வந்துவிட்டது மைக்ரோசாப்ட் ஹோலோ லென்ஸ் - 2

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2019

இதன் விலை, 2.5 லட்சம் ரூபாய். இன்னும் பரவலாக கிடைக்கவில்லை. இருந்தும், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள ஹோலோ லென்ஸ் - 2 என்ற தலை அணி கருவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும் மெய்நிகர் மற்றும், ‘ஆக்மென்டெட் ரியாலிட்டி’ எனப்படும் மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் ஆகிய, இரு தொழில்நுட்பங்களைக் கலந்தது தான் ஹோலோ லென்ஸ் - 2. ஏற்கனவே, 2015ல் வெளியிடப்பட்ட ஹோலோ லென்சில் இருந்த குறைகளை நீக்கி, பல புதிய வசதிகளுடன் வந்திருக்கிறது இரண்டாம் பதிப்பு. கண்ணாடி போல அணிந்துகொள்ளும் இக்கருவி, கண் விழிகள், கை விரல்களின் அசைவுகளை துல்லியமாக அறிந்து செயல்படக்கூடியது. இதை அணிபவரின் கண்களுக்கு முன்னே திரை இல்லாமலே காட்சிகள் முப்பரிமாணத்தில் விரியும்.

இதை மற்றவர்கள் பார்க்க முடியாது. தொழில்துறைக்கான வடிவமைப்பு, தொலைதுார இயக்கம் போன்ற பல இடங்களில், ஹோலோ லென்ஸ் பயன்படும் என்கிறது மைக்ரோசாப்ட். இது நம்மை போன்றவர்களுக்கானது இல்லை என்பது மட்டும் புரிகிறது.