சினி பேட்டி : மனக்குறையை போக்கிய டீம்! – சஹானா

பதிவு செய்த நாள் : 14 ஏப்ரல் 2019

*     ‘‘அழகு’’ சீரியலில் ரேவதி – ‘‘தலை வாசல்’’ விஜய் ஆகியோரின் மகள் ‘காவ்யா’வாக நடிப்பவர், சஹானா.

*     சஹானா ஷெட்டி என்பது முழு பெயர்.

*     ஆந்திரா பூர்வீகம்.

     ஜூன் 10ல், கோவையில் பிறந்தார்.

* அப்பா – பாரதி, அம்மா – தில்ரூபா. அவர்களுக்கு ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’வாக பிறந்தவர்.

* அப்படி சிங்கிளாக பிறந்ததற்கு மிகவும் வருத்தப்பட்டார் சஹானா. ஆனால், அவருடைய இந்த மனக்குறையை போக்கியிருக்கிறது ‘‘அழகு’’ டீம். அனைவரும் குடும்பத்தினரை போல பழகுவதால் அவருடைய துயரம் போயே போச்சு.

* அவருடைய கல்வி தகுதி, பிபிஏ படிப்பும், வசிப்பிடமும் சென்னை.

* விஸ்காம் படிக்கத்தான் ஆசைப் பட்டார். ஆனால், வீட்டில் ‘நோ’ சொல்லிவிட்டார்கள்.

* அதே போல, சினிமாவில் நடிக்கவும் அவருக்கு ஆசை. அதற்கும் ‘நோ’ என்றே வீட்டிலிருந்து பதில் வந்தது.

* அவர் ஒரு இசைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், சின்ன வயதிலிருந்தே இசையை கற்றுக் கொண்டு வரு கிறார்.

* சினிமாவில் நடிப்ப தற்கு ‘நோ’ சொன்ன பெற்றோரின்  மனதை எப்படியோ மாற்றி ‘எஸ்’ சொல்ல வைத்து விட்டார். அதன் பிறகே 2015ல் ‘‘அரூபம்’’ படத்தில் அறிமுகமானார்.

* அதையடுத்து ‘‘கொக்கிரகுளம்’’, ‘‘143’’, ‘‘சயனம்’’, ‘‘சலீம்’’, ‘‘போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்’, ‘‘இவளுங்க இம்சை தாங்க முடியலே’’, ‘‘இவன் ஏடாகூட மானவன்’’, ‘‘உன்னால் என்னால்’’, ‘‘தாரை தப்பட்டை’’ போன்ற படங்கள் ‘மளமள’ வென அவருக்கு குவிந்தன.

* ‘‘பகல் நிலவு’’ சீரியலில் ‘‘தமிழ் செல்வி’ என்கிற நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார்.

* ‘அதிர்ஷ்டலட்சுமி’, ‘கனெக் ஷன்’ ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.

* பாடுவது அவருடைய ஹாபி.

* கமல், ஸ்ரீதேவி ஆகி யோரின் தீவிர ரசிகை.

* ‘‘பல படங்களில் நடித்தும் கிடைக்காத புகழ் ‘‘அழகு’’ சீரியலில் எனக்கு கிடைத்திருக்கிறது!’’ என்று சொல்லி பூரிக்கிறார்.

 – இருளாண்டி