கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்!

பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019

கேர­ளா­வில் சென்ற வரு­டம் தென்­மேற்கு பரு­வ­மழை வர­லாறு காணாத அளவு பெய்­தது. மாநி­லத்­தின் பல பகு­தி­கள் வெள்­ளத்­தில் மூழ்­கின. உயிர் பலி, பொருட்­கள் சேதம் என தொடர்ந்­தது. அதே கேர­ளா­வில் இந்த கோடை காலத்­தில் வெயில் கொளுத்­து­கி­றது. வெயி­லின் அளவு சரா­ச­ரியை விட மிக அதி­க­மாக உள்­ளது. இந்­திய வானிலை ஆய்வு மையம் மலை பிர­தே­ச­மான இடுக்­கியை தவிர மற்ற 13 மாவட்­டங்­க­ளில் வெயி­லின் அளவு மூன்று முதல் நான்கு டிகிரி செல்­சி­யஸ் வரை அதி­க­மாக உள்­ளது என்று கூறி­யுள்­ளது. வெப்­ப­மண்­டல பகு­தி­யான கேர­ளா­வில் வெயி­லின் அளவு முன் எப்­போ­தும் இல்­லாத்தை விட கோடை காலத்­தில் மிக அதி­கா­மாக உள்­ளது. ஒவ்­வொரு நாளும் மாநி­லத்­தின் பல பகு­தி­க­ளில் வெயி­லால் 50 பேர் வரை மயக்­க­ம­டை­வ­தாக செய்­தி­கள் வரு­கின்­றன.

அதே நேரத்­தில் இந்த கடு­மை­யான வெயி­லால் வெப்ப காற்று வீச­வில்லை. கேரள மாநில பேர­ழிவு துயர்­து­டைப்பு ஆணைய உறுப்­பி­னர் செய­லா­ளர் சேகர் லூகாஸ் குரி­யா­கோஸ் கூறு­கை­யில், “இந்­திய வானிலை ஆய்வு மையம் இது­வரை கேர­ளா­வில் வெப்ப காற்று வீசு­வ­தாக அறி­விக்­க­வில்லை. அதே நேரத்­தில் வெப்ப காற்று வீசும் சாத்­தி­யம் உள்­ள­தால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தார். சரா­சரி வெயிலை விட 4.5 முதல் 6.4 டிகிரி செல்­சி­யஸ் அதி­கம் இருந்­தால் மட்­டுமே வானிலை ஆய்வு மையம் வெப்ப காற்று வீசு­வ­தாக அறி­விக்­கும்.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள அரசு பொது மருத்­து­வ­மனை உதவி கண்­கா­ணிப்­பா­ளர் டாக்­டர். எஸ்.ஐ. ஹபீஸ் கூறு­கை­யில், “கேர­ளா­வில் முன் எப்­போ­தும் இல்­லாத அளவு வெயி­லின் தாக்­கம் அதி­க­மாக உள்­ளது. தின­சரி 20 முதல் 25 பேர் வரை வெயிலை தாங்க முடி­யா­மல் மயக்­க­ம­டைந்து சிகிச்­சைக்கு வரு­கின்­ற­னர். ஏனெ­னில் வெயில் அதி­க­ரிப்­ப­தால் உடல் உஷ்­ண­மும் அதி­க­ரிக்­கி­றது. உடல் உஷ்­ணம் 40 டிகிரி செல்­சி­யஸ் (104 டிகிரி பாரன்­ஹூட்) வரை அதி­க­ரித்­தால் உடல் உறுப்­பு­க­ளின் இயக்­கம் பாதிக்­கப்­ப­டும். கடு­மை­யான தலை­வலி, வாந்தி, மயக்­கம், உடல் வலி, வேர்க்­கா­மல் இருப்­பது ஆகி­யவை ஏற்­ப­டும். இதுவே வெயிலை தாங்க முடி­யா­மல் இருப்­ப­தற்கு அறி­கு­றி­கள் என்று கூறி­னார்.

வெயில் அதி­க­ரிப்­ப­தால் வியா­பா­ர­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கடை­கள், உணவு விடு­தி­க­ளில் வெயி­லால் வாடிக்­கை­யா­ளர்­கள் வரு­வது கடு­மை­யாக சரிந்­துள்­ளது. திரு­வ­னந்­த­பு­ரத்­தில் மையப்­ப­கு­தி­யில் கடை வைத்­துள்ள சகா­து­தின் கூறு­கை­யில், மாலை வரை மக்­கள் வெளியே வரு­வ­தில்லை என்று கூறி­னார். உணவு பொருட்­களை விநி­யோ­கிப்­ப­வர்­கள் கருப்பு உடை அணிய வேண்­டாம் என்­றும், தண்­ணீர் பாட்­டில் எப்­போ­தும் கைவ­சம் வைத்­தி­ருக்­கு­மா­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர். கேரள தொழி­லா­ளர் நலத்­துறை, உச்சி வெயில் நேரத்­தில் இருந்து மதி­யம் 3 மணி வரை தொழி­லா­ளர்­களை வெளியே வேலை செய்ய கூற கூடாது என்று அறி­வித்­துள்­ளது. ஆனால் கட்­டு­மான தொழி­லா­ளர்­களை சுட்­டுப் பொசுக்­கும் வெயி­லில் காண்ட்­ராக்­டர்­கள் வேலை வாங்­கு­வ­தாக தக­வல்­கள் கூறு­கின்­றன. வானிலை ஆய்வு மையம் வரும் நாட்­க­ளில் வெயில் அதி­க­மாக இருக்­கும். கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று அறி­வித்­துள்­ளது.

நன்றி: அவுட்­லுக் வார இத­ழில் சபீன் இக்­பால்.