அழிவு வைத்தியம்

பதிவு செய்த நாள் : 14 ஏப்ரல் 2019

சீன அரசு, தன் நாட்டு பாரம்பரிய மருத்து வத்தை பரப்ப, பல நாடுகளில் மருத்துவமனை களை கட்ட ஆரம்பித்திருக்கிறது. இதனால், சீன மருத்துவத்திற்கு மவுசு எகிறிவிட்டது. அதேசமயம், புலி, காண்டாமிருகம், சுறா என, பல விலங்குகளின் உடல் பாகங்களுக்கு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதாக, சீன வைத்திய சுவடிகளில் எழுதப்பட்டு இருக்கிறது. எனவே, அழியும் ஆபத்திலுள்ள பல காட்டுயிர்களை, சீன வைத்தியத்திற்காக கள்ள வேட்டையாடும் கும்பல்கள் உலகெங்கும் பெருகியுள்ளதாக, உலக வனவுயிர் நிதியம் எச்சரித்துள்ளது.