எல் நினோ : மேலை நாடுகளின் மிரட்டல்?

பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019

எல் நினோ என்­றால் ஸ்பானிஷ் மொழி­யில் சிறு பையன் என்று பொருள். அதே நேரத்­தில் எல் நினோ என்­பது குழந்­தைத் தனம் அல்ல. பசி­பிக் மகா­ச­முத்­தி­ரத்­தில் வெப்­பம் அதி­க­ரிப்­ப­தையே என் நினோ என்­கின்­ற­னர். பசி­பிக் மகா­ச­முத்­தி­ரத்­தில் வெப்­பம் அதி­க­ரிப்­ப­தால் இந்­தியா உட்­பட தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளில் மழை பொய்த்­துப்­போய் வறட்சி ஏற்­ப­டு­கி­றது. இதையே என் நினோ­வின் விளைவு என்று குறிப்­பி­டு­கின்­ற­னர். இந்த வரு­டம் மழை பெய்­யாது. வறட்சி ஏற்­ப­டும் என்று இரண்டு சர்­வ­தேச பிர­பல வானிலை ஆய்வு நிறு­வ­னங்­கள் அறி­வித்­துள்­ளன.

 இத­னால் ஒடி­சா­வைச் சேர்ந்த விவ­சா­யி­கள் குழப்­பம் அடைந்து அச்­சத்­தில் உள்­ள­னர். அதே நேரத்­தில் இந்­திய வானிலை ஆய்வு மையம், இத்­த­கைய கணிப்பு வெளி­யி­டு­வ­தற்கு காலம் உள்­ளது. இவ்­வ­ளவு சீக்­கி­ரத்­தில் முடிவு செய்ய முடி­யாது என்று ஆறு­த­லாக கூறி­யுள்­ளது. இந்­திய வானிலை ஆய்வு மையம் ஏப்­ரல் மாதத்­தில் பரு­வ­மழை பற்­றிய கணிப்பு வெளி­யி­டும். அதற்கு பின் அடுத்த மாதங்­க­ளி­லும் தொடர்ந்து கணிப்­பு­களை வெளி­யி­டும்.

பிர­பல தனி­யார் வானிலை ஆய்வு மைய­மான ஸ்கைமெட், அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த நேஷ­னல் ஓசி­யா­னிக் அண்ட் அட்­மாஸ்­பி­ய­ரிக் அட்­மி­னிஷ்­ரே­சன் ஆகிய இரண்டு வானிலை ஆய்வு நிறு­வ­னங்­க­ளும் ஒடி­சா­வில் ஆகஸ்ட் மாதம் வரை வெயில் கொளுத்­தும். பரு­மழை கால­மான ஜூலை முதல் ஆகஸ்ட் வரை­யி­லான காலத்­தில் குறைந்த அளவே மழை பெய்­யும் என்று கணித்­துள்­ளன. இத­னால் மழையை மட்­டும் நம்­பியே விவ­சா­யம் செய்­யும் ஒடிசா விவ­சா­யி­கள் மத்­தி­யில் அச்­சம் எழுந்­துள்­ளது.

ஜூலை ஆகஸ்ட் மாதங்­க­ளில் பெய்­யும் பரு­வ­ம­ழையை நம்­பியே விவ­சா­யம் செய்­யப்­ப­டும் ஒடி­சா­வில் மழை பொய்த்­துப் போகும் என்று கூறி­யி­ருப்­பதே விவ­சா­யி­கள் அச்­சப்­ப­டு­வ­தற்கு கார­ணம்.  எல் நினோ பாதிப்­பால் பசி­பிக் மகா­ச­முத்­தி­ரத்­தின் மேல் அடுக்­கு­க­ளில் வெப்­பம் படிப்­ப­டி­யாக அதி­க­ரிக்­கி­றது என்று நேஷ­னல் ஓசி­யா­னிக் அண்ட் அட்­மாஸ்­பி­ய­ரிக் அட்­மி­னிஷ்­ரே­சன் கூறி­யுள்­ளது. அத்­து­டன் ஜூன்,ஜூலை மாதங்­க­ளில் எல் நினோ பாதிப்பு 80 சத­வி­கி­த­மாக இருக்­கும். இது ஆகஸ்ட்–­செப்­டம்­பர் மாதங்­க­ளில் 60 சத­வி­கி­த­மாக குறை­யும். இது பரு­வ­ம­ழையை பாதிக்­கும் என்று கூறி­யுள்­ளது. ஸ்கைமெட் ஜூன் மாதம் முதல் அல்­லது இரண்­டா­வது வாரத்­திற்கு பிறகு பரு­வ­மழை குறை­யும் என்று கூறி­யுள்­ளது . இந்த கணிப்­பு­கள் உண்­மை­யா­னால் சென்ற வரு­டம் செப்­டம்­பர்–­அக்­டோ­பர் மாதங்­க­ளில் பெரு­மழை பெய்து வெள்­ளம் வந்­தது போல், இந்த வரு­டம் இருக்­காது.

சிக்சா ஓ அனு­சந்­தன் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் பரு­வ­நிலை மையத்­தின் இயக்­கு­நர் சரத் சந்­திரா சாகு கூறு­கை­யில், இப்­போதே இந்த வரு­டம் ஒடி­சா­வில் எல் நினோ பாதிப்பு இருக்­கும் என்று கூற­மு­டி­யாது. பரு­வ­ம­ழையை எல் நினோ மட்­டுமே தீர்­மா­னிப்­ப­தில்லை. இந்து மகா­ச­முத்­தி­ரத்­தில் இருந்து மேற்கு நோக்கி வீசும் காற்று, ஏப்­ரல்–மே மாதங்­க­ளில் வெப்­ப­நிலை, நீர்­நி­லை­க­ளில் இருந்து தண்­ணீர் ஆவி­யா­கு­தல் போன்­ற­வை­யும் பரு­வ­ம­ழையை தீர்­மா­னிக்­கின்­றன. பரு­வ­மழை பற்­றிய கணிப்­பிற்கு ஏப்­ரல் மாத கடைசி வரை­யிலோ அல்­லது மே மாதம் முதல் வாரம் வரை காத்­தி­ருக்க வேண்­டும். இந்த வரு­டம் சரா­சரி அளவை விட ஜூன்–­ஜூலை மாதங்­க­ளில் வெயில் ஒன்று முதல் இரண்டு டிகிரி வரை அதி­க­மாக இருக்­கும். இப்­போது கூட எல் நினோ பாதிப்பு உள்­ளது. ஆனால் இதன் பாதிப்பு 60 சத­வி­கி­தம் வரை மட்­டுமே உள்­ளது என்று அவர் கூறி­னார்.  சரத் சந்­திரா சாகு புவ­னேஸ்­வ­ரத்­தில் உள்ள வானிலை ஆய்வு மையத்­தில் நீண்ட காலம் இயக்­கு­ந­ராக இருந்­த­வர்.  

புவ­னேஸ்­வ­ரத்­தில் உள்ள வானிலை ஆய்வு மையத்­தைச் சேர்ந்­த­வர்­கள், இப்­போதே பரு­வ­மழை பற்றி கணிக்க இய­லாது என்­கின்­ற­னர். மயூர்­பஞ்ச் மாவட்­டத்­தில் உள்ள சமுக்­குந்தா கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி அனம் சரன் நாயக் கூறு­கை­யில், நாங்­கள் ஏப்­ரல்–மே மாதம் விதைப்­போம். மழை நன்­றாக பெய்­யும் ஜூன்–­ஜூலை மாதங்­க­ளில் நாற்று நடு­வோம். ஜூன்–­ஜூலை மாதம் மழை இல்­லா­விட்­டால், நாங்­கள் அழிந்­து­வி­டு­வோம். சரா­சரி அளவு மழை பெய்­தா­லும் பிர­யோ­ச­ன­மில்லை. செப்­டம்­பர்–­அக்­டோ­பர் மாதங்­க­ளில் மழை பெய்து என்ன பிர­யோ­ச­னம். விவ­சாய வேலை­கள் எல்­லாம் முடிந்து போயி­ருக்­கும் என்று கூறி­னார்.

சர்­வ­தேச வானிலை ஆய்வு மையங்­க­ளின் கணிப்­பும், உள்­நாட்டு வானிலை ஆய்வு மையங்­க­ளின் கணிப்­பும் வேறு­ப­டு­வது இதுவே முதன்­முறை அல்ல. 2013, அக்­டோ­பர் மாதம் பாலின் புய­லின் போது, சரத் சந்­திரா சாகு புயல் கரையை கடக்­கும் போது காற்­றின் வேகம் மணிக்கு 210 முதல் 215 கி.மீட்­டர் வேகத்­தி­லேயே இருக்­கும் என்­று­க­டைசி வரை அடித்து கூறி­னார். அப்­போது அமெ­ரிக்க கடற்­படை உட்­பட பல்­வேறு சர்­வ­தேச வானிலை ஆய்வு மையங்­கள் புயல் கரையை கடக்­கும் போது காற்­றின் வேகம் மணிக்கு 300 கி.மீட்­ட­ராக இருக்­கும் என்று உறு­தி­யாக கூறின. இந்­தியா வானிலை ஆய்வு மைய நிபு­ணர்­கள் கூறி­யது போல் புயல் கரையை கடக்­கும் போது காற்­றின் வேகம் மணிக்கு 210 கி.மீட்­டர் வேகத்­தி­லேயே இருந்­தது. சர்­வ­தேச வானிலை ஆய்வு மைய கணிப்­பு­கள் பொய்த்­துப் போய் விட்­டன. இந்­திய வானிலை ஆய்வு நிபு­ணர்­கள் கூறி­யதே சரி­யாக இருந்­தது.

இந்த வரு­டம் எல் நினோ பாதிப்­பால் பரு­வ­மழை குறை­யும், வறட்சி ஏற்­ப­டும் என்று ஸ்கைமெட் உட்­பட வெளி­நாட்டு ஆய்வு மையங்­கள் கூறு­கின்­றன. இந்­திய வானிலை ஆய்வு மைய நிபு­ணர்­கள், இப்­போதே பரு­வ­ம­ழையை கணிக்க இய­லாது என்று கூறு­கின்­ற­னர். இந்த வரு­டம் எல் நினோ பாதிப்­பால் பரு­வ­மழை பாதிப்பு இருக்­குமா என்­பது ஜூன் மாதம் இரண்­டா­வது வாரத்­திற்கு பிறகே தெரி­ய­வ­ரும்.  

நன்றி: அவுட்­லுக் வார இத­ழில் சந்­தீப் சாகு.