டி.வி. பேட்டி : பெற்றோரை நினைத்து பெருமை! – பரீனா ஆசாத்

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019

*    ‘‘அழகு’’ சீரியலில் நடித்துக் கொண்டி ருக்கும் பரீனா ஆசாத், இப்போது லேட்டஸ்ட்டாக ‘‘தறி’’ சீரியலில் இணைந்திருக்கிறார். அதில் ஸ்ரீநிதி சகோதரி யாக நடித்து வரு கிறார்.

* பக்கா லோக்கல் சென்னை பொண்ணு!

* பிறந்தது நவம்பர் 9, 1990ல்.

* அப்பா, அம்மா, தம்பிகள், காதல் கணவர் என்பது அவருடைய குடும்பமாக உள்ளது.

* கணவர் ரஹ்மான் உபைத், பரீனாவின் நீண்டகால பாய்பிரண்ட். இருவருக்கும் அக்டோபர் 21, 2017ல் ‘நிக்கா’ (திருமணம்) நடந்தது.

* சின்ன வயதிலிருந்தே பரீனா பள்ளியில் படித்தது இந்தி மீடியம்தான். அவருடைய அப்பாதான் அவருக்கு ‘அ, ஆ, இ, ஈ’ சொல்லிக் கொடுத்தது.

* எம்.பி.ஏ. பட்டதாரி! அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.

* டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக முதலில் இருந்து அதன்பின் நடிகையானவர்.

* ‘கிச்சன் கலாட்டா’, ‘கோலிவுட் அன்கட்’, ‘ஷோ ரீல்’, ‘அஞ்சரை பெட்டி’ உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

* ‘மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் கணவரும் அவரும் பங்கேற்றனர்.

* ‘‘கடுமையான சட்டதிட்டங்கள் நிறைந்த ஒரு மதத்திலிருந்து சின்னத்திரையில் இந்த அளவுக்கு நான் பிரகாசிப்பதற்கு என் பெற்றோரே காரணம். அவர்களை பொறுத்தமட்டில், நாம் பார்க்கும் வேலை கடவுளுக்கு சமம்! என் பெற்றோரை நினைத்து பெருமைப்படுகிறேன்!’’ என்கிறார் கன்னக்குழி அழகி பரீனா.

* அம்மாவின் கைவண்ணத்தில் சமைக்கப்படும் தக்காளி சோறு அவருடைய பேவரிட் புட். அவ்வளவு செம டேஸ்ட்டாக செய்வாராம்.

* பயணிப் பதை மிகவும் விரும்புவார்.

* சென்னையை ரொம்ப பிடிக்கும்.

* ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ புகழ் பெப்சி உமா அவருடைய ரோல் மாடல்!

 – இருளாண்டி