தொண்­டை­யில் சிக்­கிய போண்டா...!

பதிவு செய்த நாள் : 12 ஏப்ரல் 2019

கோவை மாவட்­டம், பொள்­ளாச்சி, முனி­சி­பல் உயர்­நி­லைப்­பள்­ளி­யில், 1951ல், 7ம் வகுப்பு படித்­தேன்.

என் இணை­பி­ரியா நண்­பன் பழநி, வீட்­டில் செய்­யும் பல­கா­ரங்­களை எடுத்து வரு­வான்; நானும் அப்­ப­டியே! சேர்ந்து சாப்­பி­டு­வோம். அன்று, இறை வணக்க கூட்­டம் முடிந்து, வகுப்­ப­றைக்கு வந்­தோம்; வகுப்­பா­சி­ரி­யர் வர­வில்லை. அவன், இனிப்பு போண்டா எடுத்து வந்­தி­ருந்­தான். இதை மோப்­பம் பிடித்த மாண­வர்­கள், 'எனக்­குடா... எனக்­குடா' என்று, ஆளா­ளுக்கு எடுத்­துக் கொண்­ட­னர்.

எனக்கு, எது­வும் கிடைக்­க­வில்லை. கையில் எஞ்­சி­யி­ருந்த, ஒரே போண்­டாவை, என் வாயில் திணித்­தான், பழநி. அது, என் தொண்­டை­யில் சிக்­கி­யது. உள்­ளே­யும் போகா­மல், வெளி­யே­யும் வர­மு­டி­யா­மல், இக்­கட்டு ஏற்­பட்­டது. இதை பார்த்த பழனி, அழ ஆரம்­பித்­தான். மற்ற மாண­வர்­கள் கையை பிசைந்­த­படி நின்­ற­னர். பேச­வும், மூச்சு விட­வும் முடி­யா­மல் தவித்­தேன்.

அங்கு வந்த உடற்­கல்வி ஆசி­ரி­யர் ராபின்­ச­னி­டம், ஒரு மாண­வன் இதைக் கூறி­னான். அவர், என் பிட­ரி­யில் ஒரு அடி விட்­டார். தொண்­டைக்­குள் சிக்­கி­யி­ருந்த இனிப்பு போண்டா, வகுப்­ப­றை­யில் உருண்­டோ­டி­யது. அவ­ரது சம­யோ­சி­தத்­தால் பிழைத்­தேன்.

இப்­போது, 75 வய­தா­கி­றது. அந்த ஆசி­ரி­யரை மறக்க முடி­யா­மல், இதை எழு­து­கி­றேன்.

–- சேது­ரா­மன், சென்னை.