மோரிக்கில் செல்வாக்கு செலுத்தும் பர்மா தமிழர்கள்

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2019
சிறு வய­தில் இருந்தே மோக­னுக்கு இரண்டு ஆசை­கள்­தான். ஒன்று லண்­ட­னுக்கு செல்ல வேண்­டும். இரண்­டா­வது பர்­மா­வில் உள்ள அவர்­க­ளது பூர்­விக வீட்­டிற்கு செல்ல வேண்­டும் என்­பது தான். பர்மா தற்­போது மியான்­மர் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இந்த இரண்டு ஆசை­க­ளில் ஒரு ஆசை சென்ற டிசம்­பர் 23ம் தேதி நிறை­வே­றி­யது. முன்பு ரங்­கூன் என்று அழைக்­கப்­பட்ட நக­ரம் தற்­போது யாங்­கூன் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது . இந்த நக­ரில் இருந்து வட கிழக்கே 100 கி.மீட்­டர் தொலை­வில் உள்ள கிரா­மம் பாகோ. இந்த கிரா­மத்­திற்கு மோகன் சென்று, அவ­ரது தாயார் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்­தார். “இது எனது வாழ்­நா­ளில் மறக்­க­மு­டி­யாத நாள். அந்த வீட்டை பின்­பு­ல­மாக வைத்து செல்பி எடுத்­துக் கொண்­டேன். எனது பேஸ்­புக்­கில் பதி­வேற்­றம் செய்­தேன்” என்­கின்­றார் 40 வய­தான மோகன். தமிழ்­நாட்­டில் இருந்து பாத்­தி­ரங்­களை வாங்கி மியான்­ம­ருக்கு ஏற்­று­மதி செய்து வரு­கி­றார்.

ஐந்து மொழி­களை சர­ள­மாக பேசும் தமி­ழ­ரான மோகன், மணிப்­பூர் மாநி­லத்­தில் இந்­தி­ய–­மி­யான்­மர் எல்லை அருகே உள்ள மோரிக் என்ற  சிற்­றூ­ரில் பிறந்து வளர்ந்­த­வர். இந்த சிற்­றூ­ரில் தமி­ழர்­கள் நடத்­தும் இட்லி கடை, மணிப்­பூர் வாசி­கள் நடத்­தும் ஹோட்­டல், பிகா­ரில் இருந்து குடி­யே­றி­ய­வர்­கள் நடத்­தும் உள்­ளூர் தயா­ரிப்பு மது­பா­னம், சீனா­வின் மது­பா­னங்­களை விற்­பனை செய்­யும் கடை­கள் வரி­சை­யாக உள்­ளன.

மோக­னின் முன்­னோர்­கள் மியான்­ம­ரைச் (பர்மா) சேர்ந்­த­வர்­கள். 1962ல் ராணு­வம் மியான்­ம­ரில் ஆட்­சியை கைப்­பற்­றிய பிறகு, அவ­ரது தாய், தந்தை அன்­றைய பர்­மா­வில் இருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டார்­கள். அவ­ரது முன்­னோர்­க­ளின் நாடான மியான்­மர் எல்லை அருகே உள்ள மோரிக்­கில் மோகன் பிறந்து வளர்ந்­தா­லும், அவ­ரது தாய், தந்தை பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க வேண்­டும் என்ற அவ­ரது ஆசை நிறை­வேற பல ஆண்­டு­க­ளா­னது. ஏனெ­னில் மோரிக் எல்லை வழி­யாக சாலை மார்க்­க­மாக மியான்­மர் செல்­வ­தற்கு கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் இருந்­தன. இந்­தி­யர்­கள் மியான்­மர் தூத­ர­கங்­க­ளில் விசா பெறு­வது மட்­டு­மல்­லா­மல், சிறப்பு அனு­ம­தி­யும் பெற­வேண்­டும். இத­னால் மியான்­ம­ருக்கு  செல்ல வேண்­டும் எனில் விமா­னம் மூலம் யாங்­கூன் சென்று, அங்­கி­ருந்து வேறு இடங்­க­ளுக்கு செல்ல வேண்­டும். “நான் கொல்­கத்தா சென்று, அங்­கி­ருந்து விமா­னம் மூலம் யாங்­கூன் செல்ல வேண்­டும். என்­னைப் போன்ற சாதா­ரண மனி­தர்­க­ளால் இது எப்­படி சாத்­தி­யம்? என்று கேட்­கின்­றார் மோகன்.

2018, ஆகஸ்­டில் நிலைமை மாறி­யது. இந்­தி­யா­வில் இருந்து எல்லை பகுதி வழி­யாக சாலை மார்க்­க­மாக செல்ல மியான்­மர் அரசு அனு­மதி வழங்­கி­யது. மோரிக்கை அங்­கீ­கா­ரம் பெற்ற நுழைவு வாயி­லாக (சுங்­கச்­சா­வடி) அறி­வித்­தது. இத­னால் மோரிக் எல்லை சாவடி வழி­யாக மியான்­மர் நாட்­டிற்­குள் நுழைந்து, அங்­கி­ருந்து அந்­நாட்­டின் எந்த இடத்­திற்­கும் பஸ்­சில் செல்­லும் வசதி ஏற்­பட்­டது. “மோரிக்­கில் வாழும் எல்லா தமி­ழர்­க­ளுக்­கும் இது மறக்க முடி­யாத நாள். நாங்­கள் அனை­வ­ரும் எங்­கள் வாழ்­நா­ளில் ஒரு முறை­யா­வது பர்­மா­வுக்கு சென்று, நமது மூதா­தை­யர்­கள் வாழ்ந்த இடத்தை பார்க்க வேண்­டும் என்று கனவு கண்­டோம். இது இறு­தி­யில் நன­வா­கி­யுள்­ளது” என்று மகிழ்ச்­சி­யு­டன் கூறு­கி­றார் மோகன்.

மோரிக் எல்லை சாவடி திறந்து இருப்­பது, இந்த சிற்­றூ­ரில் வாழும் தமி­ழர்­கள், இவ்­வ­ளவு கால­மும் மறக்க முடி­யா­மல் இருக்­கும் பழைய உற­வு­களை புதுப்­பித்­துக் கொள்­வ­தற்கு உத­வும். மோகன் தாய்,தந்­தை­யர் போல், இங்­குள்ள தமி­ழர்­கள் 1960ல் விரட்­டப்­ப­டு­வ­தற்கு முன் பல தலை­மு­றை­க­ளாக பர்­மா­வில் வாழ்ந்­த­வர்­கள்.

19ம் நூற்­றாண்­டில் பிரிட்­டிஷ் ஆட்­சி­யின் கீழ் இருந்த பர்­மா­வுக்கு தமி­ழர்­கள் உட்­பட இந்­தி­யா­வில் பல மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் குடி­யே­றி­னர். அரசு வேலை, துறை­மு­கங்­களை கையா­ளு­தல் போன்ற வேலைக்­காக சென்­ற­னர். அத்­து­டன் பிழைப்பு தேடி­யும் பர்­மா­வுக்கு சென்­ற­னர். இரண்­டாம் உல­கப்­போ­ரின் போது, ஜப்­பா­னி­யர்­கள் ரங்­கூன் மீது குண்டு போட்­ட­னர். பிரிட்­டிஷ் படை­கள் பர்­மா­வில் இருந்து வெளி­யே­றின. பர்­மா­வில் வாழ்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான இந்­தி­யர்­கள் உயிர் பயத்­தில் கால்­ந­டை­யா­கவே பர்­மா­வில் இருந்து எல்லை மாநி­ல­மான மணிப்­பூ­ரில் தஞ்­சம் அடைந்­த­னர்.

இரண்­டாம் உல­கப்­போர் முடி­வ­டைந்­தது. அன்­றைய பர்மா 1948ல் சுதந்­தி­ரம் அடைந்­தது. ஆனால் அங்கு வாழ்ந்த தமி­ழர்­கள் உட்­பட இந்­திய சமூ­கத்­தி­ன­ருக்கு ஆபத்து வில­க­வில்லை. பர்மா நிர்­வா­கம் இந்­திய வம்­சா­வ­ழி­யி­னரை திட்­ட­மிட்டு புறக்­க­ணித்த்து. அவர்­க­ளின் இனத்தை வைத்து குடி­யு­ரிமை மறுத்­தது. இத­னால் ஆயி­ரக்­க­ணக்­கான இந்­திய வம்­சா­வ­ழி­யி­னர் அவர்­க­ளின் மூதா­தை­யர் நாடான இந்­தி­யா­வுக்கு திரும்ப வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டது.

1960ல் ஆட்­சியை கைப்­பற்­றிய சர்­வா­தி­காரி ‘நி வின்’, இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக செயல்­பட்­டார். அவர்­க­ளது தொழில், வர்த்­த­கம், சொத்­துக்­களை தேசிய உடமை ஆக்­கி­னார். அது­வரை கணி­ச­மாக இருந்த இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை நாட்டை விட்டு துரத்­தி­னார். 1962 முதல் 1964 வரை­யி­லான இரண்டு வரு­டத்­தில் மூன்று லட்­சத்­திற்­கும் அதி­க­மான இந்­திய வம்­சா­வ­ளி­ யி­னர் நிர்ப்­பந்­த­மாக பர்­மாவை விட்டு வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

பர்மா ராணு­வம் வெளி­யேற்­றிய இந்­தி­யர்­களை அழைத்து வர இந்­திய அரசு கப்­பல் அனுப்­பி­யது. அப்­படி வந்­த­வர்­க­ளில் குவாஜா மொய்­னு­தீன் குடும்­ப­மும் ஒன்று. அவர்­கள் வந்த கப்­பல் சென்னை துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. திருச்­சி­யில் அக­தி­கள் முகா­மில் சில வரு­டம் மொய்­தீன் குடும்­பம் வாழ்ந்­தது. “எனது தாத்தா உட்­பட பர்­மா­வில் இருந்து வந்­த­வர்­க­ளுக்கு திருச்­சி­யில் உணவு, வாழ்க்கை முறை ஒத்­துப்­போ­க­வில்லை. பர்­மா­வு­டன் ஒப்­பி­டு­கை­யில் அனைத்­தும் வித்­தி­யா­ச­மாக இருந்­தது. எனவே அவர்­கள் மீண்­டும் பர்­மா­வுக்கு திரும்பி போக முடிவு செய்­த­னர். இந்த முறை மோரிக் வழி­யாக சாலை மார்க்­க­மாக திரும்பி செல்ல முயற்சி செய்­த­னர். ஆனால் பர்மா ராணு­வத்­தால் மோரிக்­கில் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­னர் என்று மொய்­தீன் தெரி­வித்­தார். அப்­போ­தி­ருந்து மொய்­தீன் குடும்­பம் மோரிக்­கில் வாழ்ந்து வரு­கி­றது.

50 வரு­டங்­க­ளுக்கு முன் தாங்­கள் தடுத்து நிறுத்­தப்­பட்ட மோரிக் எல்லை சாவடி திறக்­கப்­பட்­டது என்­பதை கேள்­விப்­பட்ட மொய்­தீன் பெற்­றோர், தாங்­கள் வாழ்ந்த இடத்­திற்கு அழைத்­துச் செல்­லும்­படி வற்­புத்த தொடங்­கி­னார்­கள். “அவர்­க­ளுக்கு வய­தா­கி­விட்­டது. அவர்­கள் வாழ்ந்த் வீட்டை பார்க்க வேண்­டும் என்­கின்­ற­னர்” என்று கூறு­கி­றார் மொய்­தீன்.  

மோரிக்­கில் 20 ஆயி­ரம் பேர் வாழ்­கின்­ற­னர். குகிஸ்,மணிப்­பூரி மொயி­டிஸ் உட்­பட பத்­திற்­கும் மேற்­பட்ட பழங்­கு­டி­யின மக்­கள் வாழ்­கின்­ற­னர். இவர்­க­ளு­டன் 3000 தமி­ழர்­கள் வாழ்­கின்­ற­னர். தமி­ழர்­க­ளில் இந்து, முஸ்­லீம்­கள் அடக்­கம். இந்த ஊரில் வாழ்­ப­வர்­கள் குறைந்­தது மூன்று மொழி­க­ளுக்கு மேல் பேசு­கின்­ற­னர். பேசிக் கொண்டு இருக்­கும் போதே, ஒரு மொழி­யில் இருந்து வேறு மொழிக்­கும் மாறு­கின்­ற­னர்.

தற்­போது மோரிக்­கில் தமி­ழர்­கள் சிறு­பான்­மை­யி­ன­ராக உள்­ள­னர். 1990 வரை பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்­த­னர் என்று மோரிக்­வாசி கூறு­கின்­றார். மோரிக்­கில் வாழும் தமி­ழர்­கள் அனை­வ­ருமே பர்­மா­வில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­வர்­களே. முத­லில் தமிழ்­நாட்­டில் குடி­யேறி அங்கு வாழ முடி­யா­மல் பிறகு அங்­கி­ருந்து மோரிக்­கில் குடி­யே­றி­ய­வர்­கள். “பர்­மா­வுக்கு திரும்பி போகவே, எங்­கள் ஆட்­கள் மோரிக்­கிற்கு வந்­த­னர். அவர்­க­ளால் செல்ல முடி­ய­வில்லை. மோரிக்­கி­லேயே தங்கி விட்­ட­னர். அதே நேரத்­தில் மோரிக்­கில் வேலை, படிப்­ப­தற்கு போதிய வாய்ப்பு இல்­லாத கார­ணத்­தால், 90ம் ஆண்­டு­க­ளில் பலர் தமிழ்­நாட்­டிற்கு திரும்பி சென்­ற­னர்” என்று மோகன் விளக்­கி­னார்.

மோரிக்­கில் வாழும் தமி­ழர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­தா­லும், அவர்­கள் செல்­வாக்­கா­ன­வர்­க­ளாக உள்­ள­னர். வர்த்­த­கத்­தில் தமி­ழர்­கள் கோலோச்­சு­கின்­ற­னர். வர்த்­த­கம் பெரும்­பா­லும் அறி­மு­க­மா­ன­வர்­கள், நம்­பிக்கை அடிப்­ப­டை­யில் நடக்­கின்­றது. மோரிக் நகர வர்த்­தக சங்­கத்­தின் தக­வல்­படி வரு­டத்­திற்கு ரூ.50 கோடி வரை வர்த்­த­கம் நடை­பெ­று­கி­றது. மியான்­ம­ரில் இருந்து எல்லை சாவடி வழி­யாக இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் தேக்கு மரத்­தில் இருந்து தயா­ரிக்­கும் மேஜை, நாற்­காலி போன்ற மர சாமான்­கள் வியா­பா­ரத்­தில் முன்­ன­னி­யில் உள்­ள­னர்.

மோரிக் நக­ரத்­தின் செல்­வாக்கு பெற்ற வர்த்­தக சங்­க­மான “பார்­டர் டிரேட் அண்ட் சேம்­பர் ஆப் காமர்ஸ்” அமைப்­பில் தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக உள்­ள­னர். இதன் தலை­வ­ராக உள்ள வி.சேகர், இந்த நக­ரத்­தில் அதி­கா­ர­மை­யத்­தின் தலை­வ­ராக உள்­ளார். அவரே மோரிக் தமிழ் சங்­கத்­திற்­கும் தலை­வ­ரா­க­வும் உள்­ளார். தற்­போது மோரிக்­கில் சேகர் நிரந்­த­ர­மாக வாழ­வில்லை. அவ்­வப்­போது வந்து செல்­கி­றார். அவ­ரின் செல்­வாக்கு குறை­ய­வில்லை. பர்மா தேக்­கில் செய்த நாற்­காலி, மேஜை போன்ற மர சாமான்­களை விற்­பனை செய்­யும் அப்­துல் கபார் கூறு­கை­யில், “மோரிக்­கில் சேகர் அண்­ணாவை விட செல்­வாக்­கா­ன­வர் யாரும் இல்லை” என்று கூறு­கின்­றார்.

மோரிக்­கில் உள்ள உள்­ளூர் தீவி­ர­வா­தி­கள், பிரி­வி­னை­வா­தி­கள், இந்த எல்லை புற நக­ரத்­தின் வர்த்­த­கத்­தை­யும், குறிப்­பாக போதை பொருட்­கள் வர்த்­த­கம் நடை­பெ­றும் நிலை­யில் தங்­கள் கட்­டுப்­பாட்­டில் கொண்டு வரும் முயற்­சி­யில் பல ஆண்­டு­க­ளாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இருப்­பி­னும் சேகர் கட்­டுப்­பாட்­டில் நீடிக்­கி­றது. எல்­லைக்கு அந்த புறத்­தில் உள்ள மியான்­ம­ரு­டன் வர்த்­த­கம் செய்ய வேண்­டும் எனில் சேக­ரின் தயவு தேவை. தனது பெயரை குறிப்­பிட விரும்­பாத குகி சமூ­தாய தலை­வர் கூறு­கை­யில், சேக­ரின் அனு­மதி இல்­லா­மல் மோரிக்­கில் பெரிய அளவு வியா­பா­ரம் செய்ய முடி­யாது” என்று கூறி­னார். 1990ல் நேஷ­னல் சோஷ­லிஸ்ட் கவுன்­சில் ஆப் நாகா­லாந்து (ஐசக்–­மு­வாக்) பதா­கை­யின் கீழ் டங்­குல் நாகஸ் என்ற பிரி­வி­னர், குகிஸ்,மணிப்­பூரி மொயி­டிஸ் ஆதிக்­கத்­தில் இருந்து மோரிக் சிற்­றூரை கைப்­பற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். பல ஆண்­டு­கள் நடை­பெற்ற போராட்­டத்­தால் பலர் ரத்­தம் சிந்­தி­னர். இறு­தி­யில் குகிஸ் இனத்­த­வ­ரின் கையே ஒங்­கி­யது. குகிஸ் நேஷ­னல் ஆர்­க­னை­சே­சி­சன், இதன் ஆயு­தம் ஏந்­திய பிரி­வான குகிஸ் நேஷ­னல் ஆர்மி ஆகி­யோர் கடு­மை­யாக போரா­டி­னார்­கள். அப்­போ­தி­ருந்து மோரிக் குகிஸ் இனத்­த­வ­ரின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது. அதே நேரத்­தில் எல்­லைக்கு அந்த புறத்­தில் இருந்து (மியான்­மர்) மொயி­டிஸ் இனத்­த­வர்­க­ளும் முகாம்­க­ளில் இருந்து அதி­கா­ரம் செலுத்த முயற்­சிக்­கின்­ற­னர். இருப்­பி­னும் சேகர் மோரிக் நகர வர்த்­த­கத்­தில் தனது செல்­வாக்கை இழக்­க­வில்லை.

1990ல் குகி–­நாகா இனத்­த­வர்­க­ளுக்கு இடையே நடை­பெற்ற மோத­லில் முன்­ன­ணி­யில் இருந்த ஐக்­கிய நாகா கவு­ன­சில் தலை­வர் கூறு­கை­யில், மோரிக் நக­ரின் அர­சர் சேகர். அவர் எல்லா ஆயு­த­மேந்­திய தீவி­ர­வா­தி­கள், பிரி­வி­னை­வா­தி­க­ளை­யும், ராணு­வத்­தை­யும் சமா­ளித்து வரு­கி­றார்” என்று தெரி­வித்­தார்.

இந்த வரு­டம் மோரிக்­கில் வாழும் தமி­ழர்­கள் கொண்­டா­டிய பொங்­கல் விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக சேகர் கலந்து கொண்­டார். மோரிக்­கில் வாழும் தமி­ழர்­கள் பலர் மியான்­மர் மீது பற்று கொண்­டுள்­ள­னர். ஆனால் பல ஆண்­டு­க­ளாக வாழும் மோரிக்கை, தங்­க­ளின் தாய­க­மாக கரு­து­கின்­ற­னர். இந்த பகு­தி­யில் தமி­ழர்­க­ளின் இளை­ஞர் சங்­கம் நன்கு செயல்­பட்டு கொண்­டுள்­ளது. இளை­ஞர் சங்­கம் சார்­பில் விளை­யாட்டு போட்­டி­கள், கலாச்­சார நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. மோரிக்­கில் தமி­ழர்­கள் நடத்­தும் தீ மிதி திரு­விழா புகழ்­பெற்­றது. இந்த திரு­வி­ழா­வில் எல்லா இன மக்­க­ளும் பெரு­ம­ள­வில் பங்­கேற்­கின்­ற­னர்.

2000ம் ஆண்­டு­க­ளில் தமிழ் சங்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தமிழ்­நாட்­டில் இருந்து கொத்­த­னார் போன்­ற­வர்­களை அழைத்து வந்து ஸ்ரீ அங்­கா­ள­ப­ர­மேஸ்­வரி ஆல­யத்தை கட்­டி­னார்­கள். இது வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளில் குறிப்­பி­டும்­ப­டி­யான கோயி­லாக உள்­ளது. இந்த கோயி­லுக்கு இந்­தி­யா­வில் இருந்து மட்­டு­மல்­லா­மல்,. மியான்­ம­ரில் இருந்­தும் பக்­தர்­கள் வரு­கின்­ற­னர்.

இப்­போது மியான்­ம­ருக்கு செல்ல எல்லை சாவடி திறக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­கள் அவர்­கள் மன­தில் நீங்­காத இடம் பெற்­றுள்ள பூர்­விக நாடான மியான்­ம­ருக்கு (பர்­மா­வுக்கு) செல்­லும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. சமீ­பத்­தில் எல்லை சாவ­டியை கடந்து சாலை மார்க்­க­மாக யங்­கூன் (ரங்­கூன்) சென்று வந்த தமிழ்­சங்க கல்வி பிரிவு செய­லா­ள­ரான எஸ்.எம்.கணே­சன், தான் பிறந்த ஊரை பார்த்து திரும்­பி­யுள்­ளார். அவர் கூறு­கை­யில் “நான் அங்கு சுற்­று­லா­ப­ய­ணி­யாக சென்­றேன். சிறு குழந்­தை­யாக இருந்த போது பிரிந்த பின், தற்­போ­து­தான் அங்கு எனது உற­வி­னர்­களை முதன் முறை­யாக சந்­தித்­தேன். அங்கு இயற்கை சுழல் நன்­றாக உள்­ளது. ஒவ்­வொன்­றும் சிறப்­பாக இருக்­கின்­றது” என்று கூறி­னார்.          

நன்றி: ஸ்கோரல் டாட் இன் இணைய தளத்­தில் கட்­டுரை, போட்டோ அரு­ணாப் சைகா.