சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு: செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் தானியங்கி கருவி

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019

பிர­ட­யாஸ் பன்­சா­லும், அகாஸ் சிங் குலா­டி­யும் விடு­மு­றைக்கு இந்­தி­யா­வில் உள்ள தாத்தா வீட்­டிற்கு சென்று விடு­வார்­கள். அறி­வி­ய­லில் ஆர்­வம் மிகுந்த இரு­வ­ரும் சிங்­கப்­பூ­ரில் உள்ள குளோ­பல் இந்­தி­யன் இன்­டர்­நே­ஷ­னல் ஸ்கூலில் 8ம் வகுப்பு படிக்­கின்­ற­னர். இரு­வ­ரும் விடு­முறை காலங்­க­ளில் வீட்டை விட்டு சில நாட்­கள் இந்­தி­யா­வில் உள்ள தாத்தா, பாட்டி வீட்­டிற்கு சென்­று­வி­டு­வார்­கள்.

ஒவ்­வொரு முறை­யும் விடு­மு­றையை கழித்து விட்டு சிங்­கப்­பூர் வீட்­டிற்கு வரும் போது வீட்­டில் தொட்­டி­க­ளில் வளர்க்­கும் செடி­கள் வாடியோ அல்­லது கரு­கும் தரு­வா­யிலோ இருக்­கும். இவ்­வாறு சில முறை நடை­பெற்ற பிறகு, இரு­வ­ரும் சேர்ந்து தின­சரி தண்­ணீர் ஊற்­று­வ­தற்கு ஆட்­கள் இல்­லாத போதும், செடி­க­ளுக்கு தேவை­யான தண்­ணீரை தானி­யங்கி முறை­யில் ஊற்­றும் கரு­வியை வடி­வ­மைத்து உரு­வாக்க திட்­ட­மிட்­ட­னர். இதே போல் செடி­க­ளுக்கு தானா­கவே தண்­ணீர் ஊற்­றும் கரு­வியை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

இது பற்றி பிர­ட­யாஸ், அகாஸ் கூறு­கை­யில், “நாங்­கள் இப்­போது தொட்­டி­யில் உள்ள செடி­க­ளுக்கு தானி­யங்கி முறை­யில் தண்­ணீர் ஊற்­றும் கரு­வியை உரு­வாக்­கி­யுள்­ளோம். இது 80 சத­வி­கி­தம் பயன்­ப­டுத்­திய பல்­வேறு பொருட்­களை மறு­சு­ழற்சி செய்­தும், மோட்­டார், சர்க்­கி­யூட் போர்ட் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­தி­யும் உரு­வாக்­கி­யுள்­ளோம்” என்று தெரி­வித்­தார்.

இவர்­கள் காற்­றில் உள்ள ஈரப்­ப­தத்தை கணக்­கி­டும் ஹைட்ரோ மீட்­டர், சர்க்­கி­யூட் போர்ட், மோட்­டார் போன்­ற­வை­களை கொண்டு தயா­ரித்­துள்­ள­னர். இந்த கருவி பற்றி அகாஸ் கூறு­கை­யில், “சர்க்­கி­யூட் போர்­டு­டன் இணைக்­கப்­பட்ட ஹைட்­ரோ­மீட்­டர் மண்­ணில் வைக்­கப்­ப­டும். மண்­ணில் ஈரப்­ப­தம் இல்லை என்­பதை உணர்ந்­த­வு­டன், சர்க்­கி­யூட் போர்­டுக்கு சமிக்ஞை அனுப்­பும். தண்­ணீர் தொட்­டி­யு­டன் இணைந்த மோட்­டா­ரு­டன் சர்க்­கி­யூட் போர்ட் இணைக்­கப்­பட்­டுள்­ளது. ஹைட்­ரோ­மீட்­ட­ரில் இருந்து சமிக்ஞை கிடைத்த உடன், சர்க்­கி­யூட் போர்ட் மோட்­டாரை இயக்க வைக்­கும். தண்­ணீர் டாங்­கில் உள்ள தண்­ணீர் மோட்­டார் மூலம் குழாய்­கள் மூலம் செடி­கள் உள்ள தொட்­டி­க­ளுக்கு பாயும். மண்­ணில் போது­மான ஈரப்­ப­தம் கிடைத்­த­வு­டன், ஹைட்­ரோ­மீட்­டர் மீண்­டும் சர்க்­கி­யூட் போர்­டுக்கு சமிக்ஞை அனுப்­பும். உடன் மோட்­டார் ஓடு­வது நிறுத்­தப்­ப­டும். தண்­ணீர் பாய்­வ­தும் நிற்­கும் என்று தெரி­வித்­தார்.

இந்த கருவி பயன்­ப­டுத்­திய பிளாஸ்­டிக் பால் பாட்­டில்­கள், ஸ்டிரா, மரப்­பெட்­டி­கள் போன்­ற­வை­களை பயன்­ப­டுத்தி தயா­ரித்­துள்­ள­னர். இதன் தயா­ரிப்பு செலவு 13 சிங்­கப்­பூர் டாலர்­கள் (ரூ.666). இவர்­கள் இரண்டு லிட்­டர் தண்­ணீர் பிடிக்­கும் டாங்­கு­டன் மோட்­டாரை இணைத்­துள்­ள­னர். அதில் இருந்து பைப் வழி­யாக செடி­கள் வளர்க்­கும் தொட்­டி­யு­டன் இணைத்­துள்­ள­னர். மண்­ணில் ஈரப்­ப­தம் குறைந்­த­வு­டன் ஹைட்ரோ மீட்­டர் வழி­யாக சர்க்­கி­யூட் போர்­டிற்கு சமிக்ஞை கிடைத்து மோட்­டார் இயங்கி பைப் வழி­யாக பானை­க­ளில் தண்­ணீர் நிரப்­பப்­ப­டு­கி­றது. இது செடி­கள் உள்ள பல தொட்­டி­க­ளு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ளது. தண்­ணீர் டாங்­கில் ஆட்­கள் தான் தண்­ணீரை நிரப்­ப­வேண்­டும்.

இவர்­கள் கண்­டு­பி­டித்­துள்ள கரு­வி­யின் தேவை பற்றி சர்வே எடுத்­துள்­ள­னர். நீங்­கள் வீட்­டில் இல்­லாத போது செடி­க­ளுக்கு தண்­ணீர் ஊற்­றும் கரு­விக்கு 13 டாலர் செலவு செய்து கரு­வியை நிறுவ விரும்­பு­கின்­றீர்­களா என்ற கேள்­வியை கேட்டு சர்வே நடத்­தி­யுள்­ள­னர். இந்த சர்­வே­யில் பங்­கேற்­ற­வர்­க­ளில் 90 சத­வி­கி­தம் பேர் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் இந்­திய மாண­வர்­கள் பிர­ட­யாஸ் பன்­சால், அகாஸ் சிங் குலாடி இரு­வ­ரும் சேர்ந்து வடி­வ­மைத்து தயா­ரித்­துள்ள தானி­யங்கி தண்­ணீர் பாய்ச்­சும் கரு­வியை பல கண்­காட்­சி­க­ளில் பங்­கேற்று காட்­சிக்கு வைத்­த­னர். சமீ­பத்­தில் காரக்­பூர் ஐ.ஐ.டியில் நடை­பெற்ற இளம் தலை­முறை கண்­டு­பி­டிப்பு கண்­காட்­சி­யி­லும் காட்­சிக்கு வைத்­த­னர்.

அப்­போது அகாஸ் கூறு­கை­யில், “நாங்­கள் வைபை­யு­டன் இணைந்த சர்க்­கி­யூட் போர்ட்டை ஜி.எஸ்.எம் முறை­யில் இணைக்க உள்­ளோம். இத­னால் செல் போனில் இதை இணைக்­க­லாம். ஆப் மூலம் செடி­க­ளில் தண்­ணீர் பாய்ச்­சு­வதை கண்­கா­ணிக்­க­லாம்.

இதை இப்­போது சிறிய அள­வில் தயா­ரித்­துள்­ளோம். இதை பெரிய அள­வில் வடி­வ­மைத்­தால் தோட்­டத்­தில் உள்ள செடி­க­ளுக்­கும் தண்­ணீர் பாய்ச்­ச­லாம். விவ­சா­யத்­தி­லும் பயன்­ப­டுத்­த­லாம்” என்று தெரி­வித்­தார்.

எதிர்­கா­லத்­தில் அகாஸ் சிங் குலாடி மருத்­து­வ­ராக விரும்­பு­கின்­றார். பிர­ட­யாஸ் பன்­சால் கம்­யூட்­டர் சயின்ஸ், கணக்­கில் ஆர்­வ­மாக உள்­ளார். இவர்­கள் தயா­ரித்­துள்ள கருவி தற்­போது வர்த்­தக நோக்­கத்­தில் விற்­பனை செய்­யப்­ப­ட­வில்லை.