எண்ணுாறு பெரிசு...!

பதிவு செய்த நாள் : 19 ஏப்ரல் 2019

நான், பர­மக்­குடி, சவு­ராஷ்ட்ரா தொடக்­கப் பள்­ளி­யில், 3ம் வகுப்பு படித்­தேன். ஆசி­ரி­யர் அம்­ப­ல­வா­ணன்; மிக­வும் நல்­ல­வர்.

பள்­ளி­யி­லி­ருந்து, என் வீடு தொலை­வில் இருந்­த­தால், தின­மும், 10:00 மணிக்கு தான், பள்­ளிச் செல்­வேன். என் ஏழ்மை நிலையை அறிந்த ஆசி­ரி­ய­ரும், என்னை வகுப்­பிற்­குள் அனு­ம­திப்­பார்.

எல்­லா­ரும், என்னை, '10 மணி... 10 மணி...' என்று கேலி செய்­வர். தலை சீவா­மல், கந்­தல் ஆடை­யு­டன் இருந்­த­தால், வகுப்­பில், ஒரு ஓரத்­தில் அமர்ந்­தி­ருப்­பேன்; யாரும், என்­னு­டன் பழ­கி­ய­தில்லை.

ஒரு­முறை, பள்­ளியை ஆய்வு செய்ய, இன்ஸ்­பெக்­டர் வந்­தார்; அனை­வ­ரி­ட­மும் கேள்­வி­கள் கேட்­டார். என்­முறை வந்த போது, 'எண்­ணுாறு பெரிசா... தொண்­ணுாறு பெரிசா...' என கேட்­டார்.

உடனே, நான், 'எண்­ணுாறு பெரிசு...' என்­றேன்.

'எப்­படி...' என்று கேட்­டார்.

அதற்கு, 800ல், எட்டு நுாறு­க­ளும், தொண்­ணுா­ரில், வெறும், ஒன்­பது பத்­துக்­கள் மட்­டும் உள்­ள­தாக, 'தழு... தழு...'த்த குர­லில் கூறி­னேன்.

'சபாஷ்...' என்­றார்.

உடனே, இன்ஸ்­பெக்­டர், என்னை, அலாக்கா துாக்கி, மேஜை மேல் நிறுத்­தி­னார். எல்லா மாண­வர்­க­ளும், பலத்த கர­கோ­ஷம்


செய்­த­னர்; அதன்­பின்,

அனை­வ­ரும், சக­ஜ­மாக பழ­கி­னர்.

தற்­போது, என் வயது, 83; அச்­சம்­ப­வத்தை, இப்­போது நினைத்­தா­லும் புல்­ல­ரிக்­கி­றது.

தற்­ச­ம­யம், நான், அரசு பணி­யில் இருந்து ஓய்வு பெற்­றுள்­ளேன். மறைந்த, இந்­திய பிர­த­மர் வாஜ்­பாய், என் பணியை பாராட்டி, கடி­தம் எழு­தி­யுள்­ளார்!

–- எஸ்.ஆர்.ராம­பிர்­மம், பர­மக்­குடி.