பழங்குடி மக்கள் வெளியேற்றம்

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2019வன உரிமை சட்­டப்­படி நிலம் உரிமை கோரி அச்­ச­யாட் பூசாரி விண்­ணப்­பித்து பத்து வரு­டங்­க­ளுக்கு மேல் ஆகி­விட்­டது. அவ­ரது விண்­ணப்­பம் குறித்து இது­வரை அதி­கா­ர­பூர்­வ­மாக ஒரு வார்த்தை கூட அரசு துறை­க­ளில் இருந்து வர­வில்லை. சென்ற பிப்­ர­வரி 13ம் தேதி சுப்­ரீம் கோர்ட், வன உரிமை சட்­டப்­படி நிலம் உரிமை கோரி சமர்ப்­பித்த விண்­ணப்­பங்­க­ளில் நிரா­க­ரிக்­கப்­பட்ட விண்­ணப்­ப­தா­ரரை நிலத்­தில் இருந்து வெளி­யேற்­றும்­படி மாநில அர­சு­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளதை பற்றி அறிந்­தார். அச்­ச­யாட் பூசாரி வாழும் இடத்­தில் இருந்து வெகு தொலை­வில் உள்ள அரசு அலு­வ­ல­கங்­கள், சுப்­ரீம் கோர்ட்­டில் என்ன நடக்­கின்­றது என்று தெரி­யா­ம­லேயே அவ­ரது ஒன்­றரை ஏக்­கர் நிலத்­தில் நெல், உளுந்து, பாசிப்­ப­யறு ஆகி­ய­வற்றை பயி­ரிட்டு வரு­கின்­றார்.

ஒடி­சா­வில் வறுமை தாண்­ட­வ­மா­டும் கால­கண்டி மாவட்­டத்­தில் உள்ள ஜாம்­ஜி­க­ரன் கிரா­மத்­தைச் சேர்ந்த கோண்டா பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வர் அச்­ச­யாட் பூசாரி. அவ­ரி­டம் அவுட்­லுக் நிரு­பர் சுப்­ரீம் கோர்ட் உத்­த­ரவு பற்றி கூறி­ய­போது ஒரு நிமி­டம் பேச முடி­யா­மல் திகைத்­துப் போய்­விட்­டார். நாங்­கள் என்ன செய்­வது? நாங்­கள் அனை­வ­ரும் தற்­கொலை செய்து கொள்ள வேண்­டி­யது தான் என்று அச்­ச­யாட் பூசாரி கூறி­னார்.

அச்­ச­யாட்­டிற்கு மூன்று குழந்­தை­கள் உள்­ளன. அவ­ரின் மூத்த மக­ளுக்கு திரு­ம­ணம் ஆகி­விட்­டது. இரண்­டா­வது மகள் திக்­மணி (15),மகன் கிரி­சங்­கர் (12), மனைவி மங்­களா ஆகி­யோ­ரு­டன் வசிக்­கி­றார். தான் உழுது பயி­ரி­டும் நிலத்தை தவிர வேறு பிழைப்பு இல்லை. இந்த பகு­தி­யில் எந்த வேலை­யும் கிடைக்­காது என்று அவர் கூறு­கின்­றார்.

வன உரிமை சட்­டம்–2006, (பட்­டி­யல் பழங்­கு­டி­யி­னர் மற்­றும் பாரம் பரிய வன­வாழ் மக்­கள் சட்­டப்­படி) பழங்­கு­டி­யி­னர், வனப்­ப­கு­தி­யில் நிலங்­களை பாரம்­ப­ரி­ய­மாக பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் அந்த நிலங்­க­ளுக்கு உரிமை கொண்­டா­ட­வும், வனப்­ப­கு­தி­யில் வாழ­வும், வனத்தை பாது­காக்­க­வும் உரிமை வழங்­கு­கின்­றது.

இந்த சட்­டத்தை எதிர்த்து பல்­வேறு உயர்­நீதி மன்­றங்­க­ளில் வழக்கு தொட­ரப்­பட்­டன. இந்த வழக்­கு­கள் சுப்­ரீம் கோர்ட்­டிற்கு மாற்­றப்­பட்­டது. பத்து வரு­டங்­கள் நடை­பெற்ற வழக்­கில் சென்ற பிப்­ர­வரி 13ம் தேதி சுப்­ரீம் கோர்ட் உத்­த­ரவு பிறப்­பித்­தது. சுப்­ரீம் கோர்ட் நீதி­ப­தி­கள் அருண் மிஸ்ரா, நவிதா சின்ஹா மற்­றும் இந்­திரா பானர்ஜி கொண்ட அமர்வு உத்­த­ரவு பிறப்­பித்­தது. இந்த உத்­த­ர­வால் 16 மாநி­லங்­க­ளில் வனப்­ப­கு­தி­யில் நிலங்­களை பயன்­ப­டுத்­தும் பத்து லட்­சத்­திற்­கும் அதி­க­மான பழங்­கு­டி­யி­னர், மற்­ற­வர்­கள் வெளி­யேற்­றப்­ப­டும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

சுப்­ரீம் கோர்ட் உத்­த­ர­வு­படி, மாநில அர­சு­கள் வரும் ஜூலை மாதம் 27 - ம் தேதிக்­குள் இந்த மக்­களை வனப்­ப­கு­தி­க­ளில் இருந்து வெளி­யேற்ற வேண்­டும். அத்­து­டன் மாநில அர­சு­கள் இந்த உத்­த­ரவை செயல்­ப­டுத்­தி­யது தொடர்­பான அறிக்­கை­யை­யும் சுப்­ரீம் கோர்ட்­டில்  தாக்­கல் செய்ய வேண்­டும் என்று உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஒடிசா மாநி­லம் கால­கண்­டி­யில் வனப்­ப­கு­தி­யில் நிலத்தை பயன்­ப­டுத்­தும் கந்தா ஜால் கூட வெளி­யேற்­றப்­பட உள்­ளார். இவர் அச்­ச­யாட் பூசாரி போல் பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்­த­வர் அல்ல. ஆனால் வனப்­ப­கு­தி­யில் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்து பயன்­ப­டுத்­தும் இதர இனத்­தைச் சேர்ந்­த­வர். இவ­ரது குடும்­பம்  நூறாண்­டு­க­ளுக்­கும் மேலாக பயன்­ப­டுத்தி வரும் ஐந்து ஏக்­கர் நிலத்­திற்கு, வன  உரிமை சட்­டப்­படி 2008ல் உரிமை கோரி விண்­ணப்­பித்­தார். இவ­ரது விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணம் பற்றி இவ­ருக்கு தெரி­ய­வில்லை.

கன­கா­பூரா கிரா­மத்­தைச் சேர்ந்த 62 வய­தான கிரா­மத்து வைத்­தி­யர், கிரா­ம­ச­பை­யின் மற்ற உறுப்­பி­னர்­களை சேர்த்­துக் கொண்டு வனப்­ப­குதி நிலத்தை பாது­காத்து வரு­கி­றார். அவ­ரது குடும்­பம் பல நூற்­றாண்­டு­க­ளாக பரம்­ப­ரை­யாக அனு­ப­வித்து வரும் நிலத்தை விட்டு வெளி­யேற்­றப்­பட உள்­ளார் என்­பதை அவ­ரால் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை. எதா­வது அதி­ய­சம் நடந்து ‘வெளி­யேற்­றப்­ப­டா­மல்’ பாது­காக்­கப்­ப­டு­வோம் என்று நம்­பிக்­கை­யு­டன் உள்­ளார்.

ஒடிசா மாநி­லத்­தில் அச்­ச­யாட் பூசாரி, கந்தா ஜால் போல ஒன்­றரை லட்­சம் பேர் வெளி­யேற்­றப்­பட உள்­ள­னர். இந்த மாநி­லத்­தில் மொத்­தம் 6 லட்­சத்து 12 ஆயி­ரம் பேர் வன உரிமை சட்­டப்­படி நிலத்­திற்கு உரிமை கோரி விண்­ணப்­பித்­துள்­ள­னர். இதில் நான்­கில் ஒரு விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வன உரிமை சட்­டத்தை அமல்­ப­டுத்­து­வ­தில் ஒடிசா அரசு முன்­ன­ணி­யில் இருப்­ப­தாக மாநில அரசு கூறிக் கொண்டு வரு­கி­றது. இந்த சூழ்­நி­லை­யில் மாநில பழங்­கு­டி­யி­னர், தாழ்­தப்­பட்­டோர் மேம்­பாட்டு துறை அமைச்­சர் ரமேஷ் மஜில், “பழங்­குடி மக்­க­ளின் உரி­மை­களை பாது­காக்க தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என்று வாக்­கு­று­தி­ய­ளித்து வரு­கி­றார். இது வெற்று உறுதி மொழி­யா­கவே நீடிக்­கின்­றது.  

வன உரி­மையை நிலை­நாட்ட சேவை செய்­யும் ரீஜ­னல் சென்­டர் பார் டெவ­லப்­மெண்ட் கோவாப்­பி­ரே­சன் [Regional Centre for Development Cooperation (RCDC)] என்ற அரசு சாரா தொண்டு நிறு­வ­னத்­தைச் சேர்ந்த பிர­வாத் குமார் மிஸ்ரா, “தனது அமைப்பு சுப்­ரீம் கோர்ட்­டில் மறு பரீ­சி­லனை மனு தாக்­கல் செய்­வது உட்­பட பல்­வேறு முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தார். அவர் சார்ந்த தொண்டு நிறு­வ­ன­மும், மற்ற பல்­வேறு அமைப்­பு­க­ளும் கடந்த காலங்­க­ளில் ஆயி­ரக்­க­ணக்­கான விண்­ணப்­பங்­களை பரீ­சி­லிக்க பட்ட கஷ்­டங்­கள் எல்­லாம் விழ­லுக்கு இரைத்த நீர் ஆக போய்­விட்­டது என்று வருத்­தத்­து­டன் கூறு­கின்­றார். அவர் மேலும் கூறு­கை­யில், “இப்­போது சக்­க­ரம் பின்­னோக்கி சுற்­றி­யுள்­ளது. வன உரிமை சட்­டப்­படி நிலத்­திற்கு உரிமை கோரி, பராம்­ப­ரி­ய­மாக அனு­ப­வித்து வரு­ப­வர்­கள் விண்­ணப்­பிப்­பதை தடுக்­கி­றது. சுப்­ரீம் கோர்ட்­டின் தீர்ப்­பால், வன உரிமை சட்­டம் முடிந்து போன கதை­யாக மாறி­விட்­டது” என்­றார்.

சுப்­ரீம் கோர்ட்­டில் மத்­திய அரசு வன உரிமை சட்­டத்தை பாது­காக்க முழு முயற்­சி­யில் ஈடு­ப­ட­வில்லை என்று வனப்­ப­கு­தி­க­ளில் சேவை செய்­யும் ஆர்­வ­லர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். வனப்­ப­கு­தி­யில் பரம்­ப­ரை­யாக வாழ்­ப­வர்­க­ளின் தேசிய அமைப்­பான சாம்­பி­யன் பார் சர்­வ­வல் அண்ட் டிகி­னிட்டி (Campaign for Survival and Dignity) அமைப்­பின் செய­லா­ளர் சங்­கர் கோபால கிருஷ்­ணன், “சுப்­ரீம் கோர்ட்­டில் விசா­ரணை நடந்த அன்று, எங்­க­ளது வழக்­க­றி­ஞர்­கள் இருந்­த­னர். வனப்­ப­குதி நிலம் கோரிய விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டது பற்றி மத்­திய அர­சின் பதில் என்ன? வன உரிமை சட்­டத்தை அமல்­ப­டுத்­தும் மத்­திய பழங்­கு­டி­யி­னர் விவ­கா­ரத்­துறை அமைச்­ச­கம், கோர்ட்­டில் இந்த சட்­டத்தை பாது­காக்­கும்  பொறுப்­பில் இருந்து தட்­டிக்­க­ழிக்க கூடாது” என்று கூறி­னார்.

இது மாநில அர­சு­கள் சம்­பந்­தப்­பட் விவ­கா­ரம் என்று கூறிய மத்­திய பழங்­கு­டி­யி­னர் விவ­கா­ரத்­துறை செய­லா­ளர் தீபக் கந்­தே­கர், “எங்­கள் மீது சுமத்­தப்­ப­டும் குற்­றச்­சாட்டு அடிப்­படை ஆதா­ர­மற்­றது. சுப்­ரீம் கோர்ட் மத்­திய அர­சி­டம் எது­வும் கேட்­க­வில்லை. பல்­வேறு மாநி­லங்­கள் தாக்­கல் செய்­தி­ருந்த அபி­டே­விட்டை மட்­டுமே பார்த்­தது” என்று கூறி­னார்.

சுப்­ரீம் கோர்ட் உத்­த­ரவு அர­சி­யல் சாச­னத்­திற்கு எதி­ரா­னது. வன உரி­மையை அங்­கீ­க­ரிப்­ப­தி­லும், விண்­ணப்­பங்­களை நிரா­க­ரிப்­ப­தி­லும் கிராம சபை­க­ளை­யும், .சட்­டப்­ப­டி­யான அமைப்­பு­க­ளை­யும் கவ­னத்­தில் கொள்­ள­வில்லை. வன உரிமை சட்­டத்­தின் 12 (ஏ) பிரி­வில் “கிராம சபை அல்­லது வன உரிமை கமிட்டி ஆகி­ய­வையே விண்­ணப்­பங்­களை பெறு­வ­தற்­கும் அல்­லது நிரா­க­ரிப்­ப­தற்­கும், மாற்­று­வ­தற்­கும் அல்­லது முடிவு செய்­வ­தற்­கும் அதி­கா­ரம் பெற்­றவை” என கூறப்­பட்­டுள்­ளது என வன உரி­மையை பாது­காக்­கும் சமூக ஆர்­வ­லர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஒடி­சா­வில் நியாம்­கிரி மலைப்­ப­கு­தி­யில் வாழும் டோங்­கி­ரியா கோண்ட் பழங்­கு­டி­யின மக்­க­ளின் உரி­மையை நிலை­நாட்ட 12 வரு­டம் சட்ட போராட்­டம் நடத்தி வெற்றி பெற்­ற­வர் பிர­புல்லா சமந்­தரா. இவர் கூறு­கை­யில், “பன்­னாட்டு நிறு­வ­ன­மான வேதாந்தா நிறு­வ­னம் பாக்­ஸைட் சுரங்­கத்தை அமைப்­ப­தால் பழங்­கு­டி­யின மக்­கள் தங்­கள் வாழ்­வா­தா­ரத்தை இழக்­கும் ஆபத்து ஏற்­பட்­டது. வன உரிமை சட்­டமே, பழங்­குடி மக்­களை காப்­பாற்­றி­யது என்று கூறி­னார். பழங்­குடி மக்­க­ளின் உரி­மையை நிலை­நாட்ட இவ­ரது இடை­வி­டாத முயற்­சியை பாராட்டி ‘கோல்­டன் என்­வி­ரோ­மென்­டல்’ விருது வழங்­கப்­பட்­டது. “வன உரிமை சட்­டத்­தா­லும், கிராம சபை­க­ளா­லுமே நியாம்­கிரி மலை­ப­கு­தி­க­ளில் சுரங்­கம் (பாக்­ஸைட்) அமைப்­பது தடுக்­கப்­பட்­டது. இந்த தட­வை­யும் டோங்­கி­ரியா கோண்ட் பழங்­குடி மக்­கள் சட்ட போராட்­டம் நடத்த தயா­ராகி வரு­கின்­ற­னர்” என்று பிர­புல்லா சமந்­தரா கூறி­னார்.

அகில இந்­திய வனப்­ப­கு­தி­யில் வேலை செய்­ப­வர்­க­ளின் அமைப்­பைச் சேர்ந்த (All India Union of Forest Working People) அசோக் சவுத்ரி கூறு­கை­யில், “பல மாநி­லங்­க­ளில் வன உரிமை சட்­டம் மிக மெது­வாக  அமல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. தற்­போ­தைய சுப்­ரீம் கோர்ட் உத்­த­ரவு, இதை மேலும் தாம­தப்­ப­டுத்­தும். எங்­க­ளது கவலை என்­ன­வெ­னில் வன உரிமை சட்­டப்­படி, உரிமை கோரு­வ­தும். நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­கள் மீண்­டும் உரிமை கோரு­வதை பரி­சீ­லிப்­பது நின்று போகும். இந்த உத்­த­ர­வால் வன உரிமை சட்­டத்தை அமல்­ப­டுத்­து­வது பாதிக்­கப்­ப­டும். எந்த அர­சுமே இந்த சட்­டத்தை அமல்­ப­டுத்­து­வ­தில் அக்­கறை காண்­பிக்க மாட்­டோர்­கள். ஏனெ­னில் இத­னால் அவர்­க­ளுக்கு எந்த அதி­கா­ர­மும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. எல்லா மாநில அர­சு­க­ளும் விப­ரங்­களை தாக்­கல் செய்­யும் போது, வனப்­ப­கு­தி­யில் இருந்து வெளி­யேற்­றப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 20 லட்­சத்தை தாண்­டி­வி­டும்” என்று அவர் கூறி­னார்.

கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளின் எதிர்­பார்ப்பு, மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்­கா­கவே பெரு­ம­ள­வி­லான விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக சமூக ஆர்­வ­லர்­கள் கூறு­கின்­ற­னர். இமா­ச­ல­பி­ர­தே­சத்­தில் உள்ள லிபா கிரா­மத்­தி­னர் கடந்த பத்து வரு­டங்­க­ளாக நீர்­மின் உற்­பத்தி நிலை­யத்தை எதிர்த்து போராட்­டம் நடத்­திக் கொண்­டுள்­ள­னர். இந்த கிரா­மத்­தைச் சேர்ந்த 47 பேரின் விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இது பற்றி ஹிம்­தா­ரா­வைச் சேர்ந்த சமூக ஆர்­வ­லர் மன்சி ஆஸர் கூறு­கை­யில், “ சட்­டப்­படி ஏற்­றுக் கொள்­ளத்­தக்க கார­ணங்­கள் எது­வும் இன்றி விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. கிரா­ம­ச­பை­யி­டம் தடை­யில்லா சான்று வாங்க வேண்­டும் என்ற விதிக்கு விலக்கு அளிக்க வேண்­டும் என மாநில அரசு முயற்சி செய்­தது. நீர் மின் உற்­பத்தி நிலை­யம் அமைப்­ப­தற்­கான நிலம், கிரா­ம­ச­பை­யின் தடை­யில்லா சான்று இல்­லா­ம­லேயே நீண்­ட­கால குத்­த­கைக்கு விடப்­பட்­டது. இதை எதிர்த்து தொட­ரப்­பட்ட வழக்கு உயர்­நீதி மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ளது” என்று மன்சி ஆஸர் தெரி­வித்­தார்.

லோக்­சபா தேர்­தல், சில மாநி­லங்­க­ளில் சட்­ட­சபை தேர்­தல் நெருங்­கும் வேளை­யில், இந்த பிரச்னை அர­சி­யல் ரீதி­யாக முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது. எல்லா அர­சி­யல் கட்­சி­க­ளும் களத்­தில் குதித்­துள்­ளன. சத்­திஸ்­கர் முதல்­வர் பூபேஷ் பகல், “காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி கேட்­டுக் கொண்­ட­தற்கு பிறகு, நிரா­க­ரிக்­கப்­பட்ட எல்லா விண்­ணப்­பங்­க­ளும் மீண்­டும் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­டும்” என்று கூறி­யுள்­ளார். பார­திய ஜனதா தேசிய தலை­வர் அமித் ஷா, “பா.ஜ., ஆளும் மாநி­லங்­க­ளில் இது பற்றி பரி­சீ­லிக்­கப்­ப­டும்” என்று கூறி­யுள்­ளார்.

வடக்கு சத்­திஸ்­க­ரில் சுர்­குஜா பிராந்­தி­யத்­தைச் சேர்ந்த பழங்­கு­டி­யின செயற்­பாட்­டா­ளர் கங்­கா­ராம் பரிகா கூறு­கை­யில், சுப்­ரீம் கோர்ட் உத்­த­ரவு மாநி­லத்­தில் வாழும் மிக­வும் கீழ்­நி­லை­யில் உள்ள பழங்­குடி மக்­க­ளுக்கு எதி­ராக இருக்­கும். பகாடி, கோர்வா, பிர்­கார், அபுஜ்­மா­டியா ஆகிய கீழ்­நி­லை­யில் உள்ள பழங்­கு­டி­யி­னத்­த­வர்­க­ளும், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட பழங்­கு­டி­யி­னத்­த­வர்­க­ளில் பெரும்­பா­லோர் வன உரிமை சட்­டப்­படி நிலத்­திற்கு உரிமை கோரி விண்­ணப்­பிக்­க­வில்லை” என்று கூறி­னார்.

நாடி காதி மோர்ச்சா என்ற பழங்­குடி மக்­க­ளின் உரி­மை­க­ளுக்­காக சேவை செய்­யும் அமைப்­பைச் சேர்ந்த கவு­தம் பந்­தோ­பத்யா கூறு­கை­யில், “பழங்­கு­டி­யின தலை­வர்­கள் அல்­லது பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு சேவை செய்­யும் அரசு சாரா நிறு­வ­னங்­கள் செயல்­ப­டும் பிர­தே­சங்­க­ளில் மட்­டும் அதிக அளவு விண்­ணப்­பங்­கள் வந்­துள்­ளன. வனங்­க­ளின் உள்­ப­கு­தி­யில் பழங்­கு­டி­யின மக்­கள் வாழ்­கின்­ற­னர். வன உரிமை சட்­டப்­படி பலன் அடை­யும், இவர்­கள் பெரு­ம­ள­வில் விட்­டுப்­போ­யுள்­ள­னர். முந்­தைய அரசு வன உரிமை சட்­டப்­படி உரிமை கோரும் விண்­ணப்­பங்­களை பெறு­வ­தில் ஆர்­வம் காட்­ட­வில்லை என்று கூறி­னார்.

நன்றி: அவுட்­லுக் வார இதழ்

ஷ.ஷ.ஷ.ஷ.ஷ.ஷ.ஷ.ஷ.ஷ.

பாக்ஸ்

வன உரிமை சட்­டம்–2006


வன உரி­மை­கள் சட்­டம் 2006  ம் ஆண்டு மத்­திய அர­சால் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்­தச் சட்­டம் பரம்­ப­ரை­யாக வனப்­ப­கு­தி­க­ளில் வாழும் பழங்­கு­டி­யின மக்­கள், மற்­றும் வனங்­க­ளில் வசித்து வரும் இதர மக்­கள் ஆகி­யோ­ரி­டம் அவர்­கள் பரம்­ப­ரை­யாக அனு­ப­வித்து வரும் நிலங்­களை ஒப்­ப­டைப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டது. 2005ம் ஆண்டு டிசம்­பர் 13ம் தேதிக்கு முன்­பி­லி­ருந்து வனப்­ப­கு­தி­க­ளில் வசிப்­ப­வர்­க­ளுக்கு அந்த நிலங்­க­ளுக்கு பட்டா வழங்க வேண்­டும். அத்­து­டன் இந்த சட்­டத்­தில் வனப்­ப­கு­தி­யில் வசிப்­ப­வர்­கள் தங்­க­ளின் தேவை­க­ளுக்­காக வன வளங்­களை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். இந்­தப் பகு­தி­க­ளி­லுள்ள கிரா­ம­சபை குழு வனப்­ப­கு­தியை பாது­காக்க வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

* சுப்­ரீம் கோர்­டில் 16 மாநி­லங்­கள் தாக்­கல் செய்த அறிக்­கை­யில் மொத்­தம் 11 லட்­சத்து 27ஆயி­ரத்து 446 மனுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

* சுப்­ரீம் கோர்ட்­டில் தமி­ழக அரசு தாக்­கல் செய்த மனு­வில், 2005ம் ஆண்டு டிசம்­பர் 13ம் தேதிக்கு முன்­பி­லி­ருந்தே வசித்து வந்­த­தாக கூறி, நிலத்­தற்கு பட்டா வழங்­கக்­கோரி 34,302 விண்­ணப்­பங்­கள் வந்­தன. அதில் 9,029 விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப் பட்­டுள்­ளது என கூறப்­பட்­டுள்­ளது.

* சுப்­ரீம் கோர்ட்­டின் உத்­த­ரவு படி, தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள வனப்­ப­கு­தி­க­ளில் வசிக்­கும் 9 ஆயி­ரத்து 29 குடும்­பங்­களை சேர்ந்த 10,000க்கும் மேற்­பட்­டோர், அவர்­கள் வசிக்­கும் வனப்­ப­கு­தி­க­ளில் இருந்து வெளி­யேற்­றப்­ப­டும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.