அரசியல் மேடை: அன்பான வாக்காள பெருமக்களே....!

பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019

இம்­மா­தம் 18ம் தேதி வியா­ழக்­கி­ழமை வாக்­குப்­ப­திவு. தமிழ்­நாட்­டி­லுள்ள 39 பார்­லி­மெண்ட் தொகு­தி­கள், புதுச்­சே­ரி­யின் ஒரு தொகுதி, இது தவிர தமிழ்­நாட்­டில் காலி­யாக உள்ள 18 சட்­ட­ ச­பைத் தொகு­தி­க­ளுக்­கும் தேர்­தல் நடை­பெ­று­

கி­றது.

பார்­லி­மெண்ட் தேர்­தல் என்­பது, மத்­தி­யில் மோடி தலை­மை­யி­லான பா.ஜ. ஆட்சி தொடர வேண்­டுமா? அல்­லது ராகுல் தலை­மை­யில் ஆட்சி மாற்­றம் தேவையா? என்­பதை மையப்­ப­டுத்தி நடை­பெ­று­கி­றது. ஒரு மினி சட்­ட­சபை தேர்­தல் போல நடை­பெ­று­கிற 18 சட்­ட­சபை தொகு­தி­க­ளுக்­கான இடைத்­தேர்­த­லும் மிக முக்­கிய தேர்­த­லா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

 ஆட்சி கட்­சி­யாக உள்ள அதி­முக, தமக்கு மீதம் உள்ள காலக்­கெ­டு­வான 2021ம் ஆண்டு வரை­யி­லும் ஆட்சி தொடர்­வ­தற்கு குறைந்த பட்­சம் 8 தொகு­தி­க­ளி­லா­வது வெற்றி பெற வேண்­டும். இந்த எட்­டுத்­தொ­கு­தி­கள் மட்­டு­மல்ல 22 தொகு­தி­க­ளி­லும், வெற்றி பெற்று இந்த அதி­முக ஆட்­சியை தொடர விடக்­கூ­டாது என்­ப­தில் திமு­க­வும் தீவிர கவ­னம் செலுத்­தும் நிலை.

தேர்­தல் களத்­தில் அதி­முக கூட்­டணி, திமுக கூட்­டணி என்ற இரண்டு வலி­மை­யான கூட்­டணி உள்­ளது. இவர்­கள் தவிர தின­க­ர­னின் அம­முக, கமல்­ஹா­ச­னின் மக்­கள் நீதி மய்­யம், சீமா­னின் நாம் தமி­ழர் கட்சி ஆகி­ய­வை­யும் 40ம் நமதே என்று களம் இறங்­கி­யுள்­ளன. இவர்­க­ளு­டைய பிரச்­சா­ரம் எப்­படி இருக்­கி­றது. இவர்­கள் எந்­த­வித வாக்­கு­றுதி அளிக்­கி­றார்­கள் என்­பதை பார்த்து வாக்­கா­ளப் பெரு­மக்­கள் முடி­வெ­டுக்க முடி­ய­வில்லை.

கட்­சி­க­ளின் கொள்கை, லட்­சி­யம், சித்­தாந்­தம் எதை­யும் முன்­நி­றுத்­தும் நிலை­யில் எந்த கட்­சி­யும் இல்லை. மத்­திய ஆளும் கட்­சி­யான பா.ஜ. மாநில ஆட்­சிக் கட்­சி­யான அதி­முக ஆகிய இரண்டு கட்­சி­க­ளின் செயல்­பா­டு­கள், இவர்­க­ளது ஆட்­சி­யின் குறை­பா­டு­கள் என்­ப­வற்றை சுட்­டிக்­காட்­டும் திமுக தரப்பு, ஒரு கட்­டத்­துக்கு மேல் விளை­யாட்­டுக் களத்­தில் பந்தை அடிப்­பதை விட்டு ஆளை அடிப்­பது போல முத­ல­மைச்­சர் மற்­றும் அமைச்­சர்­கள் மீது நேர­டித் தாக்­கு­த­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

குறிப்­பாக, திமுக தலை­வர் ஸ்டாலின் முத­ல­மைச்­சரை நோக்கி கடும் விமர்­ச­னக்­க­ணைகளை வீசு­கி­றார். கொலை­கா­ரர், மண்­புழு,கொத்­த­டிமை, மக்­கள் விரோதி என்­றெல்­லாம் சுடு­சொற்­க­ளால் அர்ச்­சிக்­கி­றார்.

முத­ல­மைச்­சர் எடப்­பாடி பாழ­னிச் சாமி­யும் அவ­ரு­டைய பங்­குக்கு ஸ்டாலினை கடு­மை­யாக தாக்­கிப் பேசி வரு­கி­றார். விஷக்­கி­ருமி, நச்சு வைரஸ், சாதிக்­பாட்சா தற்­கொ­லைக்கு உடந்­தை­யா­ன­வர், கரு­ணா­நி­திக்கு உரிய சிகிச்சை அளிக்­கா­மல் வீட்டு சிறை­யில் வைத்­த­வர் என்­றெல்­லாம் குற்­றச்­சாட்­டு­களை அடுக்­கு­கி­றார்.

இந்த பிரச்­சார கருத்­துக்­க­ளில் இருந்து தமி­ழக மக்­கள், வாக்­கா­ளர்­கள் என்ன புரிந்து கொள்ள முடி­யும், யாருக்கு வாக்­க­ளிப்­பது என்ற முடிவை எப்­படி எடுக்க முடி­யும்? சரி, இவர்­க­ளுக்கு மாற்­றாக களத்­தில் உள்ள அம­முக, மநீம, நாம் தமி­ழர் ஆகிய கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தால், மத்­தி­யிலோ, மாநி­லத்­திலோ இவர்­க­ளால் ஏதா­வது மாற்­றத்தை நிகழ்த்த முடி­யுமா  என்­றால் நிச்­ச­ய­மாக இப்­போ­தைக்கு அது சாத்­தி­யம் இல்லை. அப்­படி என்­றால் என்ன செய்­வது எனும் குழப்­பம் வாக்­கா­ளர்­கள் மத்­தி­யில் எழு­வது இயல்பு.

மத்­தி­யில் ஆட்சி மாற்­றத்தை உரு­வாக்­கு­வோம் என களத்­திற்கு வந்­துள்ள காங்­கி­ரஸ் கட்சி இந்­திய சுதந்­தி­ரத்­திற்­குப் பின் சுமார் 50 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக ஆட்­சி­யில் இருந்­துள்­ளது. ஆட்­சி­யில் இருந்­த­போது இந்­திய தேசத்­தின் வளர்ச்­சிக்­காக, மக்­க­ளின் மேம்­பாட்­டிற்­காக என்­ன­வெல்­லாம் செய்­தார்­கள் என்­பதை கொஞ்­சம் ‘ரீ வைண்­டிங்’ செய்து பார்க்­க­லாம்.

 மீண்­டும் இவர்­கள் ஆட்­சிக்கு வந்­தா­லும், பல்­வேறு மாநி­லக் கட்­சி­க­ளின் தய­வோ­டு­தான், ஆட்­சியை கொண்டு செல்ல முடி­யும். அப்­படி நடை­பெ­று­கிற கூட்­டணி ஆட்­சி­யால் என்ன சாதித்­து­விட முடி­யும்? எவ்­வ­ளவு நாள் ஆட்சி தாக்கு பிடிக்­கும் என்­ப­தை­யும் கூட மக்­கள் சிந்­தித்து பார்க்க வேண்­டும்.

காங். தலை­வர், ராகுல் தான் பிர­த­மர் வேட்­பா­ளர் என தன்­னந்­த­னி­யாக அறி­விப்பு வெளி­யிட்ட ஸ்டாலி­னும் அவ­ரது தலை­மை­யி­லான திமு­க­வும் எத்­த­கைய நம்­பிக்­கைக்கு உரி­ய­வர்­கள், அவர்­கள் 5 முறை இந்த தமிழ்­நாட்டை ஆண்ட கால­கட்­டங்­க­ளில் எத்­தனை சாத­னை­களை செய்­துள்­ள­னர். கட்­சியை கட்­ட­மைத்து கட்­டுப்­பா­டாக கொண்டு போன கரு­ணா­நிதி இல்­லாத இவர்­கள் கையில் ஆட்சி போனால், என்ன நடக்­கும். இவர்­க­ளால் மக்­க­ளுக்­கான நல்­லாட்­சியை வழங்க முடி­யுமா? கடந்த கால அரா­ஜ­கம், ரவு­டித்­த­னம், நில அப­க­ரிப்பு, லஞ்ச, ஊழல், அதி­கார துஷ்­பி­ர­யோ­கம் எல்­லா­வற்­றை­யும் முற்­றாக ஒதுக்­கி­விட்டு நேர்­மை­யான, திற­மை­யான நல்­லாட்­சியை திமுக தர முடி­யுமா? என்­ப­தை­யும் வாக்­க­ளர்­கள் சிந்­தித்­தப் பார்த்­துத்­தான் வாக்­க­ளிக்க வேண்­டிய நிலை­யில் உள்­ள­னர்.

காங். ஆட்­சியை விட பா.ஜ. ஆட்சி எந்த அளவு மேலா­னது. திமுக ஆட்­சியை விட அதி­முக ஆட்சி எந்த வகை­யில் எல்­லாம் பர­வா­யில்லை என சீர் தூக்­கிப் பார்த்து, ‘‘குணம் நாடி குற்­ற­மும் நாடி அவற்­றுள் – மிகை நாடி மிக்க கொளல்’’ – என்ற திருக்­குள் நெறிப்­படி –‘‘மிகை நாடி’’ – மக்­கள் தங்­கள் வாக்­கு­களை பதிவு செய்­வார்­கள் என நம்­ப­லாம். இது நம் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்­கிற தேர்­தல் என்­ப­தை­யும் கருத்­தில் கொள்­வார்­கள் தானே!