பிணி முதல் தடவை உடல் பரி­சோ­தனை செய்து கொள்ள வரும் போது சேர்க்­கப்­ப­டு­கி­றது. கடைசி தவணை பிறந்த குழந்­தைக்கு இரண்­டா­வது தடுப்­பூசி போடும் போது வழங்­கப்­ப­டு­கி­றது. இந்த திட்­டத்­தில் தெலுங்­கானா மாநி­லத்­தைச் சேர்ந்த எல்லா கர்ப்­பி­ணி­க­ளி­லும் பலன் பெற­லாம்.

இந்த கேசி­ஆர் பை திட்­டம் 2007ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இது வரை நான்கு லட்­சம் கர்ப்­பி­ணி­கள் பலன் அடைந்­துள்­ள­னர். இந்த திட்­டத்­தால் அரசு மருத்­து­வ­ம­னை­கள், தாய் மற்­றும் சேய் நல மையங்­க­ளில் பிர­ச­வம் நடப்­பது அதி­க­ரித்­துள்­ளது.

2014–15ல் தேசிய குடும்ப நல கணக்­கெ­டுப்பு புள்ளி விப­ரம் வெளி­யி­டப்­பட்­டது. அதற்கு பிறகு தெலுங்­கா­னா­வில் பிர­ச­வத்­தின் போது ஏற்­ப­டும் மர­ணங்­களை தவிர்க்க உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. அந்த புள்ளி விப­ரத்­தில் நாட்­டி­லேயே மருத்­து­வ­ம­னை­க­ளில் பிர­ச­வம் நடை­பெ­று­வது தெலுங்­கா­னா­வில் அதி­க­மாக உள்­ளது,

இந்த மாநி­லத்­தில் 92 சத­வி­கித பிர­ச­வங்­கள் மருத்­து­வ­ம­னை­க­ளில் நடக்­கி­றது. ஆனால் 30 சத­வி­கித பிர­ச­வங்­கள் மட்­டுமே அரசு மருத்­து­வ­னை­க­ளில் நடை­பெ­று­கி­றது. மற்­றவை தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளில் நடை­பெ­று­கி­றது. நாட்­டி­லேயே அதிக அளவு சிசே­ரி­யன் பிர­ச­வங்­கள் தெலுங்­கா­னா­வில் நடை­பெ­று­கி­றது. தனி­யார் மருத்­து­ம­னை­க­ளில் ஆகும் பிர­ச­வங்­க­ளில் 74.5 சத­வி­கித பிர­ச­வ­கள் சிசே­ரி­யன் பிர­ச­வங்­க­ளாக உள்­ளன. அரசு மருத்­து­ம­னை­க­ளில் ஆகும் பிர­ச­வங்­க­ளில் 40.3 சத­வி­கி­தம் சிசே­ரி­யன் பிர­ச­வங்­க­ளாக உள்­ளன என கணக்­கெ­டுப்­பில் தெரி­ய­வந்­தது.

தெலுங்­கா­னா­வில் 2011–13ம் ஆண்­டு­க­ளில் 1 லட்­சம் பிர­ச­வத்­தில் தாய், சிசு உயிர் இழப்பு 92 ஆக இருந்­தது.  இது 2014–16ல் 81 ஆக குறைந்­துள்­ளது. அதே நேரத்­தில் பிர­ச­வத்­தின் போது தாய், சிசு உயிர் இழப்பு 1 லட்­சம் பிர­ச­வத்­திற்கு 70 ஆக இருக்க வேண்­டும் என ஐ.நா சபை­யின் வளர்ச்சி இலக்­கில் நிர்­ண­யித்­துள்­ள­னர்.

2017ல் தெலுங்­கானா பிர­ச­வத்­தின் போது தாய், சிசு மர­ணத்தை குறைக்­க­வும், சிசே­ரி­யன் பிர­ச­வத்தை குறைத்து சுகப்­பி­ர­சம் நடக்க பல்­வேறு சீர்­தி­ருத்­தங்­களை செய்ய தொடங்­கி­யது. இந்த சீர்­தி­ருத்­தங்­கள் செய்ய தொடங்­கிய பிறகு அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் பிர­ச­வம் செய்து கொள்­வது 30 சத­வி­கி­தத்­தில் இருந்து 50 சத­வி­கி­த­மாக அதி­க­ரித்து இருப்­ப­தாக தெலுங்­கானா அரசு கூறி­யுள்­ளது. அர­சின் புள்ளி விப­ரப்­படி 2018–19ல் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் 2 லட்­சத்து 22 ஆயி­ரத்து 588 பிர­சங்­கள் நடந்­துள்­ளன. தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளில் 1 லட்­சத்து 57 ஆயி­ரத்து 690 பிர­ச­வங்­கள் நடந்­துள்­ளன.

தனி­யார் மருத்­து­வ­னை­க­ளில் நடக்­கும் 70 சத­வித பிர­ச­வங்­க­ளால் ஏழை­க­ளுக்கு அதிக செலவு ஆகி­றது. இதை அரசு முறைப்­ப­டுத்­து­வ­து­டன், சிசே­ரி­யன் பிர­ச­வங்­களை முறைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என்று கருணா வகாதி தெரி­வித்­தார். இவர் 2016 அக்­டோ­பர் முதல் 2018 செப்­டம்­பர் வரை சுகா­தா­ரம் மற்­றும் குடும்­ப­நல ஆணை­யா­ள­ராக இருந்­த­வர். எனது முதல் குறிக்­கோள் பெண்­கள் சிகிச்சை பெற அரசு மருத்­து­வ­ம­னை­களை நோக்கி வர­வைப்­பதே என்று கூறிய கருணா வகாதி, தற்­போது நில நிர்­வாக ஆணை­ய­ராக உள்­ளார்.  

2017ல் கரிம்­ந­க­ரில் 150 படுக்கை வச­தி­யு­டன் தாய் மற்­றும் சேய் நல மையம் தொடங்­கப்­பட்­டது. இங்கு மாதத்­திற்கு 800 பிர­ச­வங்­கள் வரை நடை­பெ­று­கி­றது. மத்­திய அரசு 2016ல் பிர­ச­வம் நடை­பெ­றும் அறை­யின் தரம் பற்­றிய அறி­விப்பு வெளி­யிட்­டது. இந்த தர நிர்­ண­யிப்­படி கரிம்­ந­கர் தாய் மற்­றும் சேய் நல மையத்­தில் பிர­சவ அறை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. பிர­சவ மருத்­து­வ­ம­னை­க­ளின் அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­தும் திட்­டத்­தின் கீழ் கட்­டப்­பட்­டது.

இது பற்றி டாக்­டர். ராதா ரெட்டி கூறு­கை­யில், எங்­கள் மருத்­துவ மனை­க­ளில் பிர­சவ அறை­கள் படு மோச­மாக இருந்­தன. மத்­திய அர­சின் தர நிர்­ண­யப்­படி இல்லை என்று தெரி­வித்­தார். இவர் யுனி­செப் திட்ட ஆலோ­ச­க­ராக இருந்­துள்­ளார். தற்­போது மத்­திய அர­சின் தர நிர்­ண­யப்­படி மாநி­லம் முழு­வ­தும் பல்­வேறு மருத்­து­வ­ம­னை­க­ளில் 300 பிர­சவ அறை­கள் தரம் உயர்த்­தப்­பட்­டன.

2017ல் தெலுங்­கானா அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் கர்ப்­பி­ணி­க­ளை­யும், பிறந்த சிசுக்­க­ளை­யும் பரா­ம­ரிக்­கும் சிறப்பு பயிற்சி பெற்ற நர்ஸ் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ஹைத­ர­பாத்­தில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யான பெர்­னான்­டாஸ் மருத்­து­வ­ம­னை­யு­டன் இணைந்து நர்ஸ்­க­ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­கென 30 நர்ஸ்­களை தேர்ந்­தெ­டுத்து 18 மாதம் சிறப்பு பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. கர்ப்ப காலத்­தில் கர்ப்­பி­ணி­களை பரா­ம­ரிப்­பது, பிறந்த சிசு பரா­ம­ரிப்பு, பிர­ச­வத்­தில் தாய், சேய் உயிர் இழப்பு தடுக்க பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு 30 நர்ஸ்­களை தேர்ந்­தெ­டுத்து பிரிவு, பிரி­வாக பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது.

சர்­வ­தேச நிறு­வ­னங்­கள் பல கால­மாக கர்ப்­பி­ணி­கள், பிறந்த சிசு பரா­ம­ரிப்­பிற்­காக நர்ஸ்­க­ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­வந்­தன. இந்­தியா சிறப்பு நர்ஸ்­க­ளுக்கு பயிற்சி அளிக்க தொடங்­கி­யுள்­ளது. இது­வரை இந்­தி­யா­வில் உதவி நர்ஸ்­கள் (தாதி­கள்), நர்ஸ் கவுன்­சி­லில் பதிவு பெற்ற நர்ஸ், பதிவு பெற்ற உதவி நர்ஸ்­கள் உள்­ள­னர். இவர்­கள் நர்ஸ் படிப்­பின் போது, பல்­வேறு பயிற்­சி­க­ளு­டன் சேர்த்து சில மாதங்­கள் மட்­டும் கர்ப்­பிணி, சிசு பரா­ம­ரிப்பு பயிற்சி பெறு­கின்­ற­னர். தெலுங்­கா­னா­வில் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கர்ப்­பிணி, சிசு பரா­ம­ரிப்பு சிறப்பு நர்ஸ் திட்­டம், இந்­தியா முழு­வ­தும் அமல்­ப­டுத்­தும் மாதிரி திட்­ட­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சென்ற வரு­டம் டிசம்­பர் மாதம் மத்­திய அரசு அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் கர்ப்­பிணி, சிசு பரா­ம­ரிப்பு சிறப்பு நர்ஸ் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இதற்­கென சிறப்பு நர்ஸ் பிரிவு உண்­டாக்­கப்­பட்­டது. இவர்­க­ளுக்கு சர்­வ­தேச சிறப்பு நர்ஸ் திறன் அடிப்­ப­டை­யில் பயிற்சி வழங்­கப்­ப­டு­கி­றது.

தெலுங்­கா­னா­வில் சிசே­ரி­யன் மூலம் அதிக அளவு பிர­ச­வம் நடக்­கும் கரிம்­ந­கர் மாவட்­டத்­தில் சிறப்பு நர்ஸ் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த மாவட்­டத்­தில் கடந்த 28 வரு­டங்­க­ளாக உதவி நர்ஸ் ஆக பணி­பு­ரி­யும் சந்­திரா லீலா கூறு­கை­யில், இந்த மாவட்­டத்­தில் பெரும்­பா­லான கர்ப்­பி­ணி­கள் சிசே­ரி­யன் மூலமே குழந்தை பெற்­றுக் கொண்­ட­னர் என்று தெரி­வித்­தார்.  ஆனால் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக லீலா சந்­திரா இயற்கை பிர­வ­சத்தை ஊக்­கு­விக்­கும் பணியை செய்து வரு­கி­றார்.

கரீம்­ந­க­ரில் அமைந்­துள்ள தாய் மற்­றும் சேய் நல மையத்­தைச் சேர்ந்த மக­ளிர் சிறப்பு மருத்­து­வர் டாக்­டர்.மஞ்­சுளா ஆனந்­த­லா­வுக்கு, சிறப்பு நரஸ் பயிற்சி அளிக்க தொடங்­கும் முன், இது பற்றி அதி­கம் தெரி­யாது. இது பற்றி அவர் கூறு­கை­யில், “டாக்­டர்­கள், நரஸ்­கள் பற்­றாக்­குறை இருந்த்து. இப்­போது சிறப்பு நர்ஸ் பயிற்சி பெற்­ற­வர்­கள் வந்­த­வு­டன் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. எங்­கள் வேலையை அவர்­கள் பகிர்ந்து கொள்­கின்­ற­னர். அத்­து­டன் கர்ப்­பி­ணி­க­ளுக்­கும், பிர­ச­வம் ஆண பெண்­கள், பிறந்த சிசுக்கு சிறப்­பாக கவ­னித்­துக் கொள்­கின்­ற­னர். டாக்­டர்­க­ளுக்கு நேர­மின்மை கார­ண­மாக கவ­னிக்க முடி­யா­மல் இருந்­தது” என்று தெரி­வித்­தார்.

சுக­பி­ர­ச­வத்தை ஊக்­கு­விப்­ப­து­டன், போதிய டாக்­டர்­கள் இல்­லாத கிரா­மப்­பு­றங்­க­ளி­லும், தொலை தூர இடங்­க­ளி­லும், உதவி நர்ஸ்­கள் தேவை­யான சிகிச்சை அளிக்க முடி­யும். “நமக்கு போதிய டாக்­டர்­கள் இல்லை என்­பது தெளி­வாக தெரி­கி­றது. எனவே அடுத்த முயற்­சி­யாக கிரா­மங்­க­ளி­லும், தொலை­தூர பகு­தி­க­ளி­லும் ஏற்­க­னவே உள்ள உதவி நர்ஸ் போன்­ற­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க தேவை­யான பயிற்சி அளிக்க வேண்­டும். இத­னால் அவர்­கள் பிர­ச­வம் பார்க்க முடி­யும். சிக்­க­லான பிர­ச­வத்தை மட்­டும் டாக்­டர்­க­ளி­டம் அனுப்­ப­லாம்” என்று கருணா வகாடி தெரி­வித்­தார்.

தெலுங்­கானா அரசு பழங்­குடி மக்­கள் வாழும் பகு­தி­யி­லும், தொலை­தூர பகு­தி­க­ளி­லும் கர்ப்­பிணி பெண்­களை ஆம்­பு­லன்ஸ் மூலம் பிர­ச­வத்­திற்கு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து வரு­வது, கர்ப்­ப­ணி­கள் பரி­சோ­தனை செய்ய மருத்­து­வ­ம­னைக்கு வர ஆம்­பு­லன்ஸ் வசதி, குழந்­தை­க­ளுக்கு தடுப்­பூசி போட மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து வரு­வது போன்­ற­வை­க­ளுக்­கும் இல­வச ஆம்­பு­லன்ஸ் சேவையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்­கென 24 மணி நேர­மும் இயங்­கும் கால் சென்­டர்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் ஒவ்­வொரு மருத்­து­வ­ம­னை­யி­லும் தாய் மற்­றும் சேய் நல மையத்­தி­லும் டாடா என்ட்ரி ஆப்­ரேட்­டர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் தக­வல்­களை கம்­யூட்­ட­ரில் பதி­வேற்­றம் செய்­கின்­ற­னர். இவை பல்­வேறு துறை­க­ளு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றை வைத்து ஆய்வு செய்ய முடி­யும். உதா­ர­ண­மாக எடை குறை­வான குழந்­தை­கள் எந்த பகு­தி­யில் அதி­க­மாக பிறக்­கின்­றன போன்ற தக­வலை பெற்று உரிய நட­வ­டிக்கை எடுக்க முடி­யும்.

தெலுங்­கானா அரசு கர்ப்­பி­ணி­கள், தாய்–­சேய் நலம், சுக பிர­ச­வம், சிசே­ரி­யன் பிர­ச­வத்தை குறைத்­தல் போன்ற பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. இது எல்லா தரப்பு மக்­க­ளி­ட­மும் சிறந்த வர­வேற்பை பெற்­றுள்­ளது.

(இந்த கட்­டுரை பில்­கேட், மிலன்டா பில்­கேட் அறக்­கட்­ட­ளை­யின் நிதி உத­வி­யு­ட­னும், ஐரோப்­பிய ஜெர்­ன­லி­சம் சென்­டர் உத­வி­யு­ட­னும் எழு­தப்­பட்­டது.)  

நன்றி ஸ்கோரல் டாட் இன்

இணை­ய­த­ளத்­தில் சுனயா குமார்.

போட்டோ: சௌமியா கன்­டல்­வால்.