இந்த ஆண்டு சராசரியைவிட பருவமழை கொஞ்சம் தூக்கல்: வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2019 13:57

புது டெல்லி,

   இந்த ஆண்டு பருவமழை, ஏறக்குறைய இயல்பான அளவில் இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

பருவமழையானது, நீண்ட கால சராசரி (long period average - LPA) அளவில் 96 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

1951-ம் ஆண்டுக்கும் 2000 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பெய்த மழையின் சராசரி அளவான 89 செ.மீ. என்பதே நீண்ட காலகட்ட சராசரி (LPA) அளவு என அழைக்கப்படுகிறது. இந்த LPA அளவில் 90 முதல் 95 சதவீதம் என்பது `இயல்பான அளவுக்கும் கீழானது’ என்று வகைப்படுத்தப்படுகிறது.