தில்­லா­லங்­கடி வேலை...

பதிவு செய்த நாள் : 19 ஏப்ரல் 2019

வேலுார் மாவட்­டம், ஜோலார் பேட்­டை­யில், 2003ல், 12ம் வகுப்பு படித்­தேன். நான், அருண், கோகுல் மூவ­ரும், நெருங்­கிய நண்­பர்­கள். எங்­குச் சென்­றா­லும், ஒன்­றாக செல்­வோம்.

ஒரு­முறை, உணவு இடை­வே­ளை­யில், பொரு­ளி­யல் ஆசி­ரி­யர், என்னை அழைத்­தார். 'கை கடி­கா­ரம் பழு­தாகி விட்­டது; உனக்கு தெரிந்த கடை இருந்­தால் சரி செய்து வா...' என்று, 50 ரூபாய் கொடுத்­தார்.

அவர், வெளி­யூர் என்­ப­தால், உள்­ளூ­ரில், கடை­கள் எங்கு இருக்­கி­றது என்­பது அவ­ருக்­குத் தெரி­யாது. நண்­பர்­க­ளு­டன் கடைக்­குச் சென்­றேன்.

ஒரு கிலோ மீட்­டர் துாரம் வரை நடந்தே சென்­றோம். அருண், கை கடி­கா­ரத்தை நோண்­டிய படியே வந்­தான். திடீ­ரென, வேலை செய்ய ஆரம்­பித்­தது; எங்­க­ளுக்கு, ஆச்­ச­ரி­யம். கோகுல், ஒரு யோச­னைக் கூறி­னான்...

'சார் கொடுத்த பணத்­துல, 30 ரூபாய்க்கு ஏதா­வது வாங்கி சாப்­பிட்டு, பழுது பார்த்­த­துக்கு, 30 ரூபாய் ஆச்­சுன்னு சொல்­லி­ட­லாம்...' என்­றான்.

அதன்­ப­டியே, 30 ரூபாய்க்கு, பழம், பிஸ்­கட் வாங்கி தின்று, பள்­ளிக்­குச் சென்­றோம்.

ஆசி­ரி­ய­ரி­டம் கை கடி­கா­ரத்தை கொடுக்­கும் போது நின்று விட்­டது. எனக்கு, கை, கால் ஒதறி, வியர்த்­தது.

'மீண்­டும் கடைக்­கா­ர­ரி­டமே எடுத்­துச் சென்று தரு­கி­றோம்...' என்று அருண் சமா­ளிக்க, திரும்­ப­வும் கடைக்கு சென்­றோம்.

நாங்­கள் செய்த குற்­றத்­திற்­காக, ஒவ்­வொ­ரு­வர், வீட்­டி­லி­ருந்­தும், 14 ரூபாய் எடுத்து வந்து, பழுது பார்த்து கொடுத்­தோம்.

அன்­றி­லி­ருந்து, இன்று வரை தில்­லா­லங்­கடி வேலை­கள் எது­வும் செய்­வ­தில்லை.

–- உ.வினோத், மதுரை.