பிசினஸ் : குறைந்த முதலீடு அதிக லாபம்...! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 04 ஏப்ரல் 2019

சொந்­த­மா­கத் தொழில் தொடங்க வேண்­டும் என்­பது பெரும்­பா­லா­னோ­ரின் கன­வா­கும். குறைந்த முத­லீட்­டில் அதி­க­மான லாபம் ஈட்­டக்­கூ­டிய வகை­யி­லான தொழில்­கள் குறித்த ஐடி­யாக்­கள் கிடைத்­தால் "ககக..போ" என்­கின்ற பாணி­யில் கருத்­துக்­க­ளைக் கச்­சி­த­மாய்க் கவர்ந்து போக நீங்க தயாரா? இதோ ஐடி­யாக்­களை அள்­ளித் தெளிக்க நாங்க தயார்.  நம்­மு­டைய வீட்­டில் அல்­லது வாட­கைக் கட்­ட­டத்­தில் சிறிய அள­வி­லான உற்­பத்­தித் தொழில்­க­ளைத் தொடங்­க­லாம். மிகக் குறைந்த முத­லீட்­டில் உற்­பத்­திக்­கான சாத­னங்­கள் அல்­லது இயந்­தி­ரங்­களை வாங்­கிக் கொள்­ள­லாம். இயந்­தி­ரங்­களை வாட­கைக்கு எடுத்­துக் கொள்­வ­தன் மூலம் உற்­பத்­திக்­கான முத­லீட்­டைக் குறைத்­துக் கொள்­ள­லாம். குறைந்த முத­லீட்­டில் செய்­யக்­கூ­டிய இரு­பது வகை­யான உற்­பத்­தித் தொழில்­கள் குறித்து இங்­குப் பார்க்­க­லாம். சிறிய அள­வி­லான உற்­பத்­தித் தொழில்­க­ளுக்­கான ஐடி­யாக்­கள்....

 பேப்­பர் தயா­ரித்­தல்

பேப்­பர் தயா­ரிக்­கும் தொழி­லைக் குறைந்த அள­வி­லான முத­லீட்­டில் செய்ய இய­லும். பேப்­ப­ருக்­கான தேவை­யும் அதற்­கான சந்­தை­யி­டல் வாய்ப்­பும் நாளுக்கு நாள் பெரு­கிக்­கொண்டே வரு­கி­றது. கல்­வித் துறை மற்­றும் பிற தொழில் துறை­க­ளில் பேப்­ப­ருக்­கான தேவை­கள் அதி­க­ரித்­துக் கொண்­டுள்­ளன. அத­னால் பேப்­பர் தயா­ரிக்­கும் தொழி­லில் வெற்­றிக்­கான வாய்ப்­பு­க­ளும் லாபம் ஈட்­டு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளும் அதி­கம்.

பேப்­பர் தயா­ரிப்­ப­தற்கு முன்பு, அத­னு­டைய அளவு மற்­றும் தேவை­யைச் சரி­யாக நிர்­ண­யம் செய்து கொள்­வது முக்­கி­யம். அதற்­கேற்­றார் போலப் பொருத்­த­மான இயந்­தி­ரங்­கள், பிற உற்­பத்­திச் சாத­னங்­கள் மற்­றும் உற்­பத்தி செய்­வ­தற்­கான இடம் ஆகி­ய­வற்­றைத் தெரிவு செய்து கொள்ள வேண்­டும்.

தேவைப்­ப­டும் முத­லீடு : ஒரு லட்­சம் முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை

தேவைப்­ப­டும் பொருட்­கள் :

பேப்­பர் தயா­ரிக்­கும் இயந்­தி­ரம், மூலப்­பொ­ருட்­கள், தேவை­யான வேதிப் பொருட்­கள்.    

பைல்­கள் மற்­றும் கவர்­கள் தயா­ரிப்பு

பைல் மற்­றும் பேப்­பர் கவர்­கள் தயா­ரிப்­ப­தும் உற்­பத்தி சார்ந்த எளி­மை­யான சிறந்த சிறு­தொ­ழி­லாக உள்­ளது. கல்வி நிலை­யங்­கள், அஞ்­ச­ல­கங்­கள், வங்­கி­கள், தொழில் நிறு­வ­னங்­கள் போன்ற பல இடங்­க­ளில் பைல்­கள் மற்­றும் பேப்­பர் கவர்­க­ளுக்­கான தேவை அதி­கம். பைல்­கள் மற்­றும் கவர்­கள் தயா­ரிப்­ப­தில் இரண்டு வழி­மு­றை­கள் உள்­ளன. முத­லா­வது முறை, கைக­ளால் தயா­ரித்­தல், இரண்­டா­வது வகை, இயந்­தி­ரங்­க­ளைக் கொண்டு தயா­ரித்­தல். நம்­மு­டைய சூழ­லுக்கு ஏற்ப ஏதா­வது ஒரு முறை­யைப் பின்­பற்­ற­லாம். இயந்­தி­ரங்­கள் மூலம் தயா­ரிப்­பது நலம் பயக்­கும். தேவை­யான முத­லீடு : தோரா­ய­மாக ஒரு

லட்­சம் ரூபாய்.

தேவைப்­ப­டும் பொருட்­கள் : உற்­பத்தி இயந்­தி­ரம், பேப்­பர் உள்­ளிட மூலப்­பொ­ருட்­கள்.  

 சோப்பு மற்­றும் சல­வைப் பொருட்­கள் தயா­ரிப்பு

சோப்பு மற்­றும் சல­வைப் பொருட்­கள் எப்­பொ­ழு­தும் நிலை­யான விற்­ப­னை­யை­யும், சந்­தைக்­கான தேவை­யை­யும் கொண்­டவை. எனவே, சோப்பு மற்­றும் சல­வைப் பொருட்­கள் உற்­பத்­தி­யில் தயக்­க­மின்றி ஈடு­ப­ட­லாம். இந்­தத் தொழி­லில் ஈடு­ப­டு­வ­தற்கு முன்­னால், தயா­ரிப்பு முறை­க­ளைப் பற்­றிக் கற்­றுக் கொள்­வது அவ­சி­யம். வேதிப் பொருட்­க­ளை­யும், மூலப் பொருட்­க­ளை­யும் மிகச் சரி­யான விகி­தத்­தில் கலக்­கத் தெரிந்­தால் மட்­டுமே நாம் விரும்­பு­கின்ற வகை­யில் உற்­பத்­திப் பொருட்­க­ளைப் பெற முடி­யும். வீட்­டி­லேயே ஒரு குறிப்­பிட்ட பகு­தியை ஒதுக்கி உற்­பத்­தி­யைத் தொடங்­க­லாம் அல்­லது இதற்­கெ­னத் தனி­யான ஒரு இடத்­தைத் தேர்வு செய்து உற்­பத்­தி­யைத் தொடங்­க­லாம்.

தேவை­யான முத­லீடு : சுமார் ஐம்­ப­தா­யி­ரம் ரூபாய் வரை.

தேவைப்­ப­டும் பொருட்­கள் : தயா­ரிப்­புக்­கான வேதிப் பொருட்­கள், பாத்­தி­ரங்­கள், கரண்­டி­கள், பிளாஸ்டிக் பைகள், எரி­வாயு அல்­லது மின் அடுப்பு, கையு­றை­கள், தரா­சு­கள்.  

எண்­ணைய் தயா­ரிப்பு

எண்­ணெய் (ஹேர் ஆயில்) தயா­ரிப்­ப­தும் மிகச் சிறந்த சிறு உற்­பத்­தித் தொழி­லா­கும். குறைந்த முத­லீட்­டில் வீட்­டி­லி­ருந்தே உற்­பத்­தி­யைத் தொடங்­க­லாம். அனை­வ­ரும் அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் பொருள் என்­ப­தால் இதற்­கான தேவை­யும் விற்­ப­னை­யும் அதி­கம். நாம் தயா­ரிக்­கும் எண்­ணெய் பிசு­பி­சுப்­பற்­ற­தா­க­வும் நல்ல வாசனை கொண்­ட­தா­க­வும் இருக்க வேண்­டும். முடி உதிர்­வைத் தடுத்து, கூந்­தல் வளர்ச்­சிக்கு உத­வும் வகை­யில் தகுந்த கூட்­டுப் பொருள்­க­ளோடு எண்­ணெய் தயா­ரிப்­பது நம்­மு­டைய விற்­ப­னையை அதி­கப்­ப­டுத்­தும்.

தேவை­யான முத­லீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவைப்­ப­டும்.

தேவை­யான பொருட்­கள் : எண்­ணெய், மூலி­கைப் பொருட்­கள், வாச­னைப் பொருள், பாட்­டில்­கள் மற்­றும் கலைவை இயந்­தி­ரம்.  

விளை­யாட்­டுப் பொருட்­கள் தயா­ரிப்பு

விளை­யாட்­டுப் பொருட்­கள் தயா­ரிப்­பை­யும் சிறிய முத­லீட்­டில் செய்ய முடி­யும். அதி­கம்­பேர் விரும்பி விளை­யா­டும் விளை­யாட்­டுக்­க­ளோடு தொடர்­பு­டைய பொருட்­க­ளின் தயா­ரிப்­பில் ஈடு­ப­ட­லாம். பந்து, பேட், பேட்­மிண்­டன் ராக்­கெட், கேரம் போன்ற விளை­யாட்­டுப் பொருட்­க­ளைத் தயா­ரிக்­க­லாம். வீட்­டிற்­குள்­ளே­யும் வெளி­யி­லும் இது போன்ற விளை­யாட்­டுக்­களை விளை­யா­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தால் இத்­தொ­ழிலை வெற்­றி­க­ர­மாக நடத்­த­லாம்.

தேவை­யான முத­லீடு : சுமார் 2 இலட்­சம் முதல் 5 இலட்­சம் வரை தேவைப்­ப­டும்.

தேவை­யான  பொருட்­கள் : மூலப்­பொ­ருட்­கள் மற்­றும் இயந்­தி­ரங்­கள்  

பிஸ்­கட் தயா­ரிப்பு

வீட்­டி­லி­ருந்­த­ப­டியே ஏதா­வது ஒரு தொழில் செய்ய நினைப்­ப­வர்­க­ளுக்­குப் பிஸ்­கட் தயா­ரிப்­புத் தொழில் சிறந்­த­தா­கும். இது ஒரு லாப­க­ர­மான சிறு தொழி­லா­கும். பல முன்­னணி நிறு­வ­னங்­கள் பிஸ்­கட் தயா­ரிப்­புத் தொழி­லில் ஈடு­பட்டு வந்­தா­லும், வீட்­டில் தயா­ரிக்­கப்­ப­டும் பிஸ்­கட் வகை­க­ளுக்கு மக்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு உள்­ளது என்­பதை மறுக்க முடி­யாது. ஆரோக்­கி­ய­மா­ன­தா­க­வும் நல்ல சுவை மிக்­க­தா­க­வும் பிஸ்­கட் தயா­ரிக்­கத் தெரிந்­தி­ருந்­தால் இத்­தொ­ழிலை வெற்­றி­க­ர­மா­கச் செய்­ய­லாம். பிஸ்­கட் தயா­ரிப்­புக்­கான பயிற்சி வகுப்­பு­க­ளில் பங்­கேற்­பது நமக்­குத் துணை செய்­யும்.

தேவைப்­ப­டும் முத­லீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை.

தேவைப்­ப­டும் பொருட்­கள் : கோதுமை மாவு, சர்க்­கரை, பொடிப்­ப­தற்­கும் அரைப்­ப­தற்­கும் தேவை­யான கிரை­ண­டர், மிக்சி போன்ற இயந்­தி­ரங்­கள்  

மெழு­கு­வர்த்­தித் தயா­ரிப்பு

மெழு­கு­வர்த்­தித் தயா­ரிப்பு என்­பது, பெரும்­பா­லா­னோர் ஈடு­ப­டும் சிறு உற்­பத்­தித் தொழில் ஆகும். மிக வித்­தி­யா­ச­மான வடி­வ­மைப்­பு­ட­னும், நல்ல வாச­னை­யு­ட­னும் தயா­ரிக்­கப்­ப­டும் மெழு­கு­வர்த்­தி­க­ளுக்கு வர­வேற்­பும் தேவை­யும் அதி­கம். மிகக் குறைந்த முத­லீட்­டில் இத்­தொ­ழி­லைத் தொடங்க முடி­யும்.

தேவை­யான முத­லீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை.

தேவை­யான பொருட்­கள் : மெழுகு, வடி­வ­மைப்பு அச்­சு­கள், வாச­னைப் பொருட்­கள், சூடான மெழு­கி­னைத் தாங்­கு­வ­தற்­கான உப­க­ர­ணங்­கள்  

பந்­து­மு­னைப் பேனா மைக்­கு­ழாய்  தயா­ரிப்பு

பேனாக்­க­ளில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்ப, பந்­து­முனை மைக்­குழா தயா­ரிக்­கும் தொழிலை வீட்­டி­லி­ருந்தே செய்­ய­மு­டி­யும். கல்வி மற்­றும் தொழில் சார்ந்ந சூழ­லில் பேனாக்­க­ளுக்­கான பயன்­பாடு அதி­க­ரித்­துக் கொண்டே உள்­ளது. எனவே, பந்­து­முனை மைக்­கு­ழாய் தயா­ரிக்­கும் தொழில் லாபம் ஈட்­டும் வெற்­றி­க­ர­மான தொழி­லாக அமை­யும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

தேவை­யான முத­லீடு : சுமார் 50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை தேவைப்­ப­டும்.

தேவை­யான  பொருட்­கள் : மை நிரப்­பும் இயந்­தி­ரம், பந்­து­மு­னை­யைப் பொருத்­தும் இயந்­தி­ரம், துளை­யி­டும் கருவி, வெப்­ப­மூட்­டும் இயந்­தி­ரம் .

– தொடரும்