‘மொக்க’ ஜோக்ஸ்!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019

‘‘அப்பா... பாட புத்தகத்துல, தப்பு தப்பா  போட்டிருக்காங்க...’’

‘‘எதை?’’

‘‘அப்பா வேலைக்கு  செல்வார்; அம்மா சமைப்பாள்ன்னு தலைகீழா போட்டிருக்காங்க!’’

– மகாலிங்கம், நீலகிரி

‘‘உன்னோட ஓட்டல் பிரியாணியில எதுக்கு,  நாய் கறி போட்ட?’’

‘‘மக்களுக்கு  நன்றி உணர்ச்சி, வளரட்டும்னு தான்!’’

– கு. சந்திரன், திருச்சி.

‘‘பக்கத்து வீட்டு மல்லிகா தலைல எதுக்கு இட்லி வெச்சுட்டு போறா?’’

‘‘அவ வீட்டு இட்லி பூ மாதிரி இருக்குங்குறத, ‘சிம்பாலிக்’கா சொல்றா!’’

– ஆதித்யா, கோவை.

‘‘தலைவர் எதுக்கு உடற்பயிற்சி செய்து உடம்ப  30 கிலோ  குறைச்சிருக்காரு?’’

‘‘அவர குண்டர் சட்டத்துல கைது செய்துருவாங்கன்னு  பயந்து தான்!’’

– நாதன், கோவை.

‘‘சமீபத்துல உங்க ஏரியாவுல எந்த கல்யாணமும் நடக்கலையா?’’

‘‘எப்படி சரியா சொன்னீங்க?’’

‘‘கால்ல செருப்பு இல்லாம இருக்கீங்களே!’’

– க. நாகமுத்து,

திண்டுக்கல்.