ஊரை சுத்தமாக்கும் ட்ராஷ் டேக்!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019


சமூக வலைத்தளங்களில் ஏதாவது சேலஞ்சை யாரோ ஒருவர் தொடங்கிவைக்க, உலகம் முழுவதிலும் இருக்கும் இளைஞர்கள் அதைப் பின்பற்றத் தொடங்குகின்றனர். அதோடு, அதுகுறித்த குறிப்பிட்ட வார்த்தையை ஹாஷ் டேக் ஆகவும் போடுகின்றனர்.

அப்படி சமீபத்தில், சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது ட்ராஷ் டேக் சேலஞ்ச் (#trashtag). இதன்படி, குப்பைகள் நிறைந்த பகுதியில் நின்று எடுத்த புகைப்படத்தையும், அதைச் சுத்தம் செய்தபின் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாகச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற வேண்டும். கூடவே இதனை #trashtag தலைப்பில் பதிவிட வேண்டும். இதற்கு இந்தியா உட்பட பல நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.