இந்தியாவின் பாரம்பரிய ரயில்கள்!

பதிவு செய்த நாள் : 12 ஏப்ரல் 2019


இந்தியாவின், பாரம்பரிய ரயில்களாக டெக்கான் குயினும், பிளையிங் ராணியும் கருதப்படுகின்றன. இன்றும், ஓடிக்கொண்டிருக்கின்றன.

பிளையிங் ராணி

பிளையிங் ராணி, 1906ல், மும்பை - சூரத் இடையே, பயணிகள், ரயிலாக ஓடத் துவக்கியது. இரண்டாம் உலகப் போர் உட்பட, பல காரணங்களுக்காக, அவ்வப்போது நிறுத்தப்பட்டது.

கடந்த, 1950 நவம்பர் முதல், தொடர்ந்து ஓடுகிறது. மும்பை - சூரத் இடையே உள்ள, 263 கி.மீட்டரை, ௪:௪௦ மணியில் சென்று அடைகிறது. இடையே, 57 ரயில்வே நிலையங்கள் இருந்தாலும், 12ல் மட்டுமே, நின்று செல்கிறது.

சூரத்தில், காலை, 5:25க்கு புறப்பட்டு, மும்பைக்கு, 10:10க்கு வருகிறது; மும்பையில், மாலை, 5:55க்கு புறப்பட்டு, சூரத்தை, 9:35க்கு அடைகிறது.

இன்ஜினுடன் சேர்த்து, 19 பெட்டிகள்; இதில், இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி அல்லாத, 12 பெட்டிகளும் அடக்கம்.

டெக்கான் குயின்!

இந்த ரயில், 1930 ஜூனில் துவக்கப்பட்டது. இந்தியாவில் வசித்த ஆங்கிலேயர்கள், பூனேயில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்து கொள்ள, ஏதுவாக, வாரம் ஒரு முறை ஓடியது.

இப்போது, மும்பை - புனா இடையே தினமும், ஓடுகிறது. இதற்கு, பல சிறப்புகள் உண்டு!

* இந்தியாவின் முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்

* பெட்டிகளுக்கு இடையேயான பாதை, இதில் தான் அறிமுகமானது

* பெண்களுக்கு, தனி பெட்டி, முதன் முதலாக இணைக்கப்பட்டது

* முதலில் சாப்பாட்டு வசதி செய்யப்பட்டது

* மூன்றாவது வகுப்பு, முதலில் அறிமுகமானதும் இதில் தான்

* பயண துாரம், 192.2 கி.மீ., நேரம், 3:10 மணி

* கர்ஜாத் ரயில் நிலையத்திலிருந்து, மலையில் ஏறுவதால், ரயிலின் பின்னால், பேங்கர் இன்ஜின் இணைக்கப்படும். மலையேறும் போது, ரயில், பின்னால் நகராமல், இது காக்கும்.

–- பட்டு