மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பங்குசந்தைகளுக்கு விடுமுறை

பதிவு செய்த நாள் : 17 ஏப்ரல் 2019 13:56

மும்பை

    நாடு முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தியை கொண்டாடப்படுவதையொட்டி அந்நிய செலாவணி சந்தை மற்றும் பங்குசந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பகவான் மகாவீர் பிறந்த தினம் மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இன்று ஏப்ரல் 17ம் தேதி (புதன்கிழமை ) மும்பை தேசியப் பங்குசந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பருப்பு மற்றும் மாவு, சர்க்கரை, எண்ணைய் வகைகள், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் போன்ற முக்கிய வர்த்தக சந்தைகளும், மும்பை பங்கு சந்தை, தேசிய பங்குச் சந்தை, அந்நிய செலாவணி, பண மதிப்பு விகிதம், என அனைத்து பங்கு சந்தைகளும், வர்த்தக சந்தைகளும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.