சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 387 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 10 ஏப்ரல் 2019

நடி­கர்­கள் : சேரன், ஜெய­பி­ர­காஷ், நரேன், செல்வா, ஒய்.ஜி. மகேந்­திரா, யுகேந்­தி­ரன், ஜி. மாரி­முத்து, இ. ராம்­தாஸ், சுனில் சவுத்ரி, மாணிக்க விநா­ய­கம், ஷங்­கர், லட்­சுமி ராம­கி­ருஷ்­ணன், ஸ்ருஷ்டி டாங்கே, தீபா ஷா, இனியா மற்­றும் பலர். இசை  :    கே, ஒளிப்­ப­திவு : சத்யா, எடிட்­டிங் : காகின், தயா­ரிப்பு : கல்­பாத்தி எஸ். அகோ­ரம், கல்­பாத்தி எஸ். கணேஷ், கல்­பாத்தி எஸ். சுரேஷ்.

திரைக்­கதை, இயக்­கம் : மிஷ்­கின்.

ஓர் மழை இர­வில் ஆட்டோ பிடிக்க காத்­தி­ருக்­கும் இளம்­பெண், ஆட்டோ ஒன்­றில் மயங்­கி­யி­ருக்­கும் பெண்ணை கண்டு போலீ­சுக்கு தக­வல் தர முயல்­கி­றாள். ஆனால் ஆட்டோ ஓட்­டு­ந­ரால் கடத்­தப்­ப­டு­கி­றாள்.

புது வரு­டத்­தின் முதல் நாளில் கடற்­கரை, பூங்கா என மர்ம அட்­டைப்­பெட்­டி­கள் கேட்­பா­ரில்­லா­மல் கிடக்­கின்­றன. போலீஸ் திறந்து பார்க்க ஆண்­க­ளின் வெட்­டப்­பட்ட கைகள் கிடைக்­கின்­றன. வழக்கு சிபி­சி­ஐ­டி­யைச் சேர்ந்த இன்ஸ்­பெக்­டர் ஜே.கே. (சேரன்)விடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கி­றது. அவ­ருக்கு உத­வி­யா­ளர்­க­ளாக பிர­காஷ் (ஷங்­கர்), தமிழ்­செல்வி (தீபா ஷா) இருக்­கி­றார்­கள். நேர்­மை­யான நடத்­தை­யால் பிரச்­னை­களை சந்­திக்­கும் ஜே.கே. ஆறு மாதங்­க­ளுக்கு முன் காணா­மல் போன தன் தங்­கையை தேடிக்­கொண்­டி­ருக்­கி­றார்.

அரசு மருத்­து­வ­மனை பிண­வ­றை­யில், வெட்­டப்­பட்ட கைகளை ஆரா­யும் டாக்­டர். ஜூடாசை (ஜெய­பி­ர­காஷ்) சந்­திக்­கி­றார்­கள். ஒரு ஜோடி கைகள் ஆட்டோ ஓட்­டு­நர் மூர்த்­தி­யு­டை­யது என்று தெரிந்து விசா­ர­ணையை தொடர்ந்து ராஜ­மா­ணிக்­கம் எனும் நபரை தேடு­கி­றார்­கள். ராஜ­மா­ணிக்­கம் துன்­பு­றுத்­தப்­பட்டு அவ­னது கைகள் வெட்­டப்­பட்டு முந்­தைய சம்­ப­வங்­கள் போல அட்­டைப்­பெட்­டி­யில் பொது இடத்­தில் கிடைக்­கி­றது. ராஜ­மா­ணிக்­கம் கடை­சி­யாக சந்­தித்த ரகு­வைத் தேடிப்­போக, ரகு­வும் கொல்­லப்­பட, கொலை­யா­ளியை துரத்­தும் ஜே.கே. அவனை தவற விடு­கி­றார். ரகு­வோடு தங்­கி­யி­ருந்த பிரிட்­டோ­வைப் பற்றி விசா­ரிக்க வழக்கு டாக்­டர். புரு­ஷோத்­த­ம­னின் வழக்­கோடு தொடர்­பா­கி­றது.

இதற்­கி­டையே பச்­சை­நிற குவா­லிஸ் வண்டி பெண்ணை கடத்த முய­லும் ஆட்டோ ஓட்­டு­னரை தடுத்து அவனை கடத்­திச் செல்­கி­றது.

உய­ர­தி­கா­ரி­க­ளின் அனு­ம­தி­யோடு புரு­ஷோத்­த­ம­னின் வழக்கை மீண்­டும் விசா­ரிக்­கும் ஜே.கேவுக்கு, செப்­டம்­பர் மாதத்­தில் குடும்­பத்­தோடு தற்­கொலை செய்­து­கொண்ட புரு­ஷோத்­த­ம­னின் வழக்­கில் போலீ­சா­ரின் தக­வல்­கள் வேறா­க­வும், தெரு­வில் வசிப்­ப­வர்­கள், நண்­பர்­கள் சொல்­லும் தக­வல்­கள் வேறா­க­வும் இருக்­கின்­றன. புரு­ஷோத்­த­ம­னின் மகள் சுஜா­வும், ஜே.கே.வின் தங்­கை­யும் ஒரே நாளில் காணா­மல் போனதை தமிழ்ச்­செல்வி கண்­டு­பி­டிக்­கி­றாள். முன்­னர் அந்த வழக்கை விசா­ரித்த இன்ஸ்­பெக்­டர் இசக்­கி­முத்­து­வி­டம் (ஜி.மாரி­முத்து) தக­வல்­கள் சேக­ரிக்­கி­றார்­கள். துரைப்­பாண்டி (மாணிக்க விநா­ய­கம்) தனது துணிக்­க­டை­யில் பெண்­கள் (சுஜா­வும் அதில் ஒரு­வர்) உடை மாற்­று­வதை தனது அறை­யி­லி­ருந்து பார்த்­த­தாக புகார் அளிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அவ­ரது மேனே­ஜர் நாத­முனி அந்­தப் பழியை ஏற்­றுக்­கொள்­கி­றான்.

திரி­சங்­கு­வும் அவ­னது கூட்­டா­ளி­க­ளும் இளம்­பெண்­களை கடத்தி, போதை மருந்து கொடுத்து ‘பீப் ஷோ’ நடத்தி அதன்­மூ­லம் துரை­பாண்டி மற்­றும் நண்­பர்­க­ளி­ட­மி­ருந்து ஏரா­ள­மான பணத்தை பெறு­கின்­ற­னர். இத­னால் பாதிக்­கப்­ப­டும் சுஜா தற்­கொலை செய்து கொள்ள, மக­ளது மர­ணத்­தால் கொதிக்­கும் சுஜா­வின் பெற்­றோர் புரு­ஷோத்­த­மன், அன்­ன­பூ­ரனி மற்­றும் நண்­பர் ஜூடாஸ் பழி­வாங்க முடி­வெ­டுக்­கி­றார்­கள். குடும்­பத்­தோடு இறந்­த­தாக நாட­க­மாடி, திட்­ட­மிட்டு குற்­ற­வா­ளி­களை ஒவ்­வொ­ரு­வ­ராக கடத்தி தண்­டிக்­கி­றார்­கள்.

ஜே.கேவின் தங்­கையை விடு­விப்­ப­தற்­காக ஜே.கே. பொறுப்­பி­லி­ருக்­கும் சுஜா­வின் தம்பி நிஷாந்தை (சுனில் சௌத்ரி) தன்­னி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு திரி­சங்கு மிரட்­டு­கி­றான். ஜே.கேவிற்­காக அவ­னது உத­வி­யா­ளர்­கள் நிஷாந்தை விடு­விக்க, இரு தரப்­பும் பின்னி மில்­லில் சந்­திக்­கி­றது. துரை பாண்டி மற்­றும் நண்­பர்­கள் குரு­டாக்­கப்­பட்­டி­ருக்க, கடத்­தப்­பட்ட மற்­ற­வர்­கள் நாக்கு அறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். இசக்கி முத்­து­வை­யும் அவ­னது கூட்­டா­ளி­க­ளை­யும் கொல்­லும் புரு­ஷோத்­த­ம­னும், அன்­ன­பூ­ர­ணி­யும் திரி­சங்­கு­வி­ட­மி­ருந்து ஜே.கேவின் தங்­கையை தங்­க­ளது மக­ளாக எண்ணி காப்­பாற்­று­வ­தற்­காக உயி­ரி­ழக்­கின்­ற­னர். ஜே.கே. திரி­சங்கை கொல்­கி­றான்.

குற்­ற­வா­ளி­க­ளுக்கு சட்­டப்­படி உரிய தண்­டனை கிடைக்க, குடும்­பத்­தையே இழந்­து­விட்ட நிஷாந்தை நீதி­மன்­றத்­தில் ஒப்­ப­டைக்­கா­மல் வேறு பெய­ரில் வெளி­நாட்­டுக்கு அனுப்பி வைக்­கி­றான் ஜே.கே. பெற்­றோ­ரின் தியா­கத்­திற்கு அர்த்­தம் தேடு­மாறு நிஷாந்தை வாழ்த்தி அனுப்பி வைக்­கும் ஜே.கே. மற்­றும் டீமிற்கு ஆறு மாதத்­திற்­கான சஸ்­பென்ட் ஆர்­டர் கிடைக்­கி­றது.