இளம் பெண்கள் முகத்தில் கரிபூசும் திருவிழா

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2019

கிழக்கு சுவிட்­சர்­லாந்­தில் சாம்­பல் புத­னன்று பராம்­ப­ரி­யத்­தின்­படி இளை­ஞர்­கள், இளம் பெண்­கள் முகத்­தில் கரி பூசு­கின்­ற­னர். ‘பிஸ்க்­யூரி’ என அழைக்­கப்­ப­டும் இந்த திரு­வி­ழா­வின் போது, இந்த கரி­பூ­சும் சம்­ப­வம் அரங்­கே­று­கி­றது. பிஸ்க்­யூரி என்­ப­தன் பொருள் கருப்­பாக்­கு­தல் என்­பதே. இந்த திரு­விழா அன்று காலை­யில் குழந்­தை­கள் கூடையை கழுத்­தில் கட்­டிக் கொண்டு வீடு வீடாக சென்று மிட்­டாய் கேட்­கின்­ற­னர். மாலை­யில் திரு­ம­ண­மா­காத இளை­ஞர்­கள் பய­மு­றுத்­தும் வகை­யில் முகத்­தில் முக­மூ­டி­களை அணிந்து, மாறு­வே­ட­மிட்டு கையில் கருப்பு நிற மையு­டன் திரு­ம­ண­மா­காத பெண்­களை தேடிச் செல்­கின்­ற­னர். இளை­ஞர்­கள் அணிந்­தி­ருக்­கும் மணி­யோ­சையை கேட்டு  இளம் பெண்­கள் ஓடி ஒளி­கின்­ற­னர். சிக்­கும் இளம் பெண்­களை தரை­யில் தள்ளி முகத்­தில் கருப்பு மை பூசு­கின்­ற­னர்.

பிறகு முட்­டை­களை பிச்சை கேட்­ட­படி, மை பூசிய இளம் பெண்­களை தேடிச் சென்று விருந்­துக்கு அழைக்­கின்­ற­னர். மது­பா­னங்­க­ளு­டன் தொடங்­கும் விருந்து நள்­ளி­ரவு வரை நடை­பெ­று­கி­றது. விருந்­தில் முட்டை முக்­கிய இடம் பெறு­கி­றது.