தொழிலில் முன்னேற என்ன வழி? – ஜோதிடர் டாக்டர் என் ஞானரதம்

பதிவு செய்த நாள் : 14 ஏப்ரல் 2019

என்னிடம் ஜாதகம் பார்க்கும் நபர்கள்  ஜாதகத்தை கொடுத்து விட்டு எனக்கு ஜாதகப்படி தொழில் எப்படி இருக்கும் என்று கேட்கிறார்கள். மேலும் நான் நன்றாகத்தான்  உழைக்கின்றேன், ஆனால், அதற்கேற்ற ஊதியமோ அல்லது லாபமோ எனக்கு கிடைக்கவில்லை. சிலர் ‘‘நான் அந்த தொழிலில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவன். பல ஆண்டுகளாக எனக்கு அனுபவங்கள் உள்ளன. இருந்தும் அந்த தொழிலில் நான் வேலை செய்யும் பொழுது அதிகமான உழைப்பும் அதிகமாக முயற்சியும் நான் என்னுடைய தொழிலில் போட்டும் அதுக்குண்டான மூலதனமும் சரியான அளவில் போட்டும் எனக்கு இயல்பான லாபம் கூட வரவில்லை. ஏன்  அதற்கு உண்டான பலன் கிடைக்காமல் போகிறது’’ என்றும் புலம்புகின்றனர்.  

இதற்கு ஜாதகரீதியாக என்ன காரணம் என்று கேட்கிறார்கள். ஏன் இந்தத் தடைகள் என்றும் கூறுகின்றனர். இந்த தடைகளிலிருந்து மீண்டு நான் எப்படி தொழிலில் முன்னேற முடியும் என்று புலம்புகின்றனர். இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்கும் போது இந்த கட்டுரையை எழுத எனக்கு ஆர்வம் உண்டாயிற்று. இன்னும் பலர் என்ன கூறுகிறார்கள் என்றால், எனக்கு எங்கே சென்றாலும் தடைகளும் தாமதமுமாகின்றன. ஒருமுறைக்கு பலமுறை ஒரு வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எளிதாக முடியக்கூடிய காரியங்கள் கூட எனக்கு மிகவும் தாமதமாகவோ அல்லது அந்த காரியம் நடக்காமல் போகும்படியாகவோ இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றும் கேட்கின்றனர்.

ஏன் இந்த தடை?

நான் இதனை ஜாதகரீதியாக அணுகும் போது ஒருவருக்கு,  ஜாதகத்திலுள்ள தொழில் ஸ்தானம் தனஸ்தானம், லாப ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் கிரகங்கள் என்று பார்க்கும் பொழுது தனகாரகனாகிய குரு பகவானின் நிலை மற்றும் அந்த தனஸ்தானாதிபதியின் நிலை அந்த லாப ஸ்தான அதிபதியின் நிலை போன்றவற்றையும் கொண்டுதான் பார்த்துச் சொல்ல முடியும். மேலும், ஜாதகப்படி ஒரு சிலருக்கு சொந்த தொழில் யோகம் இருக்காது. அவர்கள் வேலைக்கு சென்றால்தான் மிகவும் சிறப்பாக இருப்பார்கள்.

ஆனால், எனக்கு அந்த தொழில் நிபுணத்துவம் நன்றாக தெரியும் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள்  சொந்த தொழிலை ஆரம்பித்து தோல்வி அடைகின்றனர்.  சொந்த தொழில் செய்ய வேண்டியவர்கள் ஒரு சிலர் வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அவருடைய ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால் அந்த ஜாதகத்தில் சொந்த தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும் என்பதை கண்டுகொள்ள முடியும். ஆனால், அவர்கள் அதனை செய்யாமல் வேலைக்கு சென்று கொண்டிருப்பார்கள். முதலில் நமக்கு வேலைக்கு செல்வது நல்லதா அல்லது சொந்த தொழில் செய்வது நல்லதா என்பதை முதலில் ஜாதகத்தில் பார்த்துக் கொண்டு நாம் சரியாக செய்தால் நிச்சயமாக நமக்கு அதில் லாபம் கிடைக்கும்.

மேலும் இந்த தடைகள் என்று சொல்வதற்கு காரணங்கள் இந்த நாக தோஷம் உள்ள ஜாதகங்களாக இருக்கலாம் மற்றும் இன்னும் சிலருக்கு அந்த கிரகங்களுடைய தாக்கங்கள் மறைவு ஸ்தானங்களில் இருப்பது போன்ற காரணங்களால் தன்னுடைய தொழிலில் லாபங்கள் ஏற்படாமல் இருக்கலாம்.

இன்னும் சிலருக்கு ஆங்காங்கே பணம் கொடுத்து பணம் வராமல் முடங்கி கிடப்பதற்கும் ஜாதகம் ஒரு காரணமாகிறது.  இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் பார்க்கும் பொழுது உங்களுடைய ஜாதகத்தில் யோகாதிபதி நிலை எப்படி உள்ளது என்பதை நன்கு அறிய வேண்டும். முதலில் ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், அவரின் தனஸ்தானம் எந்த நிலையில் உள்ளது, லாபஸ்தானம் எந்த நிலையில் உள்ளது, பாக்கியஸ்தானம் எந்த நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டும் மற்றும் அதில் உள்ள இடங்களி,ன் கிரகங்களின் தன்மை எப்படி உள்ளது என்பதையும் அறிந்து கொண்டு, எது யோகத்தை தரக்கூடிய தன்மையை அதாவது நவாம்ச மற்றும் அஷ்டவர்க பரல்கள் எவ்வளவு உள்ளது. போன்றவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு அந்த கிரகத்திற்கு உண்டான கற்களையோ அல்லது அந்த கிரகத்திற்கு உண்டான மந்திரங்களையோ படிக்கும் போது நிச்சயமாக அவர்களுக்கு யோகங்கள் வந்து சேரும் என்பது உண்மை.

 உதாரணமாக, ஒருவருக்கு ரிஷப ராசி என்று எடுத்துக்கொள்வோம். அந்த ராசியின் கல் வைரம் எனவே, அவர்களுக்கு வைரக்கல்லை போடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  வைரக்கல்லால் நிச்சயமாக எனக்கு யோகம் வந்துவிடும் என்று நம்புகின்றனர். ஆனால் நிச்சயமாக யோகம் வராமல் மாறாக அந்த நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.  இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது அவர் ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் தன்மை மிகவும் மோசமான நிலையில் இருந்திருக்கலாம்.  அல்லது  இவருடைய ஜாதகத்தில் அந்த கிரகத்தின் நிலை அதாவது பாதகமாக அல்லது பகை கிரகமாக இருந்திருக்கலாம். இதுவே காரணமாகும்.

– (தொடரும்)