சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முறை இந்திய வம்சாவளி மாணவர்கள் சாதனை

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019

அமெ­ரிக்­கா­வில் வாழும் நான்கு இந்­திய வம்­சா­வளி மாண­வி­கள் சுற்­றுச் சூழலை காப்­ப­தற்கு புதிய முறையை கண்­டு­பி­டித்­துள்­ள­னர். இவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தலா 25 ஆயி­ரம் டாலர் பரிசு வழங்­கப்­பட்­டது. இந்த பரிசை பெற்­ற­வர்­கள் கென்­டக்­கி­யைச் சேர்ந்த அஞ்­சலி சாதா (16), டெலா­வா­ரைச் சேர்ந்த பிரித்தி சாய் கிருஷ்­ணா­மணி (17), வடக்கு கரோ­லி­னா­வைச் சேர்ந்த நவாமி ஜெயின் (17), பென்­சில்­வே­னி­யா­வைச் சேர்ந்த சாய் பிரித்தி மமி­டலா (17) ஆகி­யோர்.

அஞ்­சலி சாதா கிணற்று தண்­ணீ­ரில் புற்று நோயை உண்­டாக்­கும் உள்­ளி­யம் அல்­லது அரி­தார நஞ்சு கலந்து இருப்­பதை கண்­டு­பி­டிக்­கும் சென்­சார் உடன் கூடிய கரு­வியை கண்­டு­பி­டித்­துள்­ளார். தற்­போது அஞ்­சலி சாதா டுபாண்ட் மேனு­வல் மேக்­னட் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் (duPont Manual Magnet High School) படிக்­கின்­றார். இவர்­கள் குடி­யி­ருக்­கும் வீட்­டைச் சுற்றி 90 மைல் சுற்­றுப்­பு­றத்­தில் கிணற்று தண்­ணீர் நஞ்­சாக இருக்­கின்­றது. இதை கண்­டு­பி­டிக்­கும் வித­மாக கிணற்று தண்­ணீ­ரில் உள்­ளி­யம் நஞ்சு கலந்து இருப்­பதை கண்­டு­பி­டிக்­கும் சென்­சாரை கண்­டு­பி­டித்­துள்­ளார். அமெ­ரிக்­கா­வில் 5 கோடி பேர் பல்­வேறு தேவை­க­ளுக்­காக கிணற்று தண்­ணீரை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இவர்­கள் உள்­ளி­யம் நஞ்­சால் பாதிக்­கும் வாய்ப்பு உள்­ளது. கிணற்று தண்­ணீ­ரில் உள்­ளி­யம் நஞ்சு கலந்­துள்­ளதா என்­பதை எளி­தாக அஞ்­சலி சாதா கண்­டு­பி­டித்­துள்ள சென்­சார் அடங்­கிய கருவி மூலம் கண்டு பிடிக்­க­லாம்.

பிரித்தி சாய் கிருஷ்­ணா­மணி நெல்­லில் உள்­ளி­யம் கலப்­பதை தடுக்­கும் முறையை கண்­டு­பி­டித்­துள்­ளார். இது பற்றி கிருஷ்­ணா­மணி கூறு­கை­யில், “மண்­ணில் கலந்­துள்ள உள்­ளி­யம் போன்ற நஞ்சு நெற் பயி­ரில் கலப்­பா­மல் தடுப்­பதே. இதை தடுக்க உமி எரித்த சாம்­ப­லை­யும் நெற் கதிர்­கள் மீது தெளிப்­ப­தன் மூலம் நெல்­லில் நஞ்சு கலப்­பதை தடுக்­க­லாம்” என்று கூறு­கின்­றார்.

நவாமி ஜெயின் பெட்­ரோல், டீசல் போன்­ற­வை­க­ளுக்கு மாற்­றான உயிரி எரி­பொ­ருள் எத்­த­னாலை உணவு தானி­யங்­க­ளில் அல்­லாது மாற்று வழி­யில் தயா­ரிக்­கும் முறையை கண்­டு­பி­டித்­துள்­ளார். இது பற்றி நவாமி ஜெயின் கூறு­கை­யில், உயிரி எரி­பொ­ரு­ளான எத்­த­னால், உணவு தானி­யங்­க­ளான மக்­காச் சோளம் போன்­ற­வை­க­ளில் இருந்து தயா­ரிக்­கப்­ப­டு­வது பல சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்கு மாற்­றாக கோதுமை வைக்­கோல் போன்­ற­வை­க­ளில் இருந்து எத்­த­னால் தயா­ரிக்­கும் முறையை கண்­டு­பி­டித்­துள்­ளேன் என்று தெரி­வித்­தார். இவர் கோதுமை வைக்­கோ­லில் இருந்து எத்­த­னால் தயா­ரிக்­கும் முறையை கண்­டு­பி­டித்­துள்­ளார். இது செலவு குறைவு என்­ப­து­டன் எரி திற­னும் அதிக அளவு உள்­ளது.

இந்­தி­யா­வில் பெட்­ரோல், டீசல், நிலக்­கரி போன்­ற­வை­களை எரிப்­ப­தால் சுற்­றுச் சூழல் கடு­மை­யாக மாசு­ப­டு­கி­றது. இதற்கு மாற்­றாக சாய் பிரித்தி மமி­டலா புதுப்­பிக்­கும் எரி­சக்­தியை எளி­தாக பெறு­வ­தற்கு தகுந்த கேட்­லாஸ்ட்டை (catalyst–ஊக்கி) உரு­வாக்­கி­யுள்­ளார். இந்த கேட்­லாஸ்ட்­டில் எரி­சக்­தியை சேமித்து வைத்­துக் கொள்­ள­லாம். தேவைப்­ப­டும் போது பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். தற்­போது பயன்­பாட்­டில் இருக்­கும் எரி­சக்­தியை சேமிக்­கும் கேட்­லாஸ்ட்டை விட, இது மாறு­பட்­டது. இவர்கள் அமெ­ரிக்­கா­வின் பழ­மை­யான, அதே நேரத்­தில் மதிப்புமிக்க அறி­வி­யல், கணக்கு போட்­டி­யான ‘ரிஜி­ன­ரின் சயின்ஸ் டாலேண்ட் சர்ச் போட்­டி’­யின் இறு­திச் சுற்­றில் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.