இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு பரம் விஷிஷ்ட சேவா விருது

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 18:34

புதுடில்லி,

   முப்படை வீரர்களின் துணிச்சலை போற்றும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.முப்படைகளை சேர்ந்தவர்களுக்கு துணிச்சல், தியாகத்தை வெளிப்படுத்தியதை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.  சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் அறிவிக்கப்பட்டு ஆண்டுக்கு இரு முறை இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணுவத்தில் மிக உயரிய நிலையில், தனிச்சிறப்பான சேவை ஆற்றியதற்காக பிபின் ராவத்துக்கு பரம் விஷிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்பட்டது.இதையடுத்து மேஜர் துசார் கவுபாவுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப்-ஐ சேர்ந்த 12 பேருக்கும் ஷாரியா சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் எல் கே அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்