ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 27–3–19

பதிவு செய்த நாள் : 27 மார்ச் 2019

இசை­ஞா­னி­யின் சுயவிசா­ரணை!

(சென்ற வார தொடர்ச்சி...)

பாடிய பாட­லில் பிடித்த பாடல்

இளை­ய­ராஜா இசை­ய­மைத்து அவரே பாடிய பாடல்­க­ளில் அவ­ருக்கு மிக­வும் பிடித்­த­மான பாடல் ‘கல்­லுக்­குள் ஈரம்’ படத்­திற்­காக பாடிய ''சிறு பொன்­மணி அசை­யும்'' என்ற பாடல் தானாம்.

இசை­மேதை எம்.எஸ்.வி.

''இந்­தி­யா­வின் இசை­மே­தை­க­ளில் ஒரு­வர் எம்.எஸ்.விஸ்­வ­நா­தன்" என்று மனம் திறந்து பாராட்­டி­யி­ருக்­கி­றார் இளை­ய­ராஜா.

கோயி­லுக்கு போவ­துண்டா?

இளை­ய­ராஜா இப்­பொ­ழு­தெல்­லாம் எந்­தக்­கோ­யி­லுக்­கும் போவ­தில்லை. ஏன்? ''நான் நடந்து படுத்து உறங்கி, உண்­டு­க­ளிக்­கும் இடங்­கள் எல்­லாமே கோயில்­கள்­தான். ஏனென்­றால் இறை­வன் எல்லா இடத்­தி­லும் இருக்­கி­றார்." என்­கி­றார்.

இசை­ஞா­னி­யின் சுய விசா­ரணை!

இசை­ஞானி தன்­னைத்­தானே விசா­ரித்து கொண்ட சுவை­யான விவ­ரம் இது.

பெயர் : இளை­ய­ராஜா என்று எல்­லோ­ரும் சொல்­கி­றார்­கள்.

உண்­மை­யான பெயர் : உல­கில் யாருக்­கும் உண்­மை­யான பெயரே இல்லை

பிறந்த தேதி    : சத்­தி­ய­மாக மீண்­டும் வராது. பிறந்த தேதி பிறந்த தேதி­தான்.

பிறந்த இடம்    : பூமி என்ற மண் உருண்டை­ யில்

சொந்த ஊர் : யாருக்­கும் எந்த ஊரும் சொந்த மில்லை.

திரு­ம­ணம் ஆன­வரா? : ‘திரு’ என்­றால் தெய்­வம் என்ற பொருள் உண்டு. மணம் என்­றால் வாசம். வாசத்­திற்கு இருத்­தல் என்ற பொருள் உண்டு. தெய்­வத்­தோடு வாசம் செய்­வதை சேர்ந்­தி­ருப்­ப­தையே திரு­ம­ணம் என்று நான் நினைக்­கி­றேன். அல்­லது இறை­வா­சத்தை உணர்­வ­தையே திரு­ம­ணம் என்று நினைக்­கி­றேன். அதன்­படி எனக்­குத் திரு­ம­ணம் ஆனதா இல்­லையா தெரி­ய­வில்லை.

இசை­ய­மைப்­பா­ளர் ஆனது ஏன்? : விதி யாரை வேண்­டு­மா­னா­லும் எப்­ப­டி­யும் மாற்­றும்!

இசை­ய­மைப்­பா­ள­ராக ஆகி­யி­ருக்­கா­விட்­டால்? : என்னை இப்­படி யாரும் கேள்வி கேட்­டி­ருக்க முடி­யாது.

இது­வரை இசையமைத்­துள்ள படங்­கள் : தமிழ்,தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம், ஒரியா, ஆங்­கி­லப்­ப­டங்­கள்­தான்.

 இசை என்­பது : ஏமாற்று வேலை.

விருப்­ப­மான உணவு : காற்று அதை விரும்­பி­னா­லும் விரும்­பா­விட்­டா­லும் உண்­டு­கொண்­டு­தான் இருக்­கி­றேன்.

விரும்­பிப்­ப­டிக்­கும் புத்தகம் : ரம­ண­ரின் அருள்மொழி­கள் புத்­த­கம்.

விரும்­பும் இடம் : என் மனம்.

பிடித்­த­மான படம் : என் வாழ்க்­கை­யில் அதி­க­மா­கத் திரும்­பத் திரும்­பப் பார்த்த ‘அமே­டி­யோஸ்’ என்ற ஆங்­கி­லப்­ப­டம். நல்ல படங்­கள் எல்­லாமே பிடிக்­கும்.

பிடித்த பாட­கர்  : ஒரு­வரா இரு­வரா? எண்­ணி­றந்­தோர்.

பிடித்­த­மான பாடகி : காக்­கைப் பாடினி யார்!?

பிடித்­த­மான இயக்­கு­நர் : இறை­வன்.

மன­தைக் கவர்ந்த இசை­ய­மைப்­பா­ளர் : இளை­ய­ரா­ஜா­தான்!

மூடநம்­பிக்கை : நம்­பிக்கை என்­பதே மூடம்­தான். மூட­நம்­பிக்கை என்று தனி­யாக எது­வும் கிடை­யாது.

எதற்கு அல்­லது யாருக்கு பயப்­ப­டு­வீர்­கள்? : எனக்கு!

உங்­க­ளுக்­குப் பிடித்­தது? : என்­னைத் தேடு­வது

பிடிக்­கா­தது? : இறை­வ­னைத்  தேடா­தது!

பிடித்த நண்­பர், தோழி : சத்­தி­ய­மாக எனக்கு நண்­பன் நான்­தான். தோழி, வீணையை வைத்­துக் கொண்­டி­ருக்­கும் சரஸ்­வ­தி­தான்!

வாழ்க்­கை­யில் திருப்­பு­மு­னை­யாக எதை நினைக்­கி­றீர்­கள்? : என் உடம்பை விடுக்­கும் நாள்­தான் எனக்­குத் திருப்­பு­முனை!

விபத்­தில் சிக்­கிய அனு­ப­வம் : பிறந்­த­போது நான் அடைந்த அனு­ப­வத்தை எப்­படி விளக்­க­மு­டி­யும்?

குல­தெய்­வம் : எல்­லோ­ருக்­குமே அவ­ர­வ­ரின் அம்­மா­தான் குல­தெய்­வம்.

மதிப்­பிற்­கு­ரிய எதிரி : சந்­தே­கம் வேண்­டாம் இளை­ய­ரா­ஜா­தான்

பிடித்­த­மான உடை : உடை­களே பிடிக்­காது. எப்­போது கழற்றி வீசு­வேனோ தெரி­யாது!

எதிர்­கால ஆசை (அ) லட்­சி­யம் : எல்லா நாள்­க­ளும் இன்று இன்று என்றே கழிந்து போவ­தால், எதிர் காலம் ஏது? லட்­சி­யம் ஏது?"