‘பின்­னால்’ வந்த கஷ்­டம்!

பதிவு செய்த நாள் : 12 ஏப்ரல் 2019

ஈரோடு மாவட்­டத்­தில் உள்ள, கோபி­செட்­டிப்­பா­ளை­யம், வைர­விழா மேல்­நி­லைப்­பள்­ளி­யில், 7ம் வகுப்பு படித்­தேன். அப்­போது, நடந்த நிகழ்வு இது!

எங்­கள் தமி­ழா­சி­ரி­யர், கே.கே.சுப்­ர­ம­ணி­யம், நகைச்­சு­வை­யா­கப் பேசி, பாடம் நடத்­து­வார்.

அவ­ரது பாட­வே­ளையை எதிர்­பார்த்து காத்­தி­ருப்­போம். எங்­கள் வகுப்­பில், செந்­தில்­கு­மார் என்ற மாண­வன், கடும் குறும்பு செய்­வான். பாடம் நடத்­தும் போது, சேட்­டை­கள் செய்து சிரிக்க வைப்­பான்.

அவன் குறும்­பு­க­ளைப் பார்த்த தமி­ழா­சி­ரி­யர், 'இப்­ப­டியே குறும்பு செய்­தால், பின்­னால் கஷ்­டப்­ப­டுவ...' என்­றார்.

'பின்­னால் கஷ்­டம் வரும் போது பார்த்­துக்­க­லாம்; இப்போ ஜாலியா இருக்­க­லாம்...' என்று கூறி அலட்­சி­யம் செய்­தான்.

தொடர்ந்து, சில நாட்­க­ளாக, அவன் பள்­ளிக்கு வர­வில்லை. ஒரு வாரத்­துக்­குப் பின் வந்­தான். அவ­னி­டம், விசா­ரித்­தார், தமி­ழா­சி­ரி­யர்.

'ஐயா... உட்­கா­ரும் இடத்­தில், சிரங்­குப்­புண் வந்­து­டுச்சு.... அத­னால தான், வர முடி­யல...' என்­றான்.

'பார்த்­தாயா... நான் கூறி­யது போல, உனக்கு, 'பின்­னால்' கஷ்­டம் வந்­து­டுச்சு...' என்று, சிரித்­த­படி கூறி­னார். வேத­னையை மறந்து, செந்­தி­லும் எங்­க­ளு­டன் சிரித்­தான்.

இப்­போ­தும், யாரா­வது, 'பின்­னால் கஷ்­டப்­ப­டுவ' என்­றால், வாய் விட்டு சிரித்து விடு­வேன்!

–- ஏ.எஸ்.யோகா­னந்­தம், ஈரோடு.