பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 8 பேர் பலி, 6 பேர் மாயம்

பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019 18:14

இஸ்லாமாபாத்:

   பாகிஸ்தானில் திருமணத்துக்கு சென்றவர்கள் பயணம் செய்த வேன் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வேனில் இருந்த இரு குழந்தைகள், ஆறு பெண்கள் ஆக மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் ஒரு வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.

வானா என்ற இடத்தின் வழியாக சென்றபோது சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்து சென்றது.

அருகில் உள்ளவர்கள் வேனை வெள்ளம் அடித்துச் சென்றதை மீட்புப் படைக்கு  தெரிவித்தனர், விரைந்து வந்த மீட்புப் படையினர் இரு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்களின் சடலங்களை கைப்பற்றினர். மேலும் காணாமல் போன 6 குழந்தைகளை தேடி வருவதாக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.