22 சட்டசபை இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

பதிவு செய்த நாள் : 14 ஏப்ரல் 2019 13:56

சேலம்,                      

22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் முதல்வர் பழனிசாமி இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதற்காக தொழிலாளர் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வரவிருக்கிறது.

அ.தி.மு.க. அரசு விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு. ஏழை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.

கோதாவரி மற்றும் காவிரி நதிநீர் திட்டத்தினால் சேலம் மாவட்டம் செழிக்கும். இந்த தேர்தலுக்கு பின்பே எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு தொடங்கும். மக்களவை, சட்டசபை இடைத்தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் கனவு நிறைவேறாது. 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என முதல்வர் பழனிசாமி  கூறினார்.