சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 388– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 17 ஏப்ரல் 2019

நடி­கர்­கள்  :   சிலம்­ப­ர­சன், பிர­காஷ்­ராஜ், பரத், சந்­தா­னம், அனுஷ்கா ஷெட்டி, சோனியா அகர்­வால், சரண்யா பொன்­வண்­ணன், ஜெய­பி­ர­காஷ், ரவி­பி­ர­காஷ், தண்­ட­பாணி, மற்­றும் பலர்.

இசை : யுவன் ஷங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு : நீரவ் ஷா, ஞான­சே­கர் வி.எஸ். எடிட்­டிங் : ஆண்­டனி, தயா­ரிப்பு : விடிவி கணேஷ், திரைக்­கதை, இயக்­கம் : க்ரிஷ்.

‘கேபிள் ராஜா’ என்­ற­ழைக்­கப்­ப­டும் தில்லை ராஜா (சிலம்­ப­ர­சன்) குப்­பத்­தில் பிறந்து வளர்ந்து, பணக்­கார இளை­ஞ­னாக தன்னை காட்­டிக்­கொண்டு பணக்­கா­ரப் பெண்­ணான ப்ரியாவை திரு­ம­ணம் செய்ய முயற்­சிக்­கி­றார். ப்ரியா கேட்­கும் புது வருட பார்ட்­டிக்­கான விலை அதி­க­மான டிக்­கெட்­டு­களை வாங்­கு­வ­தற்­காக நண்பன் சீனு­வோடு சேர்ந்து பணத்­துக்­காக அலை­கி­றார். பஜன் பாட­கர் கணே­ஷின் (விடிவி கணேஷ்) அறி­வு­ரை­யால் சங்­கிலி திரு­டர்­க­ளாக முயற்சி செய்து பின்­னர் மருத்­து­வ­ம­னைக்கு செல்­கி­றார்­கள்.

இசைக்­க­லை­ஞ­னான பரத் சக்­ர­வர்த்தி (பரத்) ராக் ஸ்டாராக வெற்றி பெறும் குறிக்­கோ­ளோடு வாழ்­ப­வர். ரா­ணுவ அதி­கா­ரி­யாக சொல்­லும் அம்­மா­வின் வற்­பு­றுத்­தலை மீறி, பெங்­க­ளூவி­லி­ருந்து தனது நண்பர்­க­ளோடு நிகழ்ச்­சிக்­காக சென்னை வரும் பரத், கர்ப்­பிணி ஒரு­வரை காப்­பாற்­று­வ­தற்­காக மருத்­து­வ­ம­னைக்கு வரு­கி­றார்.

சரோஜா (அனுஷ்கா) விலை­மா­து­வாக ஆந்­தி­ரா­வில் ராணி அம்­மா­வி­டம் வேலை செய்­கி­றார். அங்­கி­ருந்து தனது தோழி கற்­பூ­ரத்­து­டன் தப்பி ர­யி­லில் சென்­னைக்கு வரு­கை­யில் ரவு­டி­க­ளு­டன் ஏற்­ப­டும் பிரச்­னை­யில் காய­ம­டை­யும் தோழியை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து வரு­கி­றார்.

ரஹீ­மு­தின் குரேஷி (பிர­காஷ்­ராஜ்) அவ­ரது மனைவி ஸாரா (சோனியா அகர்­வால்) இரு­வ­ரும் கோய­முத்­தூர் கல­வ­ரத்­தால் தங்­க­ளது குழந்­தையை பிறக்­குமுன்னே இழந்­த­வர்­கள். ரஹீம் தனது தம்­பியை தேடி மனை­வி­யோடு சென்னை வர இஸ்லாமியர்களை வெறுக்­கும் போலீஸ் அதி­காரி சிவ­ராம் (ரவி பிர­காஷ்) அவர்­களை சந்­தே­கித்து துன்­பு­றுத்­து­வ­தால் காய­ம­டை­யும் ரஹீமை மருத்­து­வ­ம­னை­யில் போலீஸ் காவ­லில் வைக்­கி­றார்.

தூத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த லட்சுமியை (சரண்யா) ஏழை நெச­வா­ள­ரின் மரு­ம­க­ளாக வாங்­கிய கடனை அடைக்க முடி­யா­மல் கந்­து­வட்­டிக்­கா­ரர் நர­சிம்­ம­னி­டம் (தண்­ட­பாணி) தவணை கேட்­கி­றார். பணத்­திற்­காக நர­சிம்­மன் பிடித்து வைத்­தி­ருக்­கும் தனது மகனை மீட்­ப­தற்­காக சிறு­நீ­ர­கத்தை விற்­ப­தற்கு மாம­னா­ரோடு சென்னை மருத்­து­வ­ம­னைக்கு வரு­கி­றார். கிடைக்­கும் பணம் போது­மா­ன­தாக இல்­லாத நிலை­யில் அதை திரு­டும் ராஜா மனம் திருந்தி, ப்ரியா­வி­டம் உண்­மையை ஒப்­புக்­கொள்­வ­தோடு லட்சுமிக்கு தேவை­யான பணத்­தை­யும் சேர்த்து திருப்­பித்­த­ரு­கி­றார்.

தீவி­ர­வா­தி­க­ளின் தலை­வன் மன்­சூர் கான் (ஜெயபிர­காஷ்) மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும் மக்­களை கொல்ல திட்­ட­மி­டு­கி­றான். ரஹீம், பரத், ராஜா அனை­வ­ரு­மாக சேர்ந்து தீவி­ர­வா­தி­களை எதிர்த்து போரா­டு­கி­றார்­கள். தீவி­ர­வா­தி­க­ளின் குண்­டு­க­ளி­லி­ருந்து சிவ­ராமை காப்­பாற்­றும் ரஹீம் தீவி­ர­வா­தி­யாக எதிர்­கொள்­ளும் தனது தம்­பியை குற்­றம் சாட்ட, அவ­ரது தம்பி தன்­னையே சுட்­டுக் கொல்­கி­றான். தோளில் ஏற்­ப­டும் குண்டு காயங்­க­ளால் பரத் தனது கையையே இழக்க நேரி­டு­கி­றது. மனித வெடி­குண்­டாக மாறும் கானி­ட­மி­ருந்து அனை­வ­ரை­யும் காப்­பாற்­று­வ­தற்­காக ராஜா மன்­சூரை இழுத்­துக்­கொண்டு அந்த கட்ட­டத்­தி­லி­ருந்து ஜன்­னல் வழி­யாக வெளியே குதித்து உயிர் தியா­கம் செய்­கி­றான்.

பரத் கையை இழந்­தா­லும் தாயின் ஆசை­யான ரா­ணுவ அதி­கா­ரிக்கு இணை­யான புகழை பெறு­கி­றான். சரோ­ஜா­வும், கற்­பூ­ர­மும் நிம்­ம­தி­யும், கவுர­வ­மும் அளிக்­கும் தங்­க­ளது புது வாழ்க்­கையை நோக்கி பய­ண­மா­கி­றார்­கள். ரஹீம் தன்­னி­டம் மன்­னிப்பு கேட்­கும் சிவ­ராமை மன்­னிப்­ப­தோடு தனது சகோ­த­ர­னா­க­வும் ஏற்­றுக்­கொள்­கி­றார். லட்சுமி தங்­க­ளது கடனை அடைப்­ப­தோடு புத்­தி­சாலி மாண­வ­னான தனது மகனை மீண்­டும் படிக்க அனுப்­பு­கி­றார். ராஜா­வின் இறு­தி­ ச­டங்­கிற்கு வரும் அனை­வ­ரும் அவ­னது தியா­கத்தை போற்­று­கின்­ற­னர்.