பப்பாளி அல்வா!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019

தேவையான பொருட்கள்:

பப்பாளி துண்டுகள் - 2 கப்

சர்க்கரை - 2 கப்

நெய் - 200 கிராம்

முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை, பச்சைக் கற்பூரம், ஏலப்பொடி - தேவையான அளவு.

செய்முறை:

பப்பாளி துண்டுகளை மையாக அரைத்துக் கொள்ளவும். சிறிது நெய்யில், பப்பாளி விழுதை இட்டு, ஐந்து நிமிடம் கிளறவும். இப்போது, சர்க்கரையை அதிலிட்டு, அவ்வப்போது, சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். அல்வா பதமாக வரும் போது, வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் பொடித்த பச்சைக் கற்பூரம், ஏலம் சேர்க்கவும்.

அருமையான அல்வா ரெடி!

–- கீதா கிருஷ்ண ரத்னம், காஞ்சிபுரம்.