உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

பதிவு செய்த நாள் : 27 பிப்ரவரி 2019 18:52

புது டில்லி,

   உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு பிரிவில் இந்திய வீரர்கள் மனு பாகர், சவுரப் சவுத்ரி இணை தங்கம் வென்றனர்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி டில்லியில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடக்கிறது.

இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையா் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த மானு பாகார், சவுரவ் சவுத்ரி இணை பங்கேற்றது.

இந்த போட்டியில் இந்தியா அதிக புள்ளிகளை கைப்பற்றி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது முன்னதாக பெண்களுக்கான 10 மீட்டா் ஏா் ரைபில் பிரிவில் அபுா்வி சந்தெலா தங்கப்பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது