அமெரிக்க சீக்கியர்களுக்கு எம்.பி.க்கள் புத்தாண்டுக்கு வாழ்த்து

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2019 13:46

வாஷிங்டன்,

  சீக்கியர் சமூகத்தினரின் வைசாகி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் வாழும் சீக்கிய மக்களுக்கு அந்நாட்டு எம்.பி.க்கள் பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

நம்முடன் வாழும் சீக்கியர்களுக்கு இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்று அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவை உறுப்பினரான ஜான் கார்னின் ட்விட்டரில் வாழ்த்து கூறியிருக்கிறார்.

அமெரிக்க சீக்கியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான வைசாகி வாழ்த்துகள் என செனட்டர் மார்கோ ரூபீயோ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் பிரிக்க முடியாத அங்கமாக சீக்கிய மக்கள் திகழ்கிறார்கள் என்றும் சமத்துவத்தையும் நீதியையும் உயர்த்திப் பிடிப்பதை எடுத்துக் காட்டும் வகையில் சீக்கியர்களின் தலைப்பாகை அமைந்திருக்கிறது என்றும் அமெரிக்க எம்.பி. அட்ரியானோ எஸ்பயிலாட் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.