ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2019 16:29

புதுடில்லி:

டில்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்

ஐ.எஸ்.எஸ்.எப் உலக துப்பாக்கிச் சுடும் போட்டி 20ம் தேதி முதல்  28ம் தேதி வரை டில்லியில் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில், இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா, 629.3 புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இறுதி சுற்றில் ஜெய்ப்பூரை சேர்ந்த அபூர்வி சந்தேலா 252.9 புள்ளிகள் பெற்று  உலக சாதனைப் படைத்து தங்கப் பதக்கதை வென்றார்.

வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர்.