இந்­திய அணி தோல்வி: இமாலய இலக்கை துரத்தியது ஆஸி.,

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2019 01:19


மொகாலி:

மொகாலியில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில்இந்தியா நிர்ணயித்த 359 ரன இலகை துரத்திய ஆஸி., 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பதிவு செய்துது. ஹேண்ட்ஸ்கோம்ப் (117) சதம் அடித்தார். முக்கிய கட்டத்தில் டர்னர் 43 பந்தில் 84 ரன் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தியாவின் பவுலிங், பீல்டிங் இரண்டும் பள்ளி சிறுவர்களைப் போல் இருந்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2&1 என முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி மொகாலியில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தோனி, ராயுடு, முகமது ஷமி, ஜடேஜாவுக்குப்பதில் ரிஷாப், லோகேஷ் ராகுல், புவனேஷ்வர், சகால் இடம் பிடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸ், நாதன் லியான் நீக்கப்பட்டு டர்னர், பெஹ்ரன்டர்ப் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. கடந்த மூன்று போட்டியில் சொதப்பிய இந்த ஜோடி நேற்று அதிரடியாக விளையாடி அசத்தியது. இருவரும் எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர். தொடக்கம் முதலே தவான் அதிரடியாக விளையாடி அசத்தினார். அதே நேரம் துவக்கத்தில் சற்றே தடுமாறிய ரோகித் பின்னர் தனது வழக்கமான ஆட்டத்திற்று திரும்ப ஸ்கேரர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. அதிரடியாக விளையாடிய தவான் 44 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 17.2 ஓவரில் 100 ரன் எடுத்தது. தன்பங்கிற்கு ரோகித் 64 பந்தில் அரைசதம் அடிக்க ஆட்டம் சூடுபிடித்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 193 ரன் (31 ஓவர்) சேர்த்த நிலையில், ரிச்சர்ட்சன் பந்தில் ரோகித் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரோகித் 95 ரன் (92 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அடுத்து ராகுல் களம் வந்தார். 32வது ஓவரில் இந்தியா 200 ரன் எடுத்த போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதைத் தொடர்ந்து எழுச்சியுடன் விளையாடிய தவான் ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 97 பந்தில் சதம் விமாசினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் 143 ரன் (115 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து கம்மின்ஸ் பந்தில் போல்டானார். பினஜ் ராகுலுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். கடந்த ரண்டு போட்டியில் சதம் அடித்த கோஹ்லி, இம்முறை 7 ரன் எடுத்து ஏமாற்றினார், முக்கிய கட்டத்தில் ராகுல் (26), ரிஷாப் பன்ட் (36) கைகொடுத்தனர். கேதர் ஜாதவ் (10) சொதப்பினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், 7வது வீரராக களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் ஷங்கர் 15 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 26 ரன் எடுத்து அசத்தினார். புவனேஷ்வர் கமார் (1), சகால் (0) வெளியேறினார்.

கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பும்ரா சிக்சர் விளாச இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. பும்ரா (6), குல்தீப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸி., தரப்பில் அபாரமாக பந்து வீசிய கம்மின்ஸ் 5 (10&0&70&5) விக்கெட் வீழ்த்தினார். ரிச்சர்ட்சன் 3, ஜாம்பா 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய ஆஸி., அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. புவனேஷ்வர் குமார் பந்தில் ஆரோன் பின்ச் ‘டக்&அவுட்’ ஆனார். பும்ரா வேகத்தில் மார்ஷ் (3) ஸ்டெம்புகள் சிதற போல்டானார். பின் கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து அரைசதம் கடந்தனர். 33வது ஓவரில் ஆஸி., 200 ரன் எடுத்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 192 ரன் சேர்த்த நிலையில், பும்ரா பந்தில் குவாஜா ஆட்டமிழந்தார். இவர் 91 ரன் (99 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அடுத்த வந்த மேக்ஸ்வெல் (23) பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதே நேரம் தொடர்ந்து அசத்திய ஹேண்ட்ஸ்கோம்ப் ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார், இவர் 92 பந்தில் சதம் அடித்தார். 10 ஓவரில் 98 ரன் தேவைப்ப டர்னர் அதிரடியில் இறங்கினார்.

முக்கிய கட்டத்தில் சகால் திருப்புமுனை கொடுத்தார். இவரது சுழலில் ஹேண்ட்ஸ்கோம்ப் 117 ரன் (105 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) சிக்கினார். இதன் பின் டர்னர் திரடியில் இறங்கினார். ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையில், இந்திய பந்துவீச்சை நாலா புறமும் பறக்கச் செய்தார். புவனேஷ்வர், பும்ரா பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். டர்னர் 33 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு அலெக்ஸ் கேரி (21) கம்பெனி கொடுத்தார். டர்னர் தொடர்ந்து விளாச ஆஸி., 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டர்னர் 84 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), ரிச்சர்ட்சன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா திகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார். ஆட்டநாயகனாக ஹேண்ட்ஸ்கோம்ப் தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை நடந்த நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றியை பதிவு செய்தள்ளன. இந்த நிலையில், தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானனிக்கும் 5வது மற்றும் கடைசி போட்டி டில்லியில் வரும் 13ம் தேதி நடக்க உள்ளது.