'டுவென்டி-20': ஆஸ்திரேலியா வெற்றி

பதிவு செய்த நாள் : 25 பிப்ரவரி 2019 00:40


விசாகப்பட்டனம்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 'டுவென்டி-20' போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டனத்தில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணியில்  மார்கண்டே அறிமுகம் ஆனார். இதே போல் ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் அறிமுகமானார். இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு ஓய்வு தரப்பட்டதால், லோகேஷ் ராகுல் இடம் பிடித்தார். தமிழக 'ஆல்-ரவுண்டர்' விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்படவில்லை. சுழற்பந்துவீச்சாளர் மயாங்க் மார்கண்டே அறிமுக வாய்ப்பு பெற்றார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக உமேஷ் யாதவ் தேர்வானார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் துவக்கம் தந்தனர். ஜேசன் பெரேன்டோர்ப் 'வேகத்தில்' ரோகித் (5) வெளியேறினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் அசத்தினார். இவர் ஜெயே ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் பவுண்டரி விளாசினார். கேப்டன் கோஹ்லி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷாப் பன்ட் (3) ரன் அவுட்டானார். ராகுல் (50) அரை சதம் எட்டினார். கூல்டர் நைல் 'வேகத்தில்' தினேஷ் கார்த்திக் (1), குர்னால் பாண்ட்யா (1) சிக்கினர். உமேஷ் இரண்டு ரன்களில் திரும்பினார். தோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. தோனி (29), சகால் (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கூல்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 127 ரன் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டாய்னிஸ் (1), கேப்டன் ஆரோன் பின்ச் (0) சொதப்னர். பின் இணைந்த ஷார்ட், மேக்ஸ்வெல் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். ஷார்ட் (37) பரிதபமாக ரன் அவுட் ஆனார். அதே நேரம் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 40 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 56 ரன் (43 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் சகால் சுழலி சிக்கினார். இதன் பின் ஹேண்ட்ஸ்கோம்ப் (13), டர்னர் (0), கூல்டர் நைல் (4), ஆட்டமிழந்தர். இருந்தும் முடிவில் ஆஸி., 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்ள எடுத்து வெற்றி பெற்றது. கம்மின்ஸ் (7), ரிச்சர்ட்சன் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் பும்ரா 3, சகால், குர்ணால் பாண்ட்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பவுலிங்கில் அசத்திய கூல்டர் நைல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படாடார். இந்த வெற்றியின் ம.ஙம் 2 போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆஸி., 1&0 என முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி பெங்களூருவில் வரும் 27ம் தேதி நடக்க உள்ளது.