அற்புதம் நிகழ்த்திய ஆறுமுகன்!

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2019

முருகனின் வரலாற்றை விவரிக்கும் கந்தபுராணத்தை எழுதியவர், கச்சியப்பர். காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலின் அர்ச்சகராக இருந்தவர் இவர். நுாலை அரங்கேற்றம் செய்த போது, இலக்கணப்பிழை இருப்பதாக புலவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

செய்வதறியாமல் திகைத்த கச்சியப்பருக்கு உதவ, குமரகோட்டம் முருகனே புலவர் வடிவில் எழுந்தருளினார். 'வீரசோழியம்' என்னும் நுாலில் மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். அவையோர் அக்கருத்தை ஏற்று, நுாலை அரங்கேற அனுமதித்தனர்.