ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 13–3–19

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2019

அந்த பாடலோடு வேறு பாடலை ஒப்பிட முடியாது!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

இன்­றைக்கு நீங்க நினைச்சு பார்க்­க­லாம். ‘பாவி என்­னும் படு­பாவி..’ ‘எல்­லாம் இன்ப மயம்..’ என்ற ராக­மா­ளிகை, ‘சின்­னஞ்­சிறு கிளியே..’ என்ற பாடல் பாடாத கர்­நா­டக சங்­கீத கச்­சே­ரி­களே கிடை­யாது. துக்­கடா என்று வரு­கின்ற நேரத்­திலே அவர்­கள் பாடக்­கூ­டிய பாடல், வாத்­தி­ய­மாக இருந்­தால் அவர்­கள் வாசிக்­கக்­கூ­டிய பாட்டு ‘சின்­னஞ்­சிறு கிளியே…’ என்ற பார­தி­யா­ரின் பாட­லா­கத்­தான் இருக்­கும்.

கி. ராஜ­நா­ரா­ய­ணன் குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். பார­தி­யார் எவ்­வ­ளவோ பாட்டு எழு­தி­யி­ருக்­காரு. ஆனால் இந்த ’சின்­னஞ்­சிறு கிளியே…’ என்ற பாட்டு எப்­படி ஜனங்­க­ளி­டையே போய்ச் சேர்ந்­தது என்று சொன்­னால் அதுக்கு கார­ணம், அந்த வர்­ண­மெட்­டு­தான் கொண்டு போய் சேர்த்­தது. பாட­லின் சிறப்­பல்ல. இதை­விட சிறப்­பான பாடல்­கள் நிறைய எழு­தி­யி­ருக்­கார். அதை­யெல்­லாம் விட ‘சின்­னஞ்­சிறு கிளியே…’ மூலை முடுக்­கெல்­லாம் இன்­னும் பாடு­கி­றார்­கள் என்று சொன்­னால் அதுக்­குக் கார­ணம் ‘அந்த வர்­ண­மெட்­டு­தான்’ என்று அவர் சொல்­வார். என்­னை­யும், அதே­போல பல தெரி­யாத பாடல்­களை வர்­ண­மெட்டு கொடுத்து அதை ஜனங்­க­ளி­டம் சேர்க்க வேண்­டும் என்று தனி­யாக அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார் என்­ப­தை­யும் இங்கே பதிவு செய்ய ஆசைப்­ப­டு­கி­றேன். என்னை மிக­வும் கவர்ந்த கம்­போ­சர், இசை­ய­மைப்­பா­ளர் மாமேதை சி.ஆர்.சுப்­ப­ரா­மன். அவர் முப்­பத்­தி­ரண்டு வய­தி­லேயே கால­மா­கி­விட்­டார் என்­பது இசை உல­கத்­திற்கு ஏற்­பட்ட இழப்பு என்­ப­து­தான் என்­னு­டைய வருத்­தம்!

அடுத்து என்­னைக் கவர்ந்த இசை­ய­மைப்­பா­ளர் ஜி. ராம­நா­தன். அடுத்­த­ப­டி­யாக என்று நான் சொல்­வதை நீங்­கள் தவ­றாக வரி­சைப்­ப­டுத்த வேண்­டாம். கார­ணம் எல்­லோ­ரை­யும் ஒரே நேரத்­திலே சொல்ல முடி­யாது அல்­லவா? எவ்­வ­ளவோ சிறந்த பாடல்­களை கம்­போஸ் செய்­தி­ருக்­கி­றார் ஜி. ராம­நா­தன். ‘இசை ஒரு நல்ல உணவு’, ‘ஊன் வளர்த்­தேன் உயிர் வளர்த்­தேன்’ என்று சொல்­வது போல இந்த ஊன் வளர்ப்­ப­தற்கு இந்த உணவு தேவைப்­ப­டு­வது போல உயிர் வளர்க்க நல்ல இசை தேவை! அந்த நல்ல இசை­யைத் தந்த மாபெ­ரும் இசை­ய­மைப்­பா­ளர்­க­ளில் ஐயா ஜி. ராம­நா­த­னும் ஒரு­வர்.

‘காத்­தி­ருப்­பான் கம­லக்­கண்­ணன்..’ என்ற பாட­லில் அந்த ராக­மா­லிகை அமைப்பு எனக்கு மிக­வும் பிடிக்­கும். எப்­போது கேட்­டா­லும் அந்த பாட­லோடு வேறு பாடலை ஒப்­பிட முடி­யாது. அப்­படி ஒரு சிறந்த பாடல். அது மட்­டும்­தான் என்று இல்லை. அவர் கம்­போஸ் செய்த அத்­த­னைப் பாடல்­க­ளும் ராகத்­தின் அடிப்­ப­டை­யில்­தான் இருக்­கும். அது நீங்­கள் எல்­லோ­ரும் உணர்ந்த ஒரு விஷ­யம்­தான்!

கே.வி. மகா­தே­வன் மூன்று முறை தேசிய விருது வாங்­கி­ய­வர். தேசிய விருது அவ­ரது இசைக்­குக் கிடைத்த அங்­கீ­கா­ரம் என்று சொல்­வ­தை­விட தேசிய விருது ஒரு நல்ல இடத்­தைப் பெற்­றது, நல்ல இசைக்கு அது உப­யோ­கப்­பட்­டது என்­று­தான் நான் நினைக்­கி­றேன்.

எவ்­வ­ளவு அற்­பு­த­மான பாடல்­களை, போக் மியூ­சிக்­காக இருக்­கட்­டும், கிளா­சிக்­கல் மியூ­சிக்­காக இருக்­கட்­டும், மாடர்ன் சாங்­கு­க­ளாக இருக்­கட்­டும் எவ்­வ­ளவு அற்­பு­த­மாக கொடுத்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை நீங்­க­ளெல்­லாம் நன்­றாக அறி­வீர்­கள். என்­னைக் கவர்ந்த எத்­த­னையோ பாடல்­களை அவர் கம்­போஸ் செய்­தி­ருக்­கி­றார். நான் வேலைக்கு போற நேரத்­திலே ஸ்டூடி­யோ­விலே பார்த்­தேன்னா.. நான் சொல்­ற­தைப் போலவே அவர் சொல்­வார். ‘‘என்ன புதுசு புதுசா பல்­லவி போடு­வேன்… அதுக்­கப்­பு­றம், கரம் ரிபீட் ஆகுது… அடுத்து ஏமாத்து வேலை­தானே” என்­பார்.

கர்­நா­டக சங்­கீ­தம் முழு­மை­யாக பயன்­ப­டுத்­தப்­பட்ட அந்த நேரத்­தி­லேயே வெஸ்­டர்ன் மியூ­சிக்­கும் திரைப்­பட பாடல்­க­ளில் இடம்­பெற ஆரம்­பித்­தன. ஜி.ஆர். சுப்­ப­ரா­ம­னா­கட்­டும், எஸ்.வி. வெங்­கட்­ரா­ம­னா­கட்­டும், ஜி.ராம­நா­தய்­ய­ரா­கட்­டும் எல்­லோ­ருமே அந்த வாத்­தி­யங்­களை சுவை கெடா­மல் நமது இசைக்கு தகுந்­தாற்­போல் மிக­வும் சம­யோ­ஜி­த­மா­கக் கையாண்­டி­ருக்­கி­றார்­கள். அந்த வாத்­தி­யங்­களை உப­யோ­கப்­ப­டுத்­தி­னா­லும் அது நமது பாடல்­க­ளின் சுவை­யைக் குறைக்­க­வில்லை.

பிற்­கா­லத்­தில் என்ன ஆச்­சுன்னா அந்த வெஸ்­டர்ன் மியூ­சிக்ல பாப் சாங்­சையே எடுத்து நம்ம யூஸ் பண்ற மாதிரி ஒரு கால­கட்­டம் இருந்­தது. உதா­ர­ணத்­திற்கு சொல்­ல­ணும்னா ‘‘ஐயா சாமி… ஆகாதே தாதி…’’ இது போன்ற பாடல்­கள் எடுத்து கையாண்­டார்­கள். அதற்கு அப்­பு­ற­மாக இந்தி பாடல்­கள் வந்து பெரும்­பான்­மை­யாக ஆக்­ர­மித்­துக் கொண்­டன. இங்­கி­ருந்­தும் அங்கே போயி­ருக்கு. அங்­கி­ருந்­தும் இங்கே வந்­தி­ருக்கு. அங்­கி­ருந்து வந்­தது ஒரு காலத்­திலே நடந்­தி­ருக்கு. இங்கே இருந்து அங்கே காப்­பி­ய­டிச்­ச­தும் நிறைய நடந்­தி­ருக்கு என்­பதை உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்­து­கி­றேன்.

அதுக்கு அப்­பு­ற­மாக என்­னு­டைய வாழ்க்­கை­யில் மறக்க முடி­யாத, மிக­வும் உந்­து­த­லாக இருந்த என் மன­தில் ஓடிக்­கொண்­டி­ருந்த எண்­ணங்­க­ளுக்கு ஒரு உரு­வத்தை, ஒரு உத்­வே­கத்தை ஏற்­ப­டுத்­திய இசை அண்ணா எம்.எஸ்.விஸ்­வ­நா­த­னு­டை­யது. அவ­ரு­டைய இசை­யி­னால்­தான் எனது இள­வ­யது போனதே தெரி­யா­மல் போனது. அதா­வது அவ­ரு­டைய இசை­யி­லேயே என் இளமை காலத்தை கழித்­தேன். அவர் கம்­போஸ் பண்­ணிய ‘மாலைப் பொழு­தின் மயக்­கத்­திலே…’ என்ற பாடல் என்னை மிக­வும் பாதித்த பாட­லா­கும். எத்­த­னையோ பாடல்­க­ளுக்கு அண்­ணன், சொல்ல முடி­யாத அள­வுக்கு, வார்த்­தை­க­ளால் வர்­ணிக்க முடி­யாத அள­விற்கு உயி­ரோட்­ட­மான இசை­யைக் கொடுத்­தி­ருக்­கி­றார். அதுல ‘மாலைப்­பொ­ழு­தின் மயக்­கத்­திலே..’ ரொம்­பப் பிடிக்க கார­ணம், ஒரு பாடல் என்­பது படத்­திற்கு மட்­டும் உப­யோ­கப்­பட்­டால் பிர­யோ­ஜ­னம் இல்லை. படத்­தில் இடம்­பெ­றும் சூழ்­நி­லை­யைத் தாண்டி, படத்­தில் வரும் கதா­பாத்­தி­ரங்­க­ளின் மனோ­நி­லை­யைத் தாண்டி, படம் பார்க்­கக்­கூ­டிய பாடலை கேட்­கக்­கூ­டிய ரசி­கர்­க­ளைப் போய் தாக்க வேண்­டும். அது மன­தில் புகுந்து உயிரை உருக்­க­வேண்­டும். அது­தான் உண்­மை­யான பாடல் என்­பது என்­னு­டைய கருத்து” என்­கி­றார் இசை­ஞானி!