அரசியல் மேடை : தேமுதிக தேறுமா?

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2019

ஒரு அர­சி­யல் கட்­சி­யின் வெற்றி, தோல்வி என்­பது, அக்­கட்­சி­யின் செயல்­பா­டு­க­ளின் மூல­மா­க­வும், அக்­கட்சி பொது­மக்­கள் இடத்­திலே பெற்­றுள்ள ஆத­ரவு அடிப்­ப­டை­யி­லும், அக்­கட்­சி­யின் கட்­ட­மைப்பை பொறுத்­தும்­தான் அமை­யும்.

தேச விடு­த­லைக்­காக 19ம் நூற்­றாண்­டின் இறு­தி­யில் தோற்­று­விக்­கப்­பட்ட காங்­கி­ரஸ் கட்சி, நாடு விடு­த­லை­ய­டைந்த பிறகு அர­சி­யல் கட்­சி­யாக உரு­வெ­டுத்து, பல­மான கட்­ட­மைப்­பு­டன், மக்­க­ளின் ஏகோ­பித்த ஆத­ர­வு­டன் இருந்­த­தால்­தான் நாடு முழு­வ­தும் பல மாநி­லங்­க­ளி­லும், மத்­தி­ய­லும் பல ஆண்­டு­கள் தொடர்ந்து ஆட்சி நடத்த முடிந்­தது.

ஜவ­ஹர்­லால் நேரு, இந்­தி­ரா­காந்தி, ராஜீவ்­காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்­கி­ர­சின் தலைமை, அடுத்­த­டுத்து மாறி வரும் நிலை­யி­லும் கூட, கட்சி நூற்­றாண்டை கடந்­து­விட்­ட­போ­தும் கூட காங்­கி­ரஸ் கட்­சிக்கு என தனித்த அடை­யா­ள­மும், நாடு தழு­விய அள­வில் கணி­ச­மான வாக்கு வங்­கி­யும் உள்­ளது. தமிழ்­நாட்­டில் ஆளு­மை­மிக்க, மக்­கள் செல்­வாக்கு மிக்க காம­ராஜ் போன்ற தலை­வர்­கள் இல்­லாத நிலை­யி­லும், இன்­னும் ஓர­ளவு செல்­வாக்­கு­மிக்க கட்­சி­யா­கவே காங்­கி­ரஸ் உள்­ளது.

திமு­கவை பொறுத்த வரை 1949–ம் அண்டு தொடங்­கப்­பட்ட அக்­கட்சி, அதன் நிறு­வ­னத் தலை­வர் சி.என். அண்­ணா­துரை, அதன் அடுத்த கட்­டத் தலை­வர்­க­ளான நெடுஞ்­செ­ழி­யன், சம்­பத், மதி­ய­ழ­கன், என்.வி.நட­ரா­ஜன், மற்­றும் மு.கரு­ணா­நிதி, அன்­ப­ழ­கன், ஆசைத்­தம்பி உள்­ளிட்­டோ­ரின் எழுத்­தா­லும், பேச்­சா­ளும், நாளுக்கு நாள் வளர்ந்து தொண்­டர்­கள் பலம் கொண்ட கட்­சி­யாக உருப்­பெற்­றது. 1957ல் 15 இடங்­கள், 1962ல் 50 இடங்­கள் என தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் இடம் பெற்று, 1967ம் ஆண்டு காங்­கி­ர­சுக்கு எதி­ரான வலு­வான கூட்­ட­ணியை உரு­வாக்கி ஆட்­சியை பிடித்­தது.

திமு­க­வின் வளர்ச்­சிக்­கும் அதன் வெற்­றிக்­கும், மக்­க­ளி­டையே அக்­கட்­சி­யின் செல்­வாக்­குப் பெரு­க­வும் பிர­தான கார­ண­மாக இருந்­தது எம்­ஜி­ஆர் எனும் மாபெ­ரும் மக்­கள் சக்­தி­யின் பிரச்­சா­ரம்­தான். திரைப்­ப­டங்­கள் மூல­மா­க­வும், அர­சி­யல் பொதுத் தளத்­தி­லும், தேர்­தல் காலங்­க­ளி­லும் அவர் ஆற்­றிய பணி­கள் திமு­க­வுக்கு பெரும் பல­மாக அமைந்­தது. காங்­கி­ர­சுக்கு மாற்­றாக ஒரு கட்சி தேவை என்­கிற எண்­ணம் மக்­கள் மன­திலே ஏற்­பட்­ட­தன் விளை­வா­க­வும், வலு­வான கட்­ட­மைப்பு கட்­சி­யில் இருந்­த­தா­லும், கூட்­ட­ணி­யும் பல­மாக இருந்­த­தா­லும் 67ல் இந்த வெற்றி திமு­க­வுக்கு சாத்­தி­ய­மா­னது.

அண்­ணா­துரை மறை­வுக்கு பிறகு, திமுக ஆட்­சி­யும், கட்­சி­யும், கரு­ணா­நிதி தலை­மை­யில் செயல்­பட்ட நிலை­யில், திடீர் என ஒரு நெருக்­கடி ஏற்­பட்டு திமு­க­வின் முன்­னணி தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரா­க­வும், கட்­சி­யின் பொரு­ளா­ளர் பத­வி­யில் இருந்­த­வ­ரு­மான எம்­ஜி­ஆர் திமு­க­வி­லி­ருந்து நீக்­கப்­பட்டு, அண்ணா திமுக எனும் புதிய கட்­சியை அவர் தொடங்கி தமி­ழக அர­சி­ய­லில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­னார்.

அந்த கட்சி மக்­கள் இடையே பெரும் வர­வேற்­பைப் பெற்­ற­தும், ஏரா­ள­மான தொண்­டர்­கள் கட்சி உறுப்­பி­னர்­க­ளாக பதிவு பெற்­ற­தும் அக்­கட்­சி­யின் கட்­ட­மைப்பு வலி­மை­யாகி பல தொடர் வெற்­றி­களை பெற்­றது. ஆட்சி, அதி­கா­ரத்­தில் இருந்த திமு­க­வுக்கு எதி­ராக, அந்த கட்­சியை விட­வும் பலம் வாய்ந்த கட்­சி­யாக அதி­மு­கவை உரு­வாக்கி 1977 – 80 – 84 – என மூன்று சட்­ட­சபை பொதுத் தேர்­தல்­க­ளில் வெற்­றி­பெற்று தொடர்ந்து ஆட்சி அமைத்து சுமார் 11 ஆண்­டு­கள் எம்.ஜி.ஆர். முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்று ஆட்சி நடத்­தி­னார். அவ­ரது மறை­வுக்கு பிறகு கட்­சித் தலைமை பொறுப்­பேற்ற ஜெய­ல­லி­தா­வும், அதி­மு­கவை தொடர்ந்து தமி­ழ­கத்­தின் முன்­ன­ணிக் கட்­சி­யா­கவே கொண்டு சென்­றார். இன்­னும்­கூட அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி அதி­மு­க­தான் என்ற நிலையே தொடர்­கி­றது.

தமிழ்­நாட்­டில் காங்., பாமக, மதி­முக, சிபி­எம், சிபிஐ, பாஜக, உள்­ளிட்ட பல அர­சி­யல் கட்­சி­கள் இருந்­தா­லும், இவற்­றில் எந்த கட்­சி­யும் அதி­முக – திமு­க­வுக்கு மாற்­றான சக்­தி­யாக வளர முடி­ய­வில்லை.

இந்த நிலை­யில்­தான், நடி­கர் விஜ­ய­காந்த் ‘தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கம்’ என்ற பெய­ரில் அர­சி­யல் கட்­சியை தொடங்கி இரு­பெ­ரும் திரா­வி­டக் கட்­சி­க­ளுக்கு ஒரே மாற்று சக்தி நான்­தான் எனக் கூறி களம் இறங்­கி­னார்.

2005ம் ஆண்டு கட்சி தொடங்­கிய விஜ­ய­காந்த், 2006ம் ஆண்டு நடை­பெற்ற  சட்­ட­மன்­றத் தேர்­த­லில், மக்­க­ளோ­டும், கட­வு­ளோ­டும்­தான் கூட்­டணி என்று அறி­வித்து விட்டு தனித்து களம் இறங்­கி­னார். 200க்கும் மேற்­பட்ட தொகு­தி­க­ளில் தேமு­திக வேட்­பா­ளர்­கள் களம் இறங்­கி­னா­லும், கட்­சித் தலை­வர் விஜ­ய­காந்த் மட்­டுமே விருத்­தா­ச­லம் தொகு­தி­யில் வெற்றி பெற்­றார். அந்த தேர்­த­லில் சுமார் 8.5 சத­வீத வாக்­கு­கள் தேமு­தி­க­வுக்கு கிடைத்­த­தால், அதி­முக – திமு­க­வுக்கு அடுத்த 3வயது பெரிய கட்சி என்ற அந்­தஸ்து அக்­கட்­சிக்கு கிடைத்­தது. அடுத்து 2009ல் நடை­பெற்ற நாடா­ளு­மன்ற தேர்­த­லி­லும் தனித்­துப் போட்­டி­யிட்டு, ஒரு தொகு­தி­யில் கூட டெபா­சிட் பெற முடி­யாத நிலை உரு­வா­ன­லும் வாக்கு சத­வீ­தம் சுமார் 10 சத­வீ­தம் அள­வுக்கு உயர்ந்­தது. வாக்­கு­கள் உயர்ந்­தா­லும் வெற்றி சாத்­தி­ய­மில்லை என்­பதை உணர்ந்த கட்சி நிர்­வா­கி­கள் கூட்­டணி அமைத்து வெற்றி பெற­லாம் என முடி­வெ­டுத்­த­னர். அதன்­படி 2011–ம் ஆண்டு நடை­பெற்ற சட்­ட­மன்ற பொதுத் தேர்­த­லில் அதி­மு­க­வு­டன் கூட்­டணி  அமைத்து 41 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்ட தேமு­திக 29 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று பிர­தான எதிர்க்­கட்சி அந்­தஸ்தை பெற்­றது, இனி அந்த கட்­சிக்கு ஏறு­மு­கம் தான் என அக்­கட்­சி­யின் தொண்­டர்­க­ளும், பொது­மக்­க­ளும் கருதி இருந்த நேரத்­தில், ஆட்­சி­யி­லி­ருந்த அதி­மு­க­வு­டன் மோதி எதிர்க்­கட்சி துணைத்­த­லை­வர் பண்­ருட்டி உட்­பட பாதி எம்.எல்.ஏக்­க­ளைப் பறி­கொ­டுத்­து­விட்டு இறங்கு முகத்தை சந்­தித்­தது. அடுத்­த­டுத்து நடை­பெற்ற சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற தேர்­தல்­க­ளில் 6 கட்சி கூட்­டணி, என்.டி.ஏ. கூட்­டணி என களம் கண்­டா­லும் வெற்றி கிட்­ட­வில்லை. வாக்கு சத­வீ­த­மும் குறை­யத் தொடங்­கி­விட்­டது.

இந்­நி­லை­யில் விஜ­ய­காந்­தின் நடை­முறை தேர்­தல் பிரச்­சா­ரக் காலங்­க­ளி­லும் அவர் கடைப்­பி­டிக்­கும் அடி­தடி அணு­கு­முறை பொது மேடை­க­ளில் பேசும் தெளி­வில்­லாத கருத்­து­ரை­கள் மக்­கள் மத்­தி­யில் அவ­ரது ‘இமேஜை’ அடி­யோடு சரித்­து­விட்­டது. அத்­தோடு அவ­ருக்கு ஏற்­பட்ட உடல் நலக்­கு­றை­வும், கட்சி நிர்­வா­கி­கள் மற்­றும் தொண்­டர்­கள் மத்­தி­யில் ஒரு­வித அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி விட்­டது.

இந்த நேரத்­தில் கூட சாமர்த்­தி­ய­மான அர­சி­யல் அணு­கு­மு­றையை கடைப்­பி­டிக்­கத் தெரி­யா­மல் வறட்­டுப் பிடி­வா­தத்­து­டன் நடந்து கொண்டு கட்­சி­யின் எதிர்­கா­லத்தை அவர்­களே சீர­ழிக்­கி­றார்­களோ என்று கருத வேண்­டிய நிலை உரு­வா­கி­விட்­டது.

நடை­பெ­ற­வுள்ள நாடா­ளு­மன்ற பொதுத்­தேர்­த­லில் ஏதா­வது ஒரு கூட்­ட­ணி­யில் இணைந்து கிடைக்­கிற தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு, ஒன்­றி­ரண்டு  எம்.பி.க்களை­யா­வது டில்­லிக்கு அனுப்­பி­னால்­தான் தேமு­தி­க­வின் அர­சி­யல் எதிர்­கா­லத்­துக்கு ஓர­ளவு வெளிச்­சம் கிடைக்­கும். இல்­லை­யேல் இந்த தேர்­த­லோடு அக்­கட்சி மக்­க­ளால் முற்­றா­கப் புறக்­க­ணிக்­கப்­பட்டு விடும்.

அர­சி­யல் உறு­திப்­பாடு தெளி­வான பார்வை, சரி­யான நோக்­கம், காலச்­சூ­ழ­லுக்கு ஏற்ற கணிப்பு இவை இல்­லா­மல் ஒரு கட்சி நீண்ட காலம் செயல்­பட முடி­யாது, வெற்­றிப்­பா­தை­யில் பய­ணிக்க முடி­யாது, எல்­லா­வற்­றுக்­கும் மேலாக நம்­ப­கத்­தன்மை என்­பது மிக மிக அவ­சி­யம். ஆனால், இப்­போது ஒரே நேரத்­தில் அதி­முக மற்­றும் திமு­க­வு­டன் பேச்­சுக்­கள் நடத்­து­வது இரு அணி­யி­ன­ரி­ட­மும், நம்­ப­கத் தன்­மையை குலைத்து விட்­டது. தொண்­டர்­கள், பொது­மக்­கள் மற்­றும் ஊட­கங்­கள் மத்­தி­யி­லும் கேலிக்­கு­ரி­ய­தாகி விட்­டது.

இந்த வாரத்­திற்­குள் தேமு­திக எடுக்­கும் முடிவை பொறுத்தே எதிர்­கா­லத்­தில் தேமு­திக தேறுமுா? என்­பது தெளி­வா­கும்.