ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 10–4–19

09 ஏப்ரல் 2019, 06:52 PM

ரீமிக்­சில் ஈடு­பா­டில்லை!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

‘அவர் எனக்கே சொந்­தம்’ என்ற படத்­தில் முதன்­மு­த­லாக ஒரு பாடலை ரீமிக்ஸ் முறை­யில் பதிவு செய்­தி­ருந்­தார். ஆனால், இதில் எனக்கு ஈடு­பாடே இல்லை என்­றும், இனி இது­போல் செய்­வதை தவிர்த்­தி­டு­வேன் என்­றும் ஒரு பேட்­டி­யில் கூறி­யி­ருக்­கி­றார். முத்­து­ரா­மன் நடித்த ‘ஆளுக்­கொரு ஆசை’ படத்­தில் வரும் “கணக்கு பார்த்து காதல் வந்­தது” பாடல் மிக பிர­ப­லம்.

அதே போல ஜெய்­சங்­கர் நடித்த அவர் ‘எனக்கே சொந்­தம்’ படத்­தில் வரும் ‘‘குதி­ரை­யில் நான் அமர்ந்­தேன்’’ பாடலை மிக அரு­மை­யாக தந்­தி­ருப்­பார்.

இவற்­றை­யெல்­லாம் விட தேங்­காய் சீனி­வா­சன் நடித்த ‘மாரி­யம்­மன் திரு­விழா’ படத்­தில் ‘‘சிரித்­தாள் சிரித்­தேன் அவள் ஒரு ராஜ­கு­மாரி’’ பாடலை காபி ராகத்­தில் அமைத்­தி­ருப்­பார். டி.எம்.எஸ்­ஸின் குர­லில் அதில் ஒரு மிடுக்­கும் வீரி­ய­மும் சுடர்­வி­டும்.

இளை­ய­ராஜா இசை­ய­மைத்த முதல் காமெடி படம் இந்த ஆண்­டில்­தான் வெளி­வந்­தது. டி.என். பாலு இயக்­கத்­தில் வெளி­யான ‘ஓடி விளை­யாடு தாத்தா’ என்ற படம்­தான் அது. இந்த படம் சோபியா லாரன்ஸ் நடித்த ‘ரோமன் ஹாலிடே’ என்ற ஆங்­கி­லப்­ப­டத்­தின் தழு­வல்.

இதே ஆண்­டில் ரஜி­னி­காந்த் நடித்து வெளி­வந்த ‘புவனா ஒரு கேள்­விக்­குறி’ படத்­தில் மூன்று பாடல்­களை வார்த்­தெ­டுத்­தி­ருப்­பார். இப்­போ­தும் அந்த பாடல்­களை கேட்­கும் போது ஏதோ ஒரு­வித சாந்­தம் மன­தில் இழை­யோ­டும்.

‘‘ராஜா என்­பார்.. மந்­திரி என்­பார்... ராஜ்­ஜி­யம் இல்லை ஆள...’’

‘‘பூந்­தென்­றலே... நல்ல நேரம் காலம் சேரும்...’’

‘‘விழி­யிலே... மலர்ந்­தது... உயி­ரிலே... கலந்­தது...’’

ஒரு ஜென் துறவி காட்டு வழியே போய்க்­கொண்­டி­ருந்­தார். இரவு. நல்ல குளிர். வழி­யில் தென்­பட்ட ஒரு பவுத்த மடா­ல­யத்­தில் தங்­கிக்­கொள்ள அனு­மதி கேட்டு, படுத்­தார். நள்­ளி­ரவு குளிர் தாங்­க­வில்லை. மடா­ல­யத்­தில் இருந்த மரத்­தா­லான சில புத்­தர் சிலை­களை எடுத்­துக் கொளுத்­திப் போட்­டுக் குளிர் காயத் தொடங்கி விட்­டார்.

அந்த மடத்­தில் இருந்த துற­வி­க­ளுக்­கெல்­லாம் கோபம் வந்­து­விட்­டது. இதென்ன அக்­கி­ர­மம்? நீயெல்­லாம் ஒரு பவுத்த துற­வியா? புத்­தர் சிலையை எரித்தா குளிர் காய்­வாய்?

போட்­டுக் குத­றி­விட்­டார்­கள் அந்த துற­வியை.

அவர் சொன்­னார்: “எனக்­குள்ளே இருக்­கும் புத்­த­ருக்கு ரொம்­பக் குளிர் வந்­து­விட்­டது. அத­னால் இந்த கட்­டை­களை எரித்து அவ­ருக்கு வெப்­பம் கொடுத்­தேன். உங்­கள் புத்­தர் இந்த மரக்­கட்­டை­யில்­தான் இருக்­கி­றார் என்று எனக்­குத் தெரி­யாது!”

இறை­வ­னோடு இரண்­ட­றக் கலத்­தல் என்­பதை இத­னைக் காட்­டி­லும் அழ­காக வேறெப்­ப­டிச் சொல்ல முடி­யும்? இதைத்­தான் ‘அகம் பிரம்­மாஸ்மி’ என்று அத்­வை­த­மும் சொல்­கி­றது.

இளை­ய­ரா­ஜா­வின் இறை­வன் இசை­யாக இருக்­கி­ற­ப­டி­யால் அவர் அத­னோடு இரண்­ட­றக் கலந்து விடு­கி­றார். விளைவு, இசை­யின் உன்­ன­தம்!

இப்­போது நீங்­கள் பதில் சொல்­ல­வேண்­டிய கேள்வி: உங்­க­ளு­டைய இறை­வன் யார்? நீங்­கள் அவ­னோடு இரண்­ட­றக் கலக்க இது­வரை என்ன முயற்சி எடுத்­தி­ருக்­கி­றீர்­கள் ? எத்­த­னைக் காலம் தவம் செய்­தி­ருக்­கி­றீர்­கள் ?

இந்த இடத்­தில் இன்­னொரு ரக­சி­யத்­தை­யும் சொல்­லி­வி­டு­கி­றேன். உன்­ன­தத்தை நோக்­கிய பய­ணத்­தில் ஆரம்­பம்­தான் பேஜார். வலி­க­ளும் வேத­னை­க­ளும் சரி­வு­க­ளும் வீழ்ச்­சி­க­ளும் தோல்­வி­க­ளும் அவ­மா­னங்­க­ளும் முத­லில் கொஞ்ச காலத்­துக்­குத்­தான்.

ஒரு முறை அந்த உய­ரத்­தைத் தொட்டு விட்­டீர்­க­ளென்­றால், பிறகு கீழே விழ மாட்­டீர்­கள். அதா­வது, நீங்­கள் அடைந்த உன்­னத நிலை உங்­களை அத்­தனை சுல­பத்­தில் கீழே விழ வைக்­காது.

ஏனென்­றால், முன்பே சொன்­னது போல் உன்­ன­தம் என்­பது ஒரு மனப்­ப­யிற்சி. ஒரு மாண­வன் வரு­டம் முழுக்க தன் கணக்­குப் பாடங்­களை தின­மும் திரும்­பத் திரும்­பப் போட்­டுப் பார்த்து, தவ­று­க­ளைக் களைந்து, பற்­பல மாதி­ரித் தேர்­வு­கள் எழு­திப் பார்த்து, பார்­மு­லாக்­களை உருப்­போட்டு, புத்தி முழு­வ­தும் கணக்­கா­கவே ஆகி­வி­டு­கி­றான் என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள்.

இறு­தித் தேர்­வில் அவ­னால் பெயில் ஆக முடி­யுமா? அவன் கணக்­கைக் காத­லிக்­கவே தொடங்கி விடு­வான். வேண்­டு­மா­னால், நூற்­றுக்கு நூறு வாங்­கு­வ­தற்கு பதில் தொண்­ணுாற்றி ஒன்­பது வாங்­க­லாம். கவ­னக்­கு­றை­வாக ஏதா­வது அரைப் பிழை, கால் பிழை செய்­ய­லாம். தோற்­க­மாட்­டான் அல்­லவா?

அது­தான். அவ்­வ­ள­வே­தான். உன்­ன­தத்தை நோக்­கிய பயிற்­சி­கள்­தான் கஷ்­டமே தவிர, அடைந்­து­விட்­டால் அதன்­பி­றகு விழு­வது அத்­தனை சுல­ப­மல்ல! தோற்றே தீர வேண்­டும் என்று திட்­ட­மிட்­டுத் தோற்­றால்­தான் உண்டு.