விக்­கல் வைத்­தி­யம்!

பதிவு செய்த நாள் : 19 ஏப்ரல் 2019

நெய்­வேலி டவுன்­ஷிப் கார்ப்­ப­ரே­ஷன் பள்­ளி­யில், 1984ல், 9ம் வகுப்பு படித்­தேன். வகுப்பு ஆசி­ரி­யர் கண்­ண­பி­ரான், ஆங்­கில இலக்­க­ணம் நடத்­திக் கொண்­டி­ருந்­தார்...

முதல் பெஞ்­சில் அமர்ந்­தி­ருந்­தேன். திடீர் என, விக்­கல் வர ஆரம்­பித்­தது. ஆசி­ரி­ய­ரி­டம் கேட்டு, தண்­ணீர் குடித்­தேன். விக்­கல் நிற்­க­வில்லை. மறு­ப­டி­யும் தண்­ணீர் குடித்­தேன்; விக்­கல் தொடர்ந்­தது...

வகுப்பு நடத்­து­வ­தற்கு இடை­யூ­றாக, பெரி­தா­கிக் கொண்­டே­யி­ருந்­தது விக்­கல். ஆசி­ரி­யர், என்னை அழைத்து, 'கையை நீட்டு...' என்­ற­படி, பிரம்பை ஓங்­கி­னார்.

அதிர்ச்சி அடைந்த நான், 'சார்... என்ன தப்பு செய்­தேன்...' என்­றேன்.

அவர் சிரித்­த­ப­டியே, 'பார்... இப்போ விக்­கல் நின்று விட்­டது...' என்­றார்.

வகுப்­ப­றையே சிரித்­தது. அவர் தந்த அதிர்ச்சி வைத்­தி­யத்­தால், விக்­கல் முழு­வ­து­மாக நின்று விட்­டதை உணர்ந்­தேன்.

விக்­கலை நிறுத்­தும் அதிர்ச்சி வைத்­திய முறையை அப்­போது தான் அறிந்­தேன்.

இப்­போது, 48 வய­தா­கி­றது. விக்­க­லால் அவ­திப்­ப­டு­வோரை பார்த்­தால், அந்த ஆசி­ரி­யரை தான் நினைத்­துக் கொள்­வேன்.

–- என்.ரேவதி, சென்னை.