தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

பதிவு செய்த நாள் : 14 ஏப்ரல் 2019 19:00

புதுடில்லி,              

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்களது புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். சித்திரை திங்கள் முதல் நாள் இந்த தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. விகாரி வருடம்  இன்று பிறந்துள்ள இன்று தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தமிழ் மக்களும் கொண்டாடிவருகின்றனர்

இந்நிலையில், ராகுல் காந்தி தமிழில் தெரிவித்துள்ள வாழ்த்தில், தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும், வரலாறும் செழிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.