கனடாவில் வசிப்பிட அனுமதி: இந்திய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2019

இந்­தி­யா­வில் இருந்து கன­டா­வுக்கு வேலைக்கு சென்ற இளம் பெண்ணை, அவ­ரது முத­லாளி பாலு­ற­வுக்கு வற்­பு­றுத்தி மிரட்­டிய சம்­ப­வம் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது. இந்­தி­யா­வைச் சேர்ந்த ஆஷ்னா என்­ப­வர் 2017ம் வரு­டம் டிசம்­பர் மாதம் ஹோட்­ட­லில் வேலை செய்­வ­தற்­காக கன­டா­வில் உள்ள எட்­மண்­டன் என்ற நக­ருக்கு சென்­றார்.

ஹோட்­ட­லின் உரி­மை­யா­ளர் ஆஷ்­னா­வுக்கு வேலை கொடுத்­த­து­டன், நிரந்­தர வசிப்­பிட அனு­மதி பெறு­வ­தற்கு தேவை­யான ‘அல்­பி­ரிடா இமி­கி­ரே­ஷன் நாமினி புரோ­கி­ராம்’ (Alberta Immigrant Nominee Program–AINP) திட்­டத்­தின் கீழ் ஆஷ்­னா­வுக்கு ஸ்பான்­சர் செய்ய சம்­ம­தித்­தார். அந்த ஹோட்­ட­லில் ஆஷ்னா பணி­பு­ரி­யும் போது, 2018 ஜூலை மாதம் ஹோட்­டல் மற்­ற­வ­ருக்கு கைமா­றி­யது. அந்த ஹோட்­ட­லி­லேயே ஆஷ்னா தொடர்ந்து வேலை செய்­தா­லும், அவ­ரது ஏஐ­என்பி விண்­ணப்­பம் முந்­தைய முத­லா­ளி­யி­டமே இருந்­தது.

அதனை பயன்­ப­டுத்­திக் கொண்டு ஆஷ்­னாவை தன்னை பார்க்க வரும் படி கூறிய பழைய முத­லாளி, அவ­ரது நண்­பர்­கள் சில­ரு­டன் சேர்ந்து மிரட்டி பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தி­ருக்­கி­றார். அவ­ரது நண்­பர்­க­ளும் ஆஷ்­னாவை அங்­கேயே தொடர்ந்து இருக்­கும்­படி கூறி­ய­து­டன், அவ­ரி­டம் சில்­மி­ஷத்­தி­லும் ஈடு­பட்­டுள்­ள­னர். தனது ஆசைக்கு இணங்­கா­விட்­டால், ஆஷ்­னா­வின் ஏஐ­என்பி விண்­ணப்­பத்தை ரத்து செய்­து­வி­டு­வ­தா­க­வும் பழைய முத­லாளி மிரட்­டி­யுள்­ளார்.

அந்த காமுர்­க­ளி­டம் இருந்து தப்­பிய ஆஷ்னா, போலீ­சில் புகார் செய்­துள்­ளார். போலீ­சார் புகாரை பதிவு செய்­துள்­ள­னர். அதன் பிறகு பழைய முத­லாளி புகாரை வாபஸ் வாங்­கும்­படி தொடர்ந்து ஆஷ்­னாவை மிரட்­டி­யுள்­ளார். மன உளைச்­ச­லால் உடல் நலம் பாதிக்­கப்­பட்டு மருத் து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக ஆஷ்னா அனு­ம­திக்­கப்­பட்ட போதும், தொடர்ந்து பழைய முத­லாளி மிரட்­டி ­யுள்­ளார். மருத்­து­வ­ம­னை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்ட பிறகு வேறு வேலையை ஆஷ்னா தேடிக் கொண்­டார். முன்­னாள் முத­லா­ளி­யின் மிரட்­ட­லால் தலை­ம­றைவு வாழ்க்கை வாழ்ந்து வரு­கி­றார்.

தன்­னைப் போல் வேலைக்­காக வரும் இளம் பெண்­களை, நிரந்­தர வசிப்­பிட அனு­ மதி பெற படுக்­கையை பகிர்ந்து கொள்­ளும்­படி துன்­பு­றுத்­தும் பழைய முத­லாளி போல் கன­டா­வில் சிலர் உள்­ள­னர் என்­பதை மற்ற இளம் பெண்­க­ளுக்கு தெரி­ய­ப­டுத்­தவே, பத்­தி­ரிக்­கை­க­ளில் பகி­ரங்­க­ மாக பேட்­டி­ய­ளித்­தாத ஆஷ்னா கூறி­யுள்­ளார்.