திருப்புமுனை கொடுத்த சீரியல்! – விந்துஜா விக்ரமன்

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2019

* ‘‘கண்மணி’’யில் ‘வளர்மதி’யாக பவனி வருபவர் விந்துஜா விக்ரமன்.

* அவர் நடிக்கும் முதல் தமிழ் சீரியல் இதுதான்.

* அவருக்கு பூர்வீகம், திருவனந்தபுரம்.

* அங்கே கொடுங்கனூரிலுள்ள பாரதீய வித்யா பவனில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

* அப்பா (விக்ரமன் வி. நாயர்), அம்மா, தம்பி (விவேக்) ஆகியோருடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

* மலையாளம் தவிர ஆங்கில மொழி தெரியும்.

* தமிழ்? சேச்சி ‘குறைச்சு’ அறியும்.

* அவர் முதன்முதலில் நடித்தது ‘‘சர்வோபரி பாலக்காரன்’’ மலையாள படத்தில்.

* அதன்பின், பல வாய்ப்புகள் மலையாள சீரியல்களிலிருந்து அவருக்கு வந்தன.

* ‘‘ஆத்ம சகி’’ (மழவில் மனோரமா), ‘‘காளி கந்தகி’’ (அம்ரிதா டிவி), ‘‘சந்தனமழா’’ (ஏஷியாநெட்) போன்ற மலையாள சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

* இவற்றில் ‘‘சந்தனமழா’’ அவருக்கு மிகவும் திருப்புமுனையை தந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த மேக்னா வின்சென்ட் தனது திருமணத்தை முன்னிட்டு சீரியலை விட்டு வெளியேற,  அந்த கேரக்டர் அதிர்ஷ்டவசமாக விந்துஜாவுக்கு சென்றடைந்தது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையாக இருந்தது.

* கிரிஹலட்சுமி பேஸ் ஆப் கேரளா 2016 போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

* சில மியூசிக் ஆல்பங்களிலும் நடித்திருக்கிறார்.

* ‘ஒண்ணும் ஒண்ணும் மூணு’ டிவி நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார்.

* இசை கேட்க மிகவும் பிடிக்கும்.

  – வா. முனீஸ்­வரி