ராமநவமி வழிபாடு!

பதிவு செய்த நாள் : 09 ஏப்ரல் 2019

பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது ராமநவமி. இந்நாளில், பட்டாபிஷேக கோலத்தில் உள்ள ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபட வேண்டும். பிரிந்த தம்பதி ஒன்று சேர, இந்நாளில் சுந்தர காண்டம் படிப்பது நல்லது.நன்மை தரும் பாட்டு!

கம்பராமாயணத்திலுள்ள

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

என்ற பாடலை ராமநவமியன்று பாட வேண்டும்.

ராமனின் பெயரை சொன்னால் நன்மையும், செல்வ வளமும் உண்டாகும். தீமையும், பாவமும் அழிந்து போகும். பிறவி, மரணம் இரண்டும் நீங்கி பிறவி சுழலில் இருந்து விடுபடலாம் என்பது இந்தப் பாடலின் பொருள்.