தொழிலில் முன்னேற என்ன வழி? பகுதி –2 – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019

சென்ற வார தொடர்ச்சி..

இந்த விஷயத்தை அறிந்து கொள்ளாமல் அந்த ரிஷப ராசி என்று அறிந்து கொண்டு வைரத்தைப் போட்டால் நிச்சயமாக பலன் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு இருப்பது ஒரு தவறான செயலாகும். மாறாக அந்த ஜாதகத்தில் உள்ள யோகமான கிரகங்களின் கல்லை தேர்ந்தெடுத்து போட்டால் நிச்சயம் வெற்றி பெற இயலும். ஏனென்றால், அதிர்ஷ்டமும் நிச்சயமான ஒரு தேவையாக உள்ளது. உழைப்பு மட்டுமே ஒருவரை மேலே உயர்த்தி செல்லாது. நிச்சயமாக ஒருவருக்கு அதிர்ஷ்டமும் தேவையாகிறது.

இன்னும் இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் பாதகாதிபதி அதாவது தீய பலனைத் தருபவர் என்று கூறி

யிருக்கும். அது தெரியாமல் குரு

பகவானின் கல்லான புஷ்ப ராகத்தையும் மற்றும் குரு பக வானுக்குரிய பரிகாரங்களையும் செய்தும் இவர்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் இருந்திருப்பார்கள் காரணம் என்ன வென்றால் ஜாதகப் படி குரு பகவான் பகை கிரகமாக இருந்திருப்பார் என்பதை அவர்களுக்கு அறியாமல் இருக்கின்றன.

அதே போன்று நமக்கு எந்த கிரகம் நன்மை தரக்கூடிய கிரகம் அந்த கிரகத்திற்கு உண்டான பலன்கள் மற்றும் மந்திரங்கள் மற்றும் பரிகாரங்கள் மேற்கொள்ளும் போது நிச்சயமாக லாபத்தை ஈட்ட இயலும். அதாவது தடைகளை மீறி வாழ்க்கையில் முன்னேற இயலும்.

நமக்கு ஜாதகப்படி நன்மை தரும் நிறம் அதாவது ஒருவருக்கு பச்சை நிறம் மிக உகந்ததாக இருந்தால், அந்த நிறமுள்ள ஆடைகளை அணிந்துகொண்டு சென்றால் சென்ற காரியம் வெற்றியாகும். அதே போன்று தங்கள் ஜாதகப்படி தங்களுக்குள்ள எண்கணித பெயரை சூட்டிக் கொள்வது அல்லது தொழில் ஸ்தாபனங்களின் பெயரை தங்களுக்குரிய அதிர்ஷ்ட எண்ணைக் கூட்டுத் தொகையாக கொண்டும் வைக்கலாம். மேலும், நமக்கு எந்த ஓரை சிறந்தது என்று தெரிந்து கொண்டால் நன்மைகளை பெற இயலும். அந்த ஓரை நேரத்தில் நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றித் தரும்.

பரிகாரங்கள்:

ஜாதகப்படி அதிர்ஷ்ட நிறத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது.

ஜாதகப்படி எண்கணிதத்தை பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்வது.

அந்த பெயரை 108 முறை தினமும் ஒரு மண்டலம் வரை தன் கையால் எழுதுவது.

ஜாதகப்படி தங்கள் அதிர்ஷ்ட தெய்வத்தை வழிபடுவது.

பொதுவாக நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைப் படித்து வந்தால் தங்களுடைய தடைகள் நீங்கி செல்வாக்கையும் ஆதரவையும் பெற இயலும்.

தொழிலில் உள்ள எதிரிகள் விலகி தொழில் முன்னேற்றம் அடைய...

‘ஸ்ரீ வீர நரசிம்மர் வழிபாடு

மூல மந்திரம்

‘ஓம் க்ஷ்ரௌம் பட்:’

 இந்த ஸ்லோகத்தை வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் தொடர்ந்து 48 நாட்கள் தினமும் 108 முறை படித்து வந்தால் தங்களின் எதிரிகள் விலகிப் போவர்.

வேலை கிடைப்பதற்கு...

  புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சையை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டு

களாக வெட்டி நான்கு தெருக்கள் இணை யும் இடத்தில் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர்மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்.

திருமணத் தடை நீங்க

மந்திரம்: “ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே” “ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே ஸர்வாபாதா விநிர்முக்தோ தனதான்ய ஸுதான்விதஹ மனுஷ்யோ மத்ப்ரஸாதேன பவிஷ்யதி நஸம்சயஹ”

துர்க்யகைம்மனுக்குரிய இம்மந்திரத்தை, செவ் வாய்க்கிழமைகளன்று மாலை ராகு காலமான 3.00 முதல் 4.30 மணி வரைக்குள் இருக்கும் நேரத்தில் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று, அங்குள்ள துர்க்கை அம்மன் சன்னிதியில் எலுமிச்சை பழத்தை இரு பாதியாக வெட்டி, அதிலுள்ளவற்றை கடைந் தெடுத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி இம்மந்திரத்தை 108 முறை உரு ஜெபிக்க வேண்டும். இப்படி செய்து வர எந்த ஒரு காரியத்திலும் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த தடைகள் நீங்கும்.

 மேலே கூறிய பரிகாரத்துடன் தங்கள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் உங்களை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.               ***