மேற்கு வங்கம்: உடன்பாடு ஏற்படுமா?

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2019

மேற்கு வங்க முன்­னாள் முதல்­வர் புத்­த­தேவ் பட்­டாச்­சார்யா (74)ஒரு நேரத்­தில் அதி­க­மாக பிர­யா­ணம் செய்து கொண்­டி­ருப்­பார். ஆனால் இப்­போது கொல்­கத்­தா­வில் உள்ள பால் அவின்­யூ­வில் முடங்­கிக் கிடக்­கி­றார். கார­ணம் உடல்­நிலை சரி­யில்­லாத்­தும், கண் பார்வை பாதிக்­கப்­பட்டு இருப்­ப­துமே. இருந்­தும் தற்­போது அவர் தீடீ­ரென சுறு­சு­றுப்­பாக செயல்­பட ஆரம்­பித்­துள்­ளார். தின­சரி மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் வந்து அவரை சந்­திக்­கின்­ற­னர். மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யில் முடி­வு­களை எடுக்­கும் உயர் அமைப்­பான பொலிட்­பீ­ரோ­வின் முன்­னாள் உறுப்­பி­னர் புத்­த­தேவ் பட்­டாச்­சார்யா. 2016ல் மேற்கு வங்க சட்ட்­சபை தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி உடன்­பாடு செய்து கொண்­டது. இதற்கு கார­ண­மாக இருந்­த­வர் புத்­த­தேவ் பட்­டாச்­சார்யா. வரும் லோக்­சபா தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் உடன்­பாடு செய்து கொள்­வது குறித்து ஆலோ­சிக்க மூத்த தலை­வர்­கள் வந்து இவரை சந்­திக்­கின்­ற­னர்.

மேற்கு வங்­கத்தை 34 வரு­டம் ஆட்சி செய்த மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக்கு நிலைமை மோச­மாக உள்­ளது. 2016 சட்­ட­சபை தேர்­த­லில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி கூட்­டணி 32 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. இந்த கூட்­டணி 26 சத­வி­கித வாக்­கு­களை வாங்­கி­யி­ருந்­தது. 1977ல் இட­து­சாரி கூட்­டணி அமைக்­கப்­பட்­ட­தில் இருந்து முதன் முறை­யாக 40 சத­வி­கி­தத்­திற்­கும் குறை­வான வாக்­கு­களை வாங்­கி­யது. சென்ற லோக்­சபா தேர்­த­லில் இரண்டு தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. மேற்கு வங்­கத்­தின் வட பகு­தி­யில் உள்ள ராய்­கன்ஞ், முர்­சி­தா­பாத் ஆகிய இரண்டு தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. அதன் பிறகு இந்த இரண்டு தொகு­தி­க­ளி­லும் கூட பார­திய ஜனதா அப­ரி­த­மான வளர்ச்சி அடைந்­துள்­ளது.

காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் நிலைமை மோச­க­மா­கவே உள்­ளது.சென்ற லோக்­சபா தேர்­த­லில் நான்கு தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. பெர்­கம்­பூர், ஜாங்­கி­பூர் (இந்த தொகுதி பிர­ணாப் முகர்ஜி போட்­டி­யி­டும் தொகுதி. இப்­போது அவ­ரது மகன் அபி­ஜித் முகர்ஜி போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுள்­ளார்) வடக்கு மால்டா, தெற்கு மால்டா ஆகிய நான்கு தொகு­தி­க­ளில் மட்­டுமே காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றது.  1999ல் இருந்து அதிர் ரஞ்­சன் சவுத்ரி தொடர்ந்து வெற்றி பெறும் பெர்­கம்­பூர் தொகு­தி­யில் கூட வெற்றி பெறு­வது சந்­தே­கம் என்று சில காங்­கி­ர­சார் கரு­து­கின்­ற­னர். எல்லா தொகு­தி­க­ளி­லுமே சந்­தே­கம் என்­கின்­ற­னர்.

மால்ட் தொகு­தி­யில் வெற்றி பெறு­வது சந்­தே­கம் என்­பது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது. ஏனெ­னில் இந்த தொகுதி காங்­கி­ர­சின் கோட்­டை­யாக கரு­தப்­ப­டும் தொகுதி. பிரிக்­கப்­ப­டாத மால்டா தொகு­தி­யில் முதன் முத­லாக 1952ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் இருந்து 2004 வரை நடை­பெற்ற 14 தேர்­த­லி­க­ளில் 12 முறை காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றுள்­ளது. இரண்டு முறை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­டம் தோல்வி அடைந்­தது. இந்­திரா காந்­தி­யி­டம் நெருக்­க­மாக இருந்த அபு பார்­கர் அதுர் கனி­கான் சவுத்ரி 1980 முதல் 2004 வரை தொடர்ந்து வெற்றி பெற்­றார். 2006ல் அவ­ரின் மறை­வுக்கு பிறகு, அவ­ரது குடும்­பத்­தார் தொடர்ந்து வெற்றி பெற்­ற­னர். மால்ட் தொகுதி வடக்கு, தெற்கு என இரண்­டாக பிரிக்­கப்­பட்­டது. கனி­கான் சவுத்­ரி­யின் தம்பி அபு ஹசிம் கான், நெருங்­கிய உற­வி­னர் மவ்­சும் நூர் ஆகிய இரு­வ­ரும் 2009 முதல் 2014 வரை நடை­பெற்ற லோக்­சபா தேர்­தல்­க­ளில் மால்டா வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு தொகு­தி­க­ளில் இருந்து வெற்றி பெற்­ற­னர். அதா­வது பிரிக்­கப்­ப­டாத மால்டா தொகுதி, இரண்­டாக பிரிக்­கப்­பட்ட பிற­கான மால்டா தொகுதி காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த கனி­கான் சவுத்ரி குடும்­பத்­தின் கோட்­டை­யாக நீடித்­தது.

ஆனால் சென்ற ஜன­வரி 28ம் தேதி மவ்­சும் நூர் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்து விலகி, திரி­ணா­முல் காங்­கி­ர­சில் சேர்ந்­து­விட்­டார். இதற்கு கார­ணம் அவ­ரது தொகு­தி­யில் பா.ஜ., அப­ரி­த­மாக வளர்ச்சி அடைந்­துள்­ளது. காங்­கி­ரஸ் செல்­வாக்கை இழந்து விட்­டது என்று அவர் கரு­து­கி­றார். அவ­ரின் மால்டா தெற்கு தொகு­தி­யில் வரும் லோக்­சபா தேர்­த­லில் பா.ஜ,,வுக்­கும் திரி­ணா­முல் காங்­கி­ர­சுக்­கும் நேரடி போட்டி ஏற்­ப­டும் நிலை­யில், சிறு­பான்மை பிரிவு மக்­க­ளின் தலை­வ­ரான மவ்­சும் நூர் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் சேரு­வதே சரி­யாக இருக்­கும் என்று நினைக்­கின்­றார். இவரை தொடர்ந்து அபு ஹசிம் கானும் திரி­ணா­முல் காங்­கி­ர­சில் ஐக்­கி­ய­மா­வார் என்ற பேச்சு அடி­ப­டு­கி­றது. ஆனால் அவர் தற்­போது காங்­கி­ரஸ் கட்­சி­யி­லேயே நீடிக்­கி­றார். கனி­கான் சவுத்­ரி­யின் கோட்­டை­யான மால்டா தொகு­தியை இழக்­கா­மல் இருக்க திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் கூட்­டணி அமைக்­கும்­படி தலை­மையை வற்­பு­றுத்தி வரு­கி­றார்.

காங்­கி­ரஸ், இட­து­சாரி முன்­ன­ணி­யில் உள்ள பல தலை­வர்­கள் மேற்கு வங்­கத்­தில் இரண்டு கட்­சி­க­ளுமே தோல்­வியை சந்­திக்­கும் என்று அச்­சப்­ப­டு­கின்­ற­னர். 2016ல் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மத்­திய தலைமை, சட்­ட­சபை தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் உடன்­பாடு செய்து கொண்­ட­தற்கு மேற்கு வங்க தலை­மையை பகி­ரங்­க­மாக குறை கூறி­யது. ஆனால் திரி­புரா மாநி­லத்­தில் ஆட்­சியை பா.ஜ.,விடம் பறி­கொ­டுத்த பிறகு, சென்ற வரு­டம் ஏப்­ர­லில் ஹைத­ர­பாத்­தில் நடை­பெற்ற மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் தேசிய மாநாட்­டில் (காங்­கி­ரஸ்) நிலைமை முற்­றி­லும் மாறி­விட்­டது. கடந்த காலங்­க­ளில் காங்­கி­ரஸ் கட்­சி­யுன் உடன்­பாடு செய்து கொள்­வதை எதிர்த்து வந்த திரி­புரா மாநில முன்­னாள் முதல்­வர் மானிஸ் சர்க்­கார், காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் உடன்­பாடு செய்து கொண்ட மேற்கு வங்க தலை­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக மாறி­னார்.

ஹைத­ர­பாத் தேசிய மாநாட்­டில், பார­திய ஜன­தாவை வீழ்த்த, மதச்­சார்­பற்ற மற்­றும் ஜன­நா­யக கட்­சி­க­ளு­டன் சேர­லாம் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதே நேரத்­தில் இந்த தீர்­மா­னத்­தில் பா.ஜ., காங்­கி­ரஸ் இரண்­டுமே பூர்ஷ்­வாக்­க­ளின் பிர­தி­நிதி கட்­சி­களே. எனவே காங்­கி­ர­சுஸ் கட்­சி­யு­டன் கூட்­டணி அமைக்­கவோ, உடன்­பாடு செய்து கொள்­ளவோ கூடாது என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்­பு­டைய பா,ஜ., ஆபத்­தான கட்சி. பா.ஜ., காங்­கி­ரஸ் இரண்­டை­யும் ஒரே மாதி­ரி­யாக ஆபத்­தான கட்­சி­யாக கரு­தக்­கூ­டாது. பா.ஜ,,மிக­வும் ஆபத்­தான கட்சி. இதன் அடிப்­ப­டை­யில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி புதிய அர­சி­யல் நிலையை எடுத்­தது. காங்­கி­ரஸ் உடன் கூட்டு சேரா­விட்­டா­லும், எல்லா மதச்­சார்­பற்ற எதிர் கட்­சி­க­ளு­டன் கருத்­தொற்­றுமை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்­றது.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மத்­திய குழு உறுப்­பி­னர் சுஜான் சக்­க­ர­வர்த்தி, “மேற்கு வங்­கத்­தில் கூட்­டணி சேரு­வது பற்றி தனது கட்­சிக்­கும், காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் இடை­யில் ஒரு மட்­டத்­தில் பேச்­சு­வார்த்தை தொடங்­கி­யுள்­ளது. எங்­கள் கட்­சி­யின் தேசிய மாநாட்­டில் மத்­தி­யில் பா.ஜ,வையும், மாநி­லத்­தில் திரி­ணா­முல் காங்­கி­ர­சை­யும் தோற்­க­டிக்க வேண்­டும் என்று தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. எனவே இதற்­காக மாநி­லத்­தில் காங்­கி­ர­சு­டன் சில உடன்­பாடு எட்­டப்­ப­டும். ஆனால் எது­வும் இறு­தி­யாக முடி­வா­க­வில்லை” என்று தெரி­வித்­தார்.

மேற்கு வங்க மாநில காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் சோமன் மித்ரா, “ மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­டம் இருந்து அதி­கா­ர­பூர்­வ­மாக கூட்­டணி அல்­லது உடன்­பாடு பற்­றிய எவ்­வித தக­வ­லும் வர­வில்லை. எனவே நான் எங்­கள் கட்சி தலை­வர் ராகுல் காந்­தி­யி­டம் எதை­யும் உறு­தி­யாக தெரி­விக்­க­வில்லை” என்று கூறி­னார்.

சோமன் மித்ரா தொடர்ந்து கூறு­கை­யில், “மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, இட­து­சாரி கட்­சி­க­ளு­டன் உடன்­பாடு அல்­லது கூட்­டணி சேரு­வது பற்றி காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் மத்­தி­யில் ஆத­ர­வும், எதிர்ப்­பும் உள்­ளது. இரண்டு வித­மான கருத்­தை­யும் மேலி­டத்­தில் தெரி­வித்­துள்­ளேன். பெரும்­பா­லான தலை­வர்­கள், கூட்­டணி சேரா­மல் மொத்­த­முள்ள 74 ஆயி­ரம் வாக்கு சாவ­டி­க­ளில், பாதி வாக்­கு­சா­வ­டி­க­ளில் பூத் ஏஜெண்­டு­களை நிய­மிக்க முடி­யாது என்று கரு­து­கின்­ற­னர். சமீப காலங்­க­ளின் தங்­கள் வாக்கு வங்­கியை பா.ஜ,, கைப்­பற்­றி­விட்­டது என்று மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி கரு­து­வது போலவே காங்­கி­ரஸ் கட்­சி­யும் கரு­து­கி­றது. மொத்­த­முள்ள 42 லோக்­சபா தொகு­தி­க­ளில் 22 தொகு­தி­க­ளில் உடன்­பாடு செய்து கொள்­ள­லாம் என்று இரண்டு தரப்­புமே கரு­து­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. மற்ற தொகு­தி­க­ளில் வெற்றி பெற இய­லாது என்­றும் கரு­து­கின்­ற­னர்.

காங்­கி­ரஸ் தலை­வ­ரும், ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ரு­மான பிர­திப் பட்­டாச்­சார்யா, “ஆம் தொகுதி பங்­கீடு ஏற்­ப­ட­லாம். ஆனால் அர­சி­யல் கூட்­டணி இல்லை. கூட்டு பிர­சா­ரமோ அல்­லது கூட்டு தேர்­தல் அறிக்­கையோ இல்லை. நாங்­கள் இட­து­சா­ரி­க­ளு­டன் தேர்­தல் உடன்­பாடு செய்து கொள்­வோம்” என்று தெரி­வித்­தார்.

அதே நேரத்­தில் இட­து­சாரி கூட்­ட­ணி­யில் உள்ள மற்ற கட்­சி­கள், காங்­கி­ர­சு­டன் உடன்­பாடு செய்து கொள்­வதை பற்றி மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கின்­ற­னர். புரட்­சி­கர சோஷ­லிஸ்ட் கட்­சி­யின் தேசிய செய­லா­ளர் கீஷ்டி கோஸ்­சு­வாமி, “ நான் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் தலை­மை­யி­டம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும் படி கூறி­யுள்­ளேன். 2016ல் எந்த கலந்­து­ரை­யா­ட­லும் இல்­லா­மல் அவ­ச­ர­க­தி­யில் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையை எப்­படி மறக்க முடி­யும்?. அந்த கூட்­ட­ணி­யில் சரி­யான இணக்­கம் இல்­லாத கார­ணத்­தால், மக்­கள் அதை நிரா­க­ரித்து விட்­ட­னர். இட­து­சாரி கூட்­ட­ணி­யில் உள்ள இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, புரட்­சி­கர சோஷ­லிஸ்ட் கட்சி, பார்­வர்ட் பிளாக் ஆகிய கட்­சி­களை கலந்து ஆலோ­சிக்­கால் ஒரு­த­லைப்­பட்­ச­மாக மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி மட்­டுமே முடிவு செய்­தது. இத­னால் கீழ்­மட்ட தொண்­டர்­கள் இதை ஏற்­றுக் கொள்­ளா­மல், எதி­ராக வேலை பார்த்­த­னர். சட்­ட­ச­பை­யில் இட­து­சாரி முன்­னணி மூன்­றாம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டது. குறைந்த அளவு வாக்கு சத­வி­கி­தம் இருந்­தா­லும் காங்­கி­ரஸ் இரண்­டாம் இடத்தை பிடித்­து­விட்­டது. (இட­து­சா­ரி­களை விட காங்­கி­ரஸ் 12 இடங்­க­ளில் அதி­க­மாக வெற்றி பெற்­றது. ஆனால் வாங்­கிய வாக்கு சத­வி­கி­தம் 12.25 சத­வி­கி­தம்.இட­து­சா­ரி­கள் வாங்­கிய வாக்கு சத­வி­கி­தம் 25.69) இதற்கு கார­ணம் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளி­டம் தொலை நோக்கு பார்வை இல்­லா­ததே” என்று அவர் கூறி­னார்.

கீஷ்டி கோஸ்­சு­வாமி தொடர்ந்து கூறு­கை­யில், “இட­து­சா­ரி­க­ளின் உத­வி­யு­டன் வெற்றி பெற்ற காங்­கி­ரஸ் சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள்,. பிறகு திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் சேர்ந்து விட்­ட­னர். தேர்­தல் பொதுக்­கூட்­டத்­தில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி தலை­வர் சூர்­ஜியா கன்தா மிஸ்­ராவை கட்டி அணைத்­துக் கொண்ட காங்­கி­ரஸ் கட்­சி­யின் மனாஸ் பூயான், வெற்றி பெற்ற பின் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் சேர்ந்­ததை எப்­படி மறக்க முடி­யும். இதே மாதிரி தொடர வேண்­டுமா? என்று கேட்­கி­றார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த பிர­திப் பட்­டாச்­சார்யா, கீஷ்டி கோஸ்­சு­வாமி இட­து­சாரி கூட்­ட­ணி­யில் உள்ள எல்லா கட்­சி­க­ளு­டன் ஆலோ­சிக்க வேண்­டும் என்று கூறும் கருத்தை ஏற்­றுக் கொள்­கி­றார். “நாங்­கள் சென்ற முறை செய்த தவ­றில் இருந்து பாடம் கற்­றுக் கொண்­டுள்­ளோம். எனவே இந்த முறை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யு­டன் மட்­டு­மல்­லாது, இட­து­சாரி கூட்­ட­ணி­யில் உள்ள எல்லா கட்­சி­க­ளு­ட­னும் ஆலோ­சிப்­போம்” என்று தெரி­வித்­தார்.

இட­து­சாரி கட்­சி­க­ளு­டன் கூட்­டணி சேர விரும்­பும் காங்­கி­ரஸ் கட்சி தலை­வர்­க­ளின் கருத்தை ராகுல் காந்தி கேட்­பார் என்­பது உறுதி.

தி வீக் வார இத­ழில் ரபி பானர்ஜி.

எதிர்த்து போட்­டி­யில்லை

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மத்­திய குழு மேற்கு வங்­கத்­தில் ஆறு தொகு­தி­கள், ஒடி­சா­வில் இரண்டு தொகு­தி­க­ளில் காங்­கி­ரஸ், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்­சி­க­ளும் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்­டி­யி­டு­வ­தில்லை என்று முடிவு செய்­துள்­ளது.

மேற்கு வங்­கத்­தில் ஆறு தொகு­தி­க­ளில் சென்ற லோக்­சபா தேர்­த­லில் நான்கு தொகு­தி­க­ளில் காங்­கி­ரஸ் வெற்றி பெற்ற தொகு­தி­கள். அவை ஜாங்­கி­பூர், பெக்­ரம்­பூரி, வடக்கு மால்டா, தெற்கு மால்டா ஆகி­யவை. இந்த தொகு­தி­க­ளில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி போட்­டி­யி­டாது. காங்­கி­ரஸ் கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­கும்.

 மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி  வெற்றி பெற்ற தொகு­தி­கள் ராய்­கன்ஜ், முர்­சி­தா­பாத் ஆகி­யவை. இந்த தொகு­தி­க­ளில் காங்­கி­ரஸ் போட்­டி­யி­டா­மல், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­கும். ஆனால் மேற்கு வங்க காங்­கி­ரஸ் தலை­வர்­கள் ராய்­கன்ஜ், முர்­சி­தா­பாத் தொகு­தி­களை விட்­டுத்­தர மறுக்­கின்­ற­னர்.  

மீத­முள்ள 36 தொகு­தி­கள் குறித்து 8ம் தேதி மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி முடிவு செய்­வ­தாக அறி­வித்­துள்­ளது. மேற்கு வங்­கத்­தில் உள்ள மொத்­தம் 42 லோக்­சபா தொகு­தி­க­ளில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி வழக்­க­மாக 32 தொகு­தி­க­ளில் போட்­டி­யி­டும். மீத­முள்ள பத்து தொகு­தி­களை இட­து­சாரி கூட்­ட­ணி­யில் உள்ள மற்ற கட்­சி­க­ளுக்கு ஒதுக்­கும். இந்த முறை காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் உடன்­பாடு செய்து கொள்­வ­தால், சில தொகு­தி­களை விட்­டுக் கொடுக்­கும் என்று தெரி­கி­றது.