சிரிப்பே பதில்!

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2019

பாரதப்போர் தொடங்கப் போகிறது.  பரந்தாமன் போருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். பாஞ்சாலி கேட்டாள்:

‘‘பரந்தாமா, இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோமா?’’

பரந்தாமன் சொன்னான்:

‘‘வெற்றி பெறுவோமோ இல்லையோ, தோல்வி அடையமாட்டோம்.’’

பாஞ்சாலி கேட்டாள்:

‘‘நீ சொல்வது எனக்குப் புரியவில்லையே! வெற்றியும் பெறாமல் தோல்வியும் அடையாமலா ஒரு யுத்தம் முடியும்?’’

பரந்தாமன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போய்விட்டான். அந்த சிரிப்பின் அர்த்தம் பாஞ்சாலிக்குப் புரியவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தபின், அதன் பொருள் நமக்கு விளங்குகிறது.

வெற்றியும் பெறாமல், தோல்வியும் அடையாமல் விவாதங்கள் முடிவடையும் இடத்துக்கே நாம் ‘சட்டசபை’ என்று பெயர் வைத்திருக்கிறோம்.

கவிஞர் கண்ணதாசனின்

 ‘குட்டிக் கதைகள்’   நூலிலிருந்து...